கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2011
00:00

கேள்வி: பேட்டரிகள், அவை காலாவதியான பின்னர், மிகக் கவனமாக டிஸ்போஸ் செய்யப்பட வேண்டும் என்று கூறுவது கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளுக்கும் பொருந்துமா? ஏன் இதில் கவனம் எடுக்க வேண்டும். அதனுடைய உயிர்தான் இல்லையே?
-என்.கே.குருதாஸ், அருப்புக் கோட்டை.
பதில்: இந்த பிரச்னையைப் பொதுவாக பேட்டரி என்ற வகையில் பார்க்கலாம். அது கம்ப்யூட்டரில் பயன்படும் பேட்டரிக்கும் பொருந்தும். பேட்டரி செயல் திறன் இழப்பது என்பது அதிலிருந்து மின்சக்தி இனி கிடைக்காது என்பதுதான். ஆனால் அதில் உள்ள இரசாயனப் பொருட்கள் மற்றும் காரீயப் பொருட்கள் அப்படியே உள்ளே இருக்கும். இவற்றில் சிறிய நெருப்புப் பொறி பட்டாலும், மிக வேகமாக தீ பிடிக்கும் தன்மை உடையவை. அவ்வாறு தீ பிடிக்கும் பட்சத்தில், அது சுற்றுப் புறச் சூழ்நிலைக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்து. எனவே பேட்டரி சக்தி தீர்ந்து போனால், அவற்றை சாதனங்களிலிருந்து நீக்கிவிடுங்கள். வெளியே டிஸ்போஸ் செய்திடும் வரை தனி பிளாஸ்டிக் பாக்கெட்டில் வைத்திடுங்கள்.

கேள்வி: கம்ப்யூட்டரில் நாம் காப்பி செய்திடும் டெக்ஸ்ட் மற்றும் படங்களுக்குக் கிளிப் போர்ட் மெமரி எனத் தனியே உண்டா? அதிகமாகக் காப்பி செய்து வைத்திருந்தால், நம் கம்ப்யூட்டர் செயல்படுவதில் சிரமம் இருக்குமா?
-மா.கிருஷ்ணன், மேலூர்
பதில்: நீங்கள் கேள்விப் பட்டது சரியே. “copy” அல்லது “cut” மூலம் ஒன்றைக் காப்பி செய்தால், அது கிளிப் போர்டுக்குச் செல்லும். இந்த மேட்டர் ராம் மெமரி யில் தான் தற்காலிகமாக வைத்துக் கொள்ளப்படும். எனவே அதிகமான எம்பி உள்ள டெக்ஸ்ட் அல்லது படம் காப்பி செய்யப் படுகையில், ராம் மெமரி இடம் எடுத்துக் கொள்ளப்படுவதால், கம்ப்யூட்டரின் மற்ற செயல்பாடுளில் அது தாமதத்தையோ, செயல்பாட்டில் பிரச்னையையோ ஏற்படுத்தலாம். எனவே காப்பி செய்து வைத்திடும் பெரிய மேட்டருக்குப் பதிலாகச் சிறிய, மிகச் சிறிய சொல் அல்லது வரி ஒன்றைக் காப்பி செய்துவிட்டால், ராம் மெமரி இடம் மற்ற செயல்பாடுகளுக்குக் கிடைக்கும்.

கேள்வி: ஈதர்நெட் என அழைக்கப்படுவது எது? ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் இது கட்டாயம் இருக்க வேண்டுமா? கம்ப்யூட்டரை வாங்கும்போது இதற்கென கூடுதல் விலை தர வேண்டுமா?
-என். கபீரியல், புதுச்சேரி.
பதில்: கம்ப்யூட்டர் ஒன்றை நெட்வொர்க் கில் இணைத்துச் செயலாற்ற, ஈதர்நெட் இணைப்பு தேவை. இப்போது வடிவமைக்கப்படும் கம்ப்யூட்டர் அனைத்திலும் இவை தரப்படுகின்றன. இதற்கென தனியே கூடுதல் விலை செலுத்த வேண்டியதில்லை. கம்ப்யூட்டரின் பின்புறம் பார்த்தால் போன் ஜாக்கெட்டைக் காட்டிலும் சற்று அகண்டதாக இது இருக்கும். இந்த போர்ட் மூலம் ஒரு கம்ப்யூட்டரை இன்னொரு கம்ப்யூட்டருடன், மோடத்துடன், ரௌட்டருடன், லோக்கல் நெட்வொர்க் குடன் இணைக்கலாம்.

கேள்வி: மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் குறித்து நீங்கள் எழுதியதைப் படித்தேன். இதனை எந்த முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம் என்ற தகவலைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-கா. தர்மர், சிவகாசி.
பதில்: நல்ல கேள்வி. மைக்ரோசாப்ட் வழங்கும் இந்த புரோகிராம் தொகுப்பு நம் கம்ப்யூட்டருக்குத் தேவையான ஒன்றாகும். இதனை http://www.microsoft.com/enus/default.aspx என்ற முகவரியிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதே தளத்தில் Windows Internet Explorer 8, Windows Upgrade Advisor, Windows XP Service Pack 3, Office Compatibility Pack, Microsoft Silverlight plugin ஆகியவையும் கிடைக்கும்.

கேள்வி: டாகிள் கீ என்பது என்ன? அனைத்து கீகளுமே டாகிள் கீகள் தானா? இவற்றின் சிறப்பு பயன்பாடு என்ன?
-து. வின்சென்ட் பிரபு, மதுரை.
பதில்: ஒரு இயக்கத்தைச் செயல்படுத்து வதனையும், நிறுத்துவதனையும் ஒரே கீ செயல்படுத்தினால், அது டாகிள் (Toggle) கீ என அழைக்கப்படும். எடுத்துக்காட்டாக, கேப்ஸ் லாக் கீ. நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் மூன்று டாகிள் கீகள் உள்ளன. கேப்ஸ் லாக் (Caps Lock), நம் லாக், மற்றும் ஸ்குரோல் லாக் (Scroll Lock). இவற்றில் அதிகம் பயன்படுத்தாத டாகிள் கீ ஸ்குரோல் லாக் கீ தான். இப்போது வரும் புதிய சாப்ட்வேர் தொகுப்புகள் இதனைப் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படுவதில்லை. ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எக்ஸெல் தொகுப்பில் இதனைப் பயன்படுத்தலாம். எக்ஸெல் தொகுப்பில், ஸ்குரோல் லாக் கீ ஆப் செய்யப்பட்டிருக்கையில், செல்களுக் கிடையே அம்புக் குறி கீகள் மூலம் செல்லலாம். ஸ்குரோல் லாக் ஆன் செய்யப் படுகையில், எக்ஸெல் முழுப் பக்கத்தினையும், நம்பர் பேடில் உள்ள ஆரோ கீகளைக் கொண்டு மேலும் கீழும் செல்லலாம். செல்கள் அதே இடத்திலேயே இருக்கும். அவை உங்களுடன் முன்னும் பின்னும் வராது.

கேள்வி: நான் வேர்ட் 2003 மற்றும் வேர்ட் 2007 பயன்படுத்தி வருகிறேன். 2007 வேர்ட் பதிப்பில் ரிப்பனில் முழு மெனு கிடைக்கிறது. வேர்ட் 2003 பைல் மெனுவில் சிறிய மெனு மட்டுமே விரிகிறது. பின் கீழாக உள்ள சிறிய முக்கோண அடையாளத்தில் கிளிக் செய்தால் மட்டுமே முழு மெனுவும் கிடைக்கிறது. முழுவதும் ஏன் முதல் முயற்சியில் கிடைக்கவில்லை?
-க. உஷா ரவி, தேனி.
பதில்: வேர்ட் 2003 இன்ஸ்டால் செய்தவுடன் இவ்வாறு தான் கிடைக்கும். இதனை சில செட்டிங்ஸ் மூலம் மாற்றி, முழு மெனுவும் கிடைக்கும்படி செய்திடலாம். Tools மெனு திறந்து Customize தேர்ந்தெடுக்கவும். கஸ்டமைஸ் டயலாக் பாக்ஸில் Optimize என்ற டேப்பினைக் கிளிக் செய்திடவும். இப்போது ஆப்டிமைஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் Options என்ற டேப்பைக் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவினைப் பார்க்கவும். இங்கு “Always show full menu” என்று ஒரு ஆப்ஷன் தரப்பட்டிருக்கும். இதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தி பின் Close அழுத்தி பின் ஓகே கிளிக் செய்து ஒவ்வொரு விண்டோவாக மூடவும். இனி முழு மெனுவும் உங்களுக்குக் கிடைக்கும். வேர்ட் 2007ல் உள்ள மெனு ரிப்பன் ஆப்ஷன் பட்டியலில் இந்த தொந்தரவு எதுவும் இல்லை. உள்ள மெனு ரிப்பன் ஆப்ஷன் இந்த தொந்தரவு எதுவும் தரவில்லை.

கேள்வி: டெரா காப்பி என்ற வசதியை எங்கிருந்து பெறலாம்? இதன் அனைத்து வசதிகள் குறித்து விளக்கவும்.
-வ.பெருமாள்சாமி, திண்டுக்கல்.
பதில்: விண்டோஸ் இயக்கத்தில் பைல்கள் மற்றும் போல்டர்களைக் காப்பி செய்வதில் மிகவும் உதவிடும் ஒரு புரோகிராம் டெரா காப்பி (TeraCopy). இதனை http://www.box.net/ shared/o16me8egx3 என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்திடலாம். பின்னர் இதனை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடவும். நீங்கள் எதனைக் காப்பி செய்தாலும், இந்த புரோகிராம் இயங்கத் தொடங்கும். ஒரு பைலைக் காப்பி செய்கையில் இடையே அந்த பணியை நிறுத்திப் பின்னர் விட்ட இடத்திலிருந்து தொடங்கலாம். பல பைல்களை மொத்தமாகக் காப்பி செய்திடக் கட்டளை கொடுத்து காப்பி ஆகும்போது, ஏதேனும் ஒரு பைலைக் காப்பி செய்வதில் பிரச்னை இருந்தால், அதை விடுத்து அடுத்த பைலைக் காப்பி செய்திடும். எந்த பைலைக் காப்பி செய்கையில், பிரச்னை ஏற்படுகிறதோ அதனைக் காட்டும். இதனை இன்ஸ்டால் செய்த பின்னர், ஏதேனும் ஒரு பைலைத் தேர்ந்தெடுத்து ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், டெரா காப்பி என்பதுவும் ஒரு ஆப்ஷனாகக் கிடைக்கும். வழக்கமான காப்பி ஆப்ஷனும் கிடைக்கும்.

கேள்வி: வேர்டில் டெக்ஸ்ட் ஹைலைட் செய்திடுகையில் வண்ணத்தில் அதனை அமைக்க வழி என்ன?
-தா. செண்பக லட்சுமி, கம்பம்.
பதில்: பல வண்ணங்களில்வேர்ட் டெக்ஸ்ட்டை ஹைலைட் செய்திடலாம். வேர்டில் தரப்பட்டுள்ள ஹைலைட் டூலைப் பயன்படுத்த வேண்டும். இது ஒரு ஹைலைட் பேனாவால் சாதாரணமாக நாம் என்ன செய்வோமோ அதனையே செய்கிறது. மாறா நிலையில் இதன் வண்ணம் மஞ்சள். ஒரு வரிசைக்கு ஐந்து வண்ணங்களாக மூன்று வரிசைகளில் 15 வண்ணங்கள் தரப்படுகின்றன. இதனைக் கிளிக் செய்தால் பென்சில் இருப்பது போல ஒரு பிரஷ் கர்சர் கிடைக்கும். அதனைக் கொண்டு எந்த டெக்ஸ்ட்டை ஹை லைட் செய்திட வேண்டுமோ அதனை ஹைலைட் செய்திடலாம். இந்த ஹைலைட் டூலிலேயே No High Light என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். இதனை தேர்ந்தெடுத்தால் ஹைலைட் டூல் கலர் அடிக்காது. ஏற்கனவே அமைத்ததை நீக்க வேண்டும் என எண்ணினாலும் இதனைப் பயன்படுத்தலாம். புதிய டெக்ஸ்ட்டினை ஹைலைட் செய்திட புதிய வண்ணத்தைத் தேர்ந்தெடுத்தால், பழைய ஹைலைட் செய்திட்ட டெக்ஸ்ட் அதே பழைய வண்ணத்திலேயே இருக்கும். மாறாது.

கேள்வி: நான் பயர்பாக்ஸ் பிரவுசர் 3.5 பயன்படுத்தி வருகிறேன். சில வாரங்களாகவே, இந்த பிரவுசர் மிக மெதுவாக இயங்குகிறது. இதன் காரணம் மால்வேர் தொகுப்பாக இருக்குமா? இதனை எப்படி அறிவது?
-கி.தமிழ்மணி, கோவை.
பதில்: முதலில் கீழே தந்துள்ள குறிப்புகளின்படி செயல்படவும். பிரவுசர் இதுவரை சேர்த்துள்ள கேஷ் மெமரி பைல்களைக் காலி செய்து பார்க்கவும்.
1. Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும்.
2. ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸில் Advanced என்ற பட்டனை அழுத்தவும்.
3. இங்கு Network என்னும் டேப்பில் கிளிக் செய்திட இன்னொரு விண்டோ கிடைக்கும்.
4.இந்த விண்டோவில் “Offline Storage” என்பதன் கீழாக “Clear Now” என்ற பட்டனில் அழுத்தவும். பின்னர் இந்த டயலாக் பாக்ஸினை குளோஸ் செய்து வெளியே வரவும். இனி பயர்பாக்ஸ் விரைவாக இயங்கத் தொடங்கும். மால்வேர் தொகுப்புகள் இந்த கேஷ் மெமரியில் இருந்தால் அவையும் நீக்கப்பட்டிருக்கும். மால்வேர்களுக்கும் டேட்டா கிடைக்காது.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkateswarn - perambalur,இந்தியா
08-ஜூன்-201113:01:35 IST Report Abuse
venkateswarn ctrl c & v not working
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X