தேவையான பொருட்கள்
உப்பில்லாத வெண்ணெய் - 100 கிராம்
வெல்லம் - 60 கிராம்
இனிப்பில்லாத கோவா - 120 கிராம்
பாதாம் - 300 கிராம்
நெய் - 90 கிராம்
'சீஸ்' - 50 கிராம்
செய்முறை
பாதாமை பொடித்துக் கொள்ளவும்.சர்க்கரை, வெண்ணெய் இரண்டையும், 'ஹேண்ட் பீட்டர்' அல்லது மரக் கரண்டியால், பஞ்சு போல வரும் வரை கலந்து கொள்ளவும். இந்த கலவையை, ஐந்து மணி நேரம் பிரீசரில் வைக்கவும்.
அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, நெய் சேர்த்து, பொடித்த பாதாமை சிவக்க வறுக்கவும். இத்துடன் கோவா சேர்த்து, கலவை இரண்டும் சேரும் வரை கிளறவும்.
இதை, 'டிரே'யில் சீராகப் பரப்பி, 180 டிகிரி செல்ஷியசில் சூடு செய்த ஓவனில், 20 நிமிடங்கள், 'பேக்' செய்யவும்.இதன் மேல் துருவிய சீஸ், நறுக்கிய பாதாம் பரப்பி, துண்டுகளாக்கி பரிமாறவும்.