திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஏப்
2021
00:00

செ.ஜெயக்கொடி எழுதிய, 'சின்னச் சின்னச் செய்திகள் சிறகடிக்கும் செய்திகள்' நுாலிலிருந்து:
'மேக்னா கார்ட்டா' என்பது, இங்கிலாந்து அரசருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இடையே ஏற்பட்ட ஓர் உடன்படிக்கை. 1215ல், முதலில் அரசு முத்திரைத்தாளில் பதிப்பிக்கப்பட்ட இந்த மகாசாசனம், 13வது நுாற்றாண்டில் சில தற்காலிக விதிகளை நீக்கி, அரசரின் ஆட்சிக்கு நேரடியான எதிர்ப்புகளைத் தவிர்த்து, 1225ல், சட்டமாக அங்கீகரிக்கப்பட்டது.
நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டங்கள், பெரும்பாலானவை, பிரிட்டிஷாரின் அரசியல் சட்டத்திலிருந்தே உருவாக்கப்பட்டது. ஆக, நம் நாட்டுக்கும் இதை ஒரு முக்கிய சட்டமாக எடுத்துக் கொள்ளலாம் என்று, ஒரு விவாதம் அப்போது நடைப்பெற்றது.
மக்களாட்சி, சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் என்ற கூறுகளுக்கு, இந்த மேக்னா கார்ட்டா சட்டமே முக்கிய காரணமாக அமைந்தது.
இச்சட்டம் உருவாகி, ஜூன் 15, 2021 அன்று, 806 ஆண்டு நிறைவடைகிறது.

நம்நாட்டில் இன்றைய தேர்தல் முறையில், ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால், 1937ல் நடைபெற்ற தேர்தலில் இரண்டு கட்சிகள் மட்டுமே போட்டியிட்டன. ஒன்று காங்கிரஸ்; மற்றொன்று, நீதிக்கட்சி.
அந்த நாட்களில் கட்சிகளுக்கு, சின்னங்கள் வழங்கப்படவில்லை. மாறாக, ஒவ்வொரு கட்சிக்கும், வெவ்வேறு வண்ணப் பெட்டிகள் ஒதுக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சிக்கு, மஞ்சள் வண்ண பெட்டியும், நீதிக்கட்சிக்கு, சிவப்பு வண்ண பெட்டியும் வைக்கப்பட்டது.
அதைப் பார்த்து, மக்கள், மஞ்சள் பெட்டியிலோ, சிவப்பு பெட்டியிலோ, தங்கள் ஓட்டுகளைப் போட்டனர்.

ஒவ்வொரு கட்சியின் கொடியில் உள்ள நிறங்களுக்கும், ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. அது:

கம்யூனிஸ்ட் கட்சி
சிவப்பு என்பது சமுதாயப் புரட்சி ஏற்பட, ரத்தம் சிந்தவும் தயாராக இருக்க வேண்டும். அது, விவசாயப் புரட்சியாகவும் இருக்க வேண்டும். அதற்காக கதிர் அரிவாள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
கம்யூனிசத்தின் தந்தையான, காரல் மார்க்ஸ் சொன்னபடி, தொழில் புரட்சி வேண்டும். அதற்கான சாதனமான, அரிவாள் சுத்தியலை உயர்த்திப் பிடிக்க வேண்டும். அதற்காக ரத்தம் சிந்தவும் தயாராக இருக்க வேண்டும் என்பது, அதன் பொருள்.

தி.மு.க.,
நம் நாட்டில் வேரூன்றிப் போயுள்ள அறியாமை எனும் நோயை, பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து, அதன்படி அறியாமை எனும் இருளை அகற்ற வேண்டும். அறியாமையைக் குறிக்க கறுப்பு நிறம்.
அறியாமை எனும் இருளை பகுத்தறிவு கொண்டு அகற்ற, ரத்தம் சிந்தவும் தயாராக வேண்டும். அதுதான் சிவப்பு நிறம். அறியாமை எனும் இருளை அகற்ற, சூரிய ஒளி வேண்டும். அதுவே, உதய சூரியன் சின்னம்.

அ.தி.மு.க.,
மேலே உள்ள கருத்தை ஒத்தது. கூடவே, அண்ணதுரை படம் இடம் பெற செய்தார், கட்சியை உருவாக்கிய, எம்.ஜி.ஆர்.,

கே.எஸ்.சுப்ரமணி எழுதிய, 'அட, அப்படியா!' நுாலிலிருந்து:
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு, இந்தியா. நம் நாட்டில், ஏப்ரல் 16, 2009 முதல், மே 13 வரை, ஐந்து கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்தது. இதில், 59.7 சதவிகித வாக்காளர்கள், அதாவது, 41.72 கோடி பேர் ஓட்டளித்தனர்.
ஒரு நாட்டில், இத்தனை பேர் தேர்தலில் ஓட்டளித்து, தங்களை ஆள வேண்டியவரை தேர்வு செய்தது, இதுவே முதல் முறை; உலக சாதனையும் கூட.

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்
04-ஏப்-202108:18:06 IST Report Abuse
கதிரழகன், SSLC என்னடா இது புதுசா இருக்கு? ஆரோக்கியம் சார் சுவர்ட்சு உயர் நிலை பள்ளி ராமநாதபுரம் சொல்லிகுடுத்தது இன்னி வரை ஞாபகம் இருக்கு, அரசர் ஜான் ஒப்பந்தம் போட்டது பிரபுக்களோட. பிரபுக்களுக்கு கொஞ்சம் அதிகாரம் கொடுத்தது. அம்புட்டுதான். மக்களுக்கு உரிமை எல்லாம் குடுக்கல்ல.
Rate this:
Manian - Chennai,ஈரான்
05-ஏப்-202108:52:20 IST Report Abuse
Manianபெரியவரே, பிரபுக்களும், மக்கள்தானே . அவர்களுக்கு உரிமை முன்னால் சென்றதால், அது கொஞ்சம் கொஞ்சமாக(சொட்டு பாசனம் மாதிரி ) கீழ் வரை பரவுமே . அதான் அப்படி. இன்னா அவசரப்பட முடியாது . நிலமும் அப்படியே வீரர்களுக்கு பிரபுக்கள் தந்து, கோயில்களுக்கு தந்து, இப்போ அரசியல் வியாதிகள் கைக்கு திரும்ப போகவில்லையா? கருணா நாயுடு மன்னர்கள் தந்த கால்வாய், ஏரி கொளங்களை, மக்களுக்கு பராமரிக்க தெரியாதுன்னு எடுத்துகிட்டு, இப்போ அங்கே பல்லடுக்கு கட்டிடங்களாக ஒளிரவில்லையா? அட எல்லோருக்குமே ஓட்டுன்னாலும் அதேயும் விக்குறானுகளே பிரபுக்கள் மட்டுமே ஓட்டை விக்கலாமுன்னா, அம்பானி, அதானி, மதானி, டாட்டா வித்த ஓட்டிலே இவ்ளோ திருடர்கள் களகப் பயலுக எம்பி, எம்எல்ஏ, மந்திரினு ஆளாளா கொள்ளை அடிக்க முடியுமா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X