பெண்மை என் பெருமை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2021
00:00

'வலியை உணர்ந்தவருக்குத்தான் அதன் வீரியம் தெரியும்; தன்னைப்போலவே துடிப்பவரின் உணர்வுகள் புரியும்' எனும் உண்மையை பொய் ஆக்குபவர் ஜெயஸ்ரீ ரத்தன். இவர் இவ்வலி உணர்தவரில்லை; ஆனால், மற்றவர்களின் வலி உணர்பவர்!

உணராது உணர்ந்த வலி என்ன?
புற்று நோயாளிகளோட வாழ்க்கை கொடுமையானது; ஆனா, மார்பக புற்றால பாதிக்கப்பட்டிருக்கிற பெண்கள் அளவுக்கு நரகம் கிடையாது. 'மார்பகம் இல்லாத என் உடலை ஏத்துக்க எனக்கே இரண்டு ஆண்டுகள் ஆச்சு; மார்பகத்தை அழகிற