சகலகலாவல்லி பானுமதி! (16)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஏப்
2021
00:00

சோவுக்கு கொடுத்த அதிர்ச்சி!
நாடகம் பார்ப்பதில் ஈடுபாடு கொண்டவர், பானுமதி.
நடிகர், கதை வசனகர்த்தா மற்றும் பத்திரிகையாளர் சோவின் அமெச்சூர் நாடகம் நகைச்சுவையாக, கருத்துள்ளவையாக இருக்கும் என்று கேள்விப்பட்டு, நாடகம் பார்க்க விரும்புவதாக, சோவுக்கு போன் செய்தார், பானுமதி.
தன் நாடகத்தை, பானுமதி பார்த்தது பற்றிய சோவின் பதிவு:
இவருக்கு (லட்சுமி) நேர் எதிரான ஒருவர், நடிகை பானுமதி.
அவரைப் பார்த்தாலே, ஒரு அந்தஸ்து தான் மனதில் வரும். அப்படியொரு தோரணையுடன் இருப்பார். அவருடன் சினிமாவில் நான் நடித்ததில்லை. ஆனால், அவருக்கு என்னை நன்றாகத் தெரியும். ஒருமுறை, என் நாடகத்தை பார்க்க விரும்பினார்; வரச்சொன்னேன்.
நேர்மை உறங்கும் நேரம் என்ற நாடகத்தை, முன் வரிசையில் அமர்ந்து, மிகவும் ரசித்து, உரக்கச் சிரித்து, கை தட்டி பார்த்தார். அவருடைய ரசனை, முகத்தில் தெரிந்ததை நாங்களும் கவனித்துக் கொண்டிருந்தோம்.
நாடகம் முடிந்தது. 'மேக் - அப்' அறைக்கு வந்தார்.
'நாடகம் ரொம்ப நல்லாயிருந்தது...' என்று பாராட்டி, என் கையில் ஒரு சின்ன பாக்கெட்டை கொடுத்து விட்டுப் போனார்.
நான் அதை திறந்து பார்த்தேன். உள்ளே, 5,000 ரூபாய் இருந்தது. அப்போது, அதற்கு மதிப்பு அதிகம். உடனே, 'மேக் - அப்'பை கலைக்காமல் வெளியே ஓடினேன். அவர், காரில் கிளம்புவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்.
'என்ன... இந்த மாதிரி பண்ணிட்டீங்க... இப்படி பணத்தை கொடுத்துட்டு போறீங்களே... இதெல்லாம் வேண்டாம்மா...' என்றேன். எங்களைச் சுற்றி கூட்டம் சேர்ந்து விட்டது.
'இல்லே... என்கிட்ட இப்போ இவ்வளவு தான் இருந்தது. அதனால, இதைக் கொடுத்திருக்கேன்; இல்லேன்னா இதை விட கூடுதலாக கொடுத்திருப்பேன். நான் பார்த்தது நாடகமில்லே, சாணக்கிய நீதி. அதுக்காக நான் கொடுக்கிற சமர்ப்பணம் இது. நீங்க மறுக்கக் கூடாது...' என்று சொல்லி, கிளம்பி விட்டார்.
பானுமதியம்மா கொடுத்த அந்த பணத்தை, இன்னமும் அப்படியே வைத்திருக்கிறேன். சினிமாவில் பல துறைகளில் சாதனை படைத்த பெண்மணி அவர்.
ஏராளமான கதைகளை தமிழிலும், தெலுங்கிலும் எழுதியிருக்கிறார். படங்களை இயக்கியிருக்கிறார். பல மொழிகளில் நடித்து, பாடி, இசையமைத்து இருக்கிறார். பல படங்களை தயாரித்திருக்கிறார். சொந்த ஸ்டுடியோ வைத்திருக்கிறார்.
தென் மாநில திரைப்பட உலகின், அபூர்வமான சாதனையாளர்களில் பானுமதியும் ஒருவர்.
- இவ்வாறு பதிவிட்டிருந்தார், சோ.
அன்றைய உச்ச நட்சத்திரங்களான, எம்.கே.டி.பாகவதர், பி.யு.சின்னப்பா, ஹொன்னப்ப பாகவதர், ஏ.நாகேஸ்வர ராவுடன், மூன்று படங்கள்; எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியுடன் ஜோடியாக, தலா எட்டு படங்கள்; ஜெமினிகணேசனுடன், இரண்டு படம்...
என்.டி.ராமாராவுடன் ஜோடியாக, இரண்டு படங்கள்; கே.ஆர்.ராமசாமி, கலைவாணர், கே.டி.மகாலிங்கம், தங்கவேலு, எம்.கே.ராதா மற்றும் எஸ்.பாலசந்தர் ஆகியோருடன், தலா ஒரு படத்தில் நடித்திருக்கிறார், பானுமதி.
ஜோதிடர் சொன்னது போல், தன் மகள், திரையுலகில் உயர் அந்தஸ்து பெற்றதைப் பார்த்து, அகம் மகிழ்ந்தார், அப்பா, வெங்கட சுப்பையா. அந்த நேரத்தில், ஜோதிடத்தில் டாக்டரேட் பட்டம் வாங்கும் அளவுக்கு பெரும் ஞானம் பெற்றிருந்தார், பானுமதி.
அவர், சில வி.ஐ.பி.,க்களுக்கு சொன்னது பலித்தது.

