அமர்நாத்தும் அதிசய அத்தி சாகுபடியும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மார்
2021
00:00

படிப்பு வேறு வாழ்க்கை இலக்கு வேறு. படித்தபின் விவசாயத்தின் பக்கம் திசைமாறி இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த அமர்நாத். விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் உள்ள வெடத்தகுளத்தில் 53 ஏக்கரில் பழ, மரப்பயிர்களை சாகுபடி செய்துவரும் அமர்நாத்தின் பயணம் வித்தியாசமானது தான்.

படிச்சு வளர்ந்தது சென்னை. அப்பா அஞ்சையா கன்ஸ்ட்ரக் ஷன் பிசினஸ். பி.காம் படிக்கும் போதே விவசாயம் செய்ய நினைத்தேன். கூடவே தடுமாற்றமும் இருந்ததால் எம்.பி.ஏ படித்து முடித்தேன். அதன்பின் விவசாயம் தான் வாழ்க்கை என முடிவெடுத்தேன். என் முடிவுக்கு பெற்றோர் உறுதுணையாக இருந்தனர். விருதுநகரில் நிலம் வாங்கி கொடுத்தனர். ஆறாண்டுகளுக்கு முன்பாக விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். 13 ஏக்கரில் அத்தி மரம், 3 ஏக்கரில் டிராகன் பழம், 18 ஏக்கரில் மாமரம், மீதியுள்ள ஏக்கரில் கொய்யா சாகுபடி செய்தேன்.

முதலில் திம்லா அத்தியை முயற்சி செய்தேன். அது இங்கே வளரவில்லை. அடுத்து புனே ரகத்தை நட்டேன். சுவையாக இல்லை என்பதோடு காய் அளவும் சிறிதாக இருந்தது. 3வது முயற்சியாக மகாராஷ்டிராவில் இருந்து 'பிரவுன் டர்க்கி' ரக கன்றுகளை பயிரிட்டேன். மரத்துக்கு மரம் 11க்கு 7 அடி இடைவெளி இருந்தால் போதும். இங்கே தோட்டத்தில் 13க்கு 9 அடி இடைவெளியில் மொத்தம் 4400 செடிகள் நட்டேன். இதற்கு ஜனவரி, ஜூன் தான் சீசன். ஜூனில் துவங்கி அக்டோபர் வரை பழங்கள் கிடைக்கும்.

இயற்கை வேளாண் முறையில் தான் சாகுபடி செய்கிறேன். குப்பை, புங்கம் விதை புண்ணாக்கு, ஜீவாமிர்தம், பஞ்சகாவ்யம் என இங்கு தயாரித்து பயன்படுத்துகிறோம். மாடுகள் இருப்பதால் சாணத்திற்கு பஞ்சமில்லை. இங்கு தண்ணீர் குறைவு என்பதால் சொட்டு நீர்ப் பாசனம் அமைத்துள்ளேன்.

கன்று நட்ட எட்டாம் மாதத்தில் பலன் கிடைக்கும் என்றாலும் ஓராண்டு கழித்தே விளைச்சல் என்ற முறையில் அதிக பலன் கிடைக்கும். இது 20 ஆண்டு பயிர் என்பதால் தொடர்ந்து பராமரிப்பு செலவு மட்டும் தான். உள்ளூர் மார்க்கெட்டில் கிலோ ரூ.120க்கு எடுத்து செல்கின்றனர். செடிக்கு 6 கிலோ வீதம் 26 டன் பழங்கள் கிடைக்கின்றன.

டிராகன் பழமும் புதிய முயற்சி தான். 3 மாத கன்று, செடி வளர்வதற்கான கல்துாண் அமைக்க ஏக்கருக்கு ரூ.5 லட்சம் செலவானது. ஒரு கல்துாணில் நான்கு செடிகள் வீதம் 3 ஏக்கரில் நட்டுள்ளேன். மே மாதம் தான் சீசன். ஒரு கல்துாணுக்கு 8 கிலோ வீதம் ஏக்கருக்கு 4 டன் பழங்கள் கிடைக்கும். பழத்தின் தோலும் சிவப்பும் சதைப்பகுதியும் சிவப்பு என்பதால் மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். உள்ளூர் மார்க்கெட்டில் கிலோ ரூ.150 வரை போகிறது.

விவசாயத்தில் ஏதாவது ஒரு பிரச்னை என்றால் விஞ்ஞான ரீதியாக காரணங்களை ஆராய வேண்டும். அது இயற்கை விவசாயமாக இருந்தாலும் பிரச்னையை முழுமையாக சரிசெய்ய வேண்டும். எல்லோரும் செய்கிறார்களோ என நாமும் ஒரே பயிரையே சாகுபடி செய்யக்கூடாது. இதனால் உற்பத்தி அதிகரித்து வரவேற்பும் விலையும் குறைந்துவிடும் ஆபத்து உள்ளது. நீடித்த காலத்திற்கு எது சரியாக வருமோ அதையே பயிராக செய்தால் விவசாயமும் லாபம் தரும் தொழில் தான் என்றார். இவரிடம் பேச: 63802 92248.

- எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
02-ஏப்-202107:12:16 IST Report Abuse
NicoleThomson இவரது PRO செமயா வேலை செய்யிறாரு போல? சமீபத்தில் தான் வேறொரு aச்சு தளத்தில் இவரது செய்தி படித்தேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X