இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஏப்
2021
00:00

தம்பதியே என்றாலும்....
சமீபத்தில், கணவர் மற்றும் பிள்ளைகளுடன், திரையரங்கு ஒன்றிற்கு சென்றிருந்தேன். எங்கள் முன் இருக்கையில், நடுத்தர வயது தம்பதி அமர்ந்து, மற்றவர்களை பற்றி கவலைப்படாமல், கட்டியணைப்பது, முத்தமிடுவது என, தொடர்ச்சியாக, 'சில்மிஷ'த்தில் ஈடுபட்டு, அனைவரையும் நெளிய வைத்துக் கொண்டிருந்தனர்.
இதனால், குழந்தைகளோடு வந்த பலரும், முகம் சுளித்தபடி, அவர்களின் முன் இருக்கைக்கு இடம் மாறி அமர்ந்து கொண்டனர்.
திரையரங்க நிர்வாகியிடம் சென்று, 'சில்மிஷ' தம்பதியைப் பற்றி, புகார் கூறினார், என் கணவர்.
'தம்பதியே என்றாலும், பொது இடங்களில் அத்து மீறாதீர்கள். ஏனென்றால், திரையரங்கு உட்பட நீங்கள் புழங்கும் பல பொது இடங்களில், இப்போது கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறீர்கள்.
'தவறான நபர்கள் வசம், உங்களின், காட்சி பதிவுகள் கிடைத்தால், அதன்பின், உங்கள் மானமும், வாழ்க்கையும் பறிபோகும் வாய்ப்பிருப்பதை மறந்து விடாதீர்கள்...' என்று எச்சரித்தார், தியேட்டர் நிர்வாகி.
அதன் பிறகு தான், அந்த தம்பதி அடங்கினர். வந்தவர்களும், நிம்மதியாக திரைப்படத்தை காண முடிந்தது.
பொது இடங்களிலும் அநாகரிகமாக நடந்துகொள்ள, நாமென்ன விலங்குகளா... இதுபோன்றோர் இனியாவது திருந்தட்டும்!
- வி. நர்மதா, உளுந்துார்பேட்டை.

வியாபார நுணுக்கம்!
வெளியூரிலிருந்து வந்த ஒரு குடும்பத்தினர், எங்கள் பகுதியில், வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினர்.
பால் காய்ச்சிய தினத்தன்று, அனைவரையும் அழைத்து, அவர்களே சமைத்து, விருந்து வைத்தனர்.
சாப்பிட்டு முடித்து விடைபெறும்போது, தட்டை, முறுக்கு, சீடை, லட்டு மற்றும் மைசூர் பாக்கு என, அவர்கள் தயாரித்த, இனிப்பு, கார வகைகளை, ஒரு கவரில் வைத்து, அன்பளிப்பாக தந்து, வழியனுப்பினர்.
இரண்டொரு நாளில், அவர்கள் வீட்டிலேயே சிறிய அளவிலான, 'மெஸ்' மற்றும் ஸ்நாக்ஸ் கடையை துவக்கினர்.
பால் காய்ச்சும் நிகழ்ச்சியில் கொடுத்த அன்பளிப்பில், அவர்களுடைய கைப்பக்குவத்தின் ருசியை அனைவரும் அறிந்திருந்ததால், ஆரம்ப நாள் முதலே விற்பனை சூடு பிடித்தது.
சில மாதங்களிலேயே, எங்கள் பகுதியில் உள்ள சிலருக்கு, வேலை கொடுத்து, கடையை பெரிதாக்கினர்.
அவர்களின் வியாபார யுக்தியை, பாராட்டி வந்தேன்.
- ஆர். ஜெயசங்கரன், வானுார்.

எப்போதுதான் திருந்துவரோ?
என் வீட்டருகில் உள்ள, மளிகைப் பொருட்கள் வாங்கும் கடைக்காரரிடம், சமீபத்தில், தேர்தல் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.
'என்ன சார்... எல்லாரும் அயோக்கிய பசங்க... இவங்களுக்கு ஓட்டு போட்டு எந்த பிரயோஜனமும் இல்லை...' என்று, அலுத்துக் கொண்டார்.
'அப்ப, நீங்க ஓட்டு போட மாட்டீங்களா... ஓட்டு போடுவது நம் கடமை, உரிமையாச்சே... இருக்கறதுல நல்லவங்களா பார்த்து ஓட்டு போடலாமே...' என்றேன்.
'என் ஓட்டு, வெளியூர்ல இருக்கு. இதுக்காகவா ஒருநாள் செலவழிக்க முடியும். நான் ஓட்டு போட மாட்டேன்...' என்றார், அலட்சியமாக.
'ஏன், நீங்க, ஓட்டை மாத்திக்கலியா...' என்றேன்.
'அது ஒண்ணும் ரொம்ப முக்கியமில்லீங்க...' என்றார்.
அரசியல்வாதிகள், தங்கள் கடமையை செய்யவில்லை என்று வருத்தப்படும், கோபப்படும் நாம், ஓட்டு போட ஏன் முன் வருவதில்லை என்பது, ஆச்சரியமாக இருந்தது.
இவரைப் போன்றோர், ஊருக்கு பத்து பேராவது இருப்பர் என்றால், தமிழகத்தில் கணக்கெடுத்து பாருங்கள். இவர்கள், எப்போது தான் திருந்துவரோ?
கீதா சீனிவாசன், சென்னை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
10-ஏப்-202110:36:52 IST Report Abuse
Natarajan Ramanathan நான் இதுவரை ஓட்டுப்போடத் தவறியதே இல்லை. 2006ல் மட்டும் வெளிமாநிலத்தில் பணிபுரிந்ததால் ஓட்டுபோட முடியவில்லை அந்த முறைதான் தமிழகத்தில் இதுவரை இருந்ததிலேயே மிக கேவலமான அரசு அமைந்து மக்கள் அவதிப்பட்டார்கள்.
Rate this:
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
04-ஏப்-202122:38:04 IST Report Abuse
.Dr.A.Joseph பொது இடங்களில் புணர முயன்று விட்டு பொதுமக்களுக்கு எங்கே வலிக்கிறது என விதண்டாவாதம் பேசுவர்.அதையும் மீறி கேட்டால் மேலை நாடுகளில் இப்படித்தான் என்பர். வேட்பாளர்களின் சமுதாய செயல்பாடுகள் குறித்து கையேடு வெளியிட வேண்டும். ஐந்து அயோக்கியர்கள் போட்டி போடுகின்றனர் இதில் நல்ல அயோக்கியன் யார் என்பதில் வாக்காளர் தடுமாறுகிறார். பெரும்பாலும் வாக்களிக்க போகாமல் இருக்க காரணம் இதுவாகக் கூட இருக்கலாம். வேட்பாளர் நியமனங்களில் மாற்றம் தேவை.
Rate this:
வழிப்போக்கன் - Somerville, MA,யூ.எஸ்.ஏ
09-ஏப்-202106:27:14 IST Report Abuse
வழிப்போக்கன் இந்த கலாச்சார காவலர்தாம் வன்புணர்வு நடக்கையில் அதனை சுற்றி இருந்து வேடிக்கை பார்த்து ஊக்குவிப்பராக இருப்பர் - உண்மையில் இது போன்ற போலிகளை கண்டால் அதீத கோபம் வருகிறது....
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
04-ஏப்-202106:35:19 IST Report Abuse
Girija @கீதா சீனிவாசன், சென்னை. எப்படியோ இட்டுக்கட்டி எழுதி பரிசு வாங்கியாச்சு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X