மூன்று முறை தேசிய விருது பெற்றுள்ளார், பானுமதி. 1966ல், மத்திய அரசின், பத்மஸ்ரீ விருது. 1975ல், ஆந்திரா பல்கலை கழகம் வழங்கிய, கவுரவ டாக்டர் பட்டம். 1983ல், தமிழக அரசின் கலைமாமணி. 1984ல், வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகம் வழங்கிய, கவுரவ டாக்டர் பட்டம். 2001ல், மத்திய அரசின், பத்ம பூஷண் விருது மற்றும் 2013ல் பானுமதியின் சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது.

தொடரும்
சபீதா ஜோசப்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
04-ஏப்-202106:34:19 IST Report Abuse
Manian கற்றாறை கற்றாறே காமுறுவர் (மதிப்புடன் விரும்புவா்கள், வான மயிலாட தான் கண்ட வான் கோழி, தானும் அதுவாக பாவித்து (தன்னையும் மயிலாக எண்ணிக் கொண்டு) தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போல் கல்லாதான் கற்ற கவி-(விதி விலக்கு காளிதாசன், காளமேகம் ) என்ற படி போலி காலேசு டிகிரி இல்லை என்றாலும், பொருள் சார்ந்த பரந்த அறிவு(Domain General Intelligence) பானுமதியிடம் நிரம்பி இருந்தது ஆகவேதான் சரஸ்வதியின் ஆசீர்வாதம் போல், 5,000 ரூ (இன்று 50 லட்சம்), தன் அபிமான நடிகர் "சோ"விற்கு தந்தார். பின்னாட்களில் "சோவும்" அதே பொருள் சார்ந்த பரந்த அறிவு(Domain General Intelligence) நிறைந்தவாக இந்தியாவிலேயே ஒரு அறிவுக் களஞ்சியமாக பார்க்கப்பட்டார்கள் பானுமதி-சோ இரு துருவ நட்சத்திரங்கள் சோ, பானுமதி இனம் கண்ட, நவீன சாணக்கியரே பிசிராந்தையாரும், கோப்பெரும் சோழனும் -அறிவால், உணர்ச்சியால் கட்டுண்டவர்கள் "உணர்ச்சி பழகுதல் வேண்டாம்,உணர்ச்சிதான் நட்பாங்கிழமை தரும்- நேருக்கு நராக நண்பர்களாக இருக்க தேவை இல்லை நல்லம் யாம் என்னும் கல்வி அழகு என்ற உணர்வால் ஒன்று பட்டவர்கள்- - பானுமதி அதனாலேயே சோவை நாடக உலகு பிராந்தையாராக மரியாதை செய்தார். தமிழ் ஆசிரிய்கள்(?) அறிவு சார்ந்த பாராட்டலுக்கு இதையே உதாரணமாக காட்டாலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X