தமிழக மஞ்சள் ரகங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2021
00:00

தென்கிழக்காசியாவை தாயகமாக கொண்ட மஞ்சள் நறுமணம் மற்றும் மூலிகைச் செடி. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். உலக அளவில் மஞ்சளின் ஆண்டு உற்பத்தியானது 11 லட்சம் டன்கள். இதில் இந்தியாவின் பங்கு 78 சதவீதம். உலக வர்த்தகத்தில் இந்திய மஞ்சள் இடம் பிடிக்க முக்கிய காரணம் அதிகளவு குர்குமின் உள்ளது.

மஞ்சளில் பல வகைகள் இருந்தாலும் 'ஆலப்புழை மஞ்சள்' உலகளவில் சிறந்ததாக உள்ளது. முகத்திற்கு பூசப்படும் முட்டா மஞ்சள், கஸ்துாரி மஞ்சள், சமையலுக்கு பயன்படுத்தப்படும் விரலி மஞ்சள் ரகங்கள் உள்ளன. இவையும் 7 மாதங்கள், 8 மற்றும் 9 மாதங்களில் அறுவடை செய்வதற்கேற்ப பிரிக்கப்படுகின்றன.

கோ 1 ரகம் எக்டேருக்கு 30.5 டன்னும் குர்குமின் அளவு 3.2 சதவீதமாகவும் கோ 2 ரகம் எக்டேருக்கு 1.9 டன்னும் குர்குமின் அளவு 4.2 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் பி.எஸ்.ஆர்., 1, 2, ரோமா மற்றும் சுகுணா ரகங்கள் பரவலாக பயிரிடப்படுகின்றன.

பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பி.எஸ்.ஆர் 1 மற்றும் 2 ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பி.எஸ்.ஆர் 1 ரகம் 9 மாத பயிர். இதன் கணுக்கள் குறுகிய இடைவெளியுடன் இருக்கும். ஒரு எக்டேருக்கு 31.2 டன்கள் பச்சை மஞ்சள் கிடைக்கும். பதப்படுத்தி காயவைத்தால் 6 டன் கிடைக்கும்.

பி.எஸ்.ஆர்., 2 ரகம் 240 - 250 நாட்கள் பயிர். செடிகள் நடுத்தர உயரமிருக்கும்.

ரோமா ரகத்தின் வயது 250 நாட்கள். எக்டேருக்கு 20.7 டன் மஞ்சள் கிழங்கு கிடைக்கும். மலைப்பாங்கான நிலம், நன்செய், புன்செய் நிலங்களிலும் பயிரிட ஏற்றது.

சுகுணா ரகம் குறுகிய கால பயிர். 190 நாட்களில் அறுவடையாகும். எக்டேருக்கு 29.3 டன் மஞ்சள் கிடைக்கும். கிழங்குகள் ஆரஞ்சு நிறத்துடன் குர்குமின் அளவு 4.9 சதவீதமாக இருக்கும். கிழங்கு அழுகல் நோய் மற்றும் இலைக் கருகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் தன்மை உடையது.

வேல்முருகன் செந்தமிழ்ச்செல்வி
உதவி பேராசிரியர்கள் தோட்டக்கலைக் கல்லூரி ஆராய்ச்சி நிலையம் கோவை
spices@tnau.ac.in

Advertisement

 

மேலும் விவசாய மலர் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
03-ஏப்-202117:44:48 IST Report Abuse
J.V. Iyer அருமை சகோதரி செந்தமிழ்ச்செல்வி
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
02-ஏப்-202119:09:18 IST Report Abuse
NicoleThomson இவர்களை வெளியூரில் இருந்து தொடர்பு கொண்டா அப்படியே பதில் அளித்து உதவிடுவாங்க .
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
02-ஏப்-202120:16:21 IST Report Abuse
தமிழவேல் எழுதும்போது, வருஷத்துக்கு 60 டன் தேவை (COM 20 %) ன்னு சொல்லி நம்பர் குடுங்க. போன் வரும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X