ரவுத்திர வீணை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஏப்
2021
00:00

தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு,

ஒரு குற்றத்தை பார்த்ததுக்கு தண்டனை மரணமா?அபாண்டமா குற்றச்சாட்டு சொன்ன பணியாளர்கள், அதை முழுமையா விசாரிக்காத அதிகாரிகளால துாய்மைப் பணியாளரான என் கணவர் உயிரை மாய்ச்சுக்கிட்டாருய்யா!

தண்டுவட பிரச்னையால வார்டு பணியில இருந்த அவரை, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி சீதாலட்சுமி மகப்பேறு மருத்துவமனைக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னாடி மாற்றினாங்க! மாநகராட்சியில நிரந்தர துாய்மைப் பணியாளரா இருந்த 10 ஆண்டுகள்ல அவர் மேல ஒரு புகார் கிடையாது.

மருத்துவமனை பணியாளர்களோட ஒழுங்கீனமான செயலை அவர் யதேச்சையா பார்த்ததுதான் பிரச்னையோட துவக்கம்! அந்த நிமிஷத்துல இருந்து தப்பு பண்ணினவங்க தந்த நெருக்கடியால இவருக்கு கடுமையான மன உளைச்சல்! 'தவறான விஷயங்களை செல்போன்ல படம் பிடிச்சாரு'ன்னு இவர் மேல பொய் புகார் தந்து வெளியே அனுப்பிட்டாங்க.

பிப்ரவரி 3ம் தேதி மதியம், நடந்த சம்பவத்தையும், அதுக்கு காரணமானவங்க பெயர்களையும் மரண வாக்குமூலமா செல்போன்ல வீடியோவா பதிவு பண்ணிட்டு என் கணவர் தற்கொலை பண்ணிக்கிட்டாரு. 'வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவுல வழக்கு பதியணும்'னு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கு!

அய்யா... தப்பு பண்ணினவங்க மேல எப்போதான் நடவடிக்கை எடுப்பீங்க?

- மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை நிர்வாகம் ஏற்படுத்திய மன உளைச்சலால் மாண்ட ரங்கசாமியின் மனைவி தேவி, கோவை.

Advertisement

 

மேலும் கண்ணம்மா செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
05-ஏப்-202104:33:39 IST Report Abuse
Manian தமிழ் மகள், மனைவி தேவி: அதிகாரிங்க, அநியாயமாக சொன்ன பொய்யயை நம்பி, ஒரு சிறந்த நகர் சிங்காரர் உயிர் பறிக்கப்பட்டது ஒட்டு மொத்த தமிழகத்திற்குமே அவமானம் பூம்புகார் கண்ணகிக்கு நேர்ந்த ஆறாத் துயரம் ஏன் உங்களுக்கு ஏற்பட்டது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X