அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2021
00:00

துப்பு சொல்லும் நகம்!
நகம் கடிப்பது கெட்ட பழக்கம். நகம் தானே என அலட்சியம் வேண்டாம். அது தரும் எச்சரிக்கை அறிகுறிகளை கவனியுங்கள்.
ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை நகங்கள். அவற்றில் ஏற்படும் மாற்றங்களால் உடலில் நோய் பாதிப்புகளை ஓரளவு ஊகிக்க முடியும். குறிப்பாக, ஈரல், சிறுநீரகம், இதயம் போன்றவற்றில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து விடலாம் என அனுபவ மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
வயது அதிகமானாலோ, நகப்பூச்சு உபயோகிப்பதாலோ, மஞ்சள் நிறத்துக்கு மாறுகின்றன நகங்கள். புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளோருக்கும் மஞ்சளாகும்.
நகம் கெட்டியாகி, உடைந்து, மஞ்சள் நிறமாக காட்சியளித்தால் கிருமி தொற்று காரணமாக இருக்கலாம். சர்க்கரை நோய், சொரியாசிஸ், சுவாச நோய் போன்றவையும் இருக்கலாம்.

நகம் வறண்டு உடைய...
* அதிக நேரம் கையை தண்ணீரில் மூழ்க வைத்தல்
* அடிக்கடி நகப்பூச்சு ரிமூவர் பயன்படுத்துதல்
* ரசாயனம் கலந்த சோப் பயன்படுத்துதல் போன்ற பழக்கங்களும் காரணம். ஹைப்போதைராயிடிசம், வைட்டமின் சத்து பற்றாக்குறை ஏற்பட்டிருந்தாலும் நகம் வறண்டு உடையும்.
நகங்களில் ஏற்படும் காயத்தால் வெள்ளை புள்ளி உருவாகலாம். நகம் வளர வளர இது மறைந்துபோகும். வெள்ளை புள்ளிகள் மறையாமல் இருந்தால் பூஞ்சை தொற்று இருக்கும். இதை போக்க மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
வயது முதிரும் போது, நகங்களில் நீளமான கோடு விழும்.
வைட்டமின், மெக்னீஷியம் பற்றாக்குறை, சமச்சீரான உணவு கிடைக்காமை போன்றவற்றாலும் நகங்களில் கோடு விழும்.
நகங்களில் குழி, அடுக்குகள் தோன்றுவது, சொரியாசிஸ் அறிகுறியாக இருக்கலாம். நகத்தில் கறுப்பு கோடு மற்றும் வலி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். அது சரும புற்றுநோயின் அறிகுறியாக இருக்கக்கூடும்.
* உணவு சமைக்கும்போதும், பாத்திரங்கள் கழுவும்போதும் முடிந்த அளவுக்கு, கையுறை பயன்படுத்துங்கள். பணிகள் முடிந்ததும் மிதமான சுடுநீரில் கைகளை கழுவவும்
* நகப்பூச்சு பயன்படுத்துவதையும், செயற்கை நகங்கள் இணைப்பதையும் தவிர்க்கவும்
* நகங்களை உரிய கால இடைவெளியில் வெட்டி சுத்தப்படுத்தி சுகாதாரமாக வைத்திருக்கவும்
* தினமும் சிறிதளவு தேங்காய் எண்ணெயை நகங்களில் பூசவும்.
நகம் விஷயத்தில் எப்போதும் கவனம் தேவை.

ஓட்டலும் ஓவனும்!
சமையல் என்பது நாகரிகத்தின் வளர்ச்சி. அதுவே, சுவையின் பக்கம் கவனத்தை திருப்புகிறது. விதம் விதமான உணவு வகைகள் அறிமுகமாகியுள்ளன. உணவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க அதை தயாரிப்பதில் வேகம் தேவைப்பட்டது.
அதாவது சுலபமாக துரித சமையல்.
அதற்கு வழி இருக்கா என்ற கேள்விக்கு, 'ஓ...' என்றது ஓவன்.
மின்சார அடுப்பு பலவிதங்களில் உதவுகிறது. வேகமாக சமைக்க, அளவான வெப்பத்தில் பண்டங்களை சுட்டு எடுக்க, 'ஓவன்' என்ற மின் அடுப்பு அவசியம். எங்கும் எளிதில் எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும். இளைஞர்கள், சுற்றுலாப் பயணி, ஆய்வாளர் என பலருக்கும் இது கைகொடுக்கிறது.
நுண்ணலை அடுப்பு என்ற, 'மைக்ரோ ஓவன்' பிறந்த கதையை பார்ப்போம்...
ஐரோப்பிய நாடான இங்கிலாந்து பர்மிங்காம் பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர்கள், 'அல்ட்ரா ஷார்ட்' எனப்படும், மின் காந்த அலைகளால் இயங்கும் ஒரு சாதனத்தை, 1940-ல், உருவாக்கினர். அதற்கு, 'மேக்னட்ரான்' என்று பெயரிட்டனர்.
அமெரிக்காவை சேர்ந்த ரேதியான் நிறுவனம், இந்த சாதனத்தை மேம்படுத்த விரும்பியது. சில மாற்றங்கள் செய்து, வீட்டு உபயோகத்துக்கு ஏற்றதாக சந்தைக்கு அனுப்பியது.
நுண்மின் அலைகள் எனப்படும், 'மைக்ரோ வேவ்ஸ்' நீர் அணுத்திரள்களை அதி வேகத்தில் இயங்க செய்யும். இது உருவாக்கும் வெப்ப அலை, சாதாரண வெப்ப அலையை விட, வினாடிக்கு, 2,450 மில்லியன் மடங்கு அதிகமாக இருக்கும். இதுதான், அதிவேக சமையலுக்கு உதவுகிறது.
இந்த சாதனத்தில், தண்ணீர் மூலக்கூறுகளின் உரசலினால் வெப்பம் உருவாக்கப்படுகிறது. ரேதியான் நிறுவனம், 'ஹைபிரீகுவன்சி டை எலக்ட்ரிக் ஷீட்டிங் அப்பரட்டஸ்' என்ற பெயரில், மின்சார அடுப்பை, 'மைக்ரோவேவ் ஓவன்' என உரிமைப்பதிவு செய்தது.
உணவகங்களிலும், பெரிய விருந்துகளிலும் உணவு தயாரிக்கவே முதலில் மைக்ரோ ஓவன் பயன்படுத்தப்பட்டது. இதனால், சமையல் நேரம் வெகுவாக குறைந்தது.
உருளைக் கிழங்கை, நான்கே நிமிடங்களில் வேக வைக்க முடிந்தது.
வீட்டு உபயோகத்திற்கான சிறிய அளவிலான மின் அடுப்பை உருவாக்கிய அமெரிக்கா, 1960ல் சந்தையில் விட்டது. தற்போது, பல திறன்களில் மின் அடுப்பு பயன்பாட்டில் உள்ளது.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X