சராசரியாக ஒரு வண்ணத்துப்பூச்சியின் ஆயுள், மூன்று வாரங்கள் மட்டுமே. சிறியவை, 10 நாட்கள் மட்டும் வாழும். சில, மூன்று மாதங்கள் வரை இருக்கும். பெரிய தோற்றம் கொண்டவை, அதிக நாட்களும், சிறியவை குறைந்த நாட்களும் வாழும். குளிர் பிரசேதங்களில் சில, ஆறு மாதங்கள் வரை உயிருடன் இருக்கும்.
கூட்டுப்புழு பருவம் கடந்து, வண்ணத்துப்பூச்சியாக பறக்கும் போது நல்ல நிறத்துடன் இருக்கும். வயதானால் நிறம் மங்கத்துவங்கும். எதிரியிடமிருந்து தப்ப முயலும்போது இறக்கைகளில் காயம் படுவதும் உண்டு. பறக்கும்போது, இலைகளில் உரசி இறக்கைகள் சேதம் அடைவதும் உண்டு. அந்த காயங்கள் சீரடைவதில்லை. மங்கிய நிறமும் திரும்பக் கிடைப்பதில்லை.
கூட்டுப்புழுவாக வளர்ச்சியடையும் காலத்தில், சில வண்ணத்துப்பூச்சிகளுக்கு மூன்று இறக்கைகள் மூளைப்பதுண்டு. சிலவற்றுக்கு, ருசி அறியும் கொம்புகள் மூன்றாக முளைக்கும்.
ஆண், பெண் இன்றி, மூன்றாம் பாலினமாக பிறப்பதும் உண்டு. இது போன்ற வண்ணத்துப்பூச்சியை, இந்தியாவில் விஞ்ஞானிகள் கண்டறிந்துனர். இவை, இனப்பெருக்கம் செய்வதில்லை. ஆயுளும் மிகக் குறைவு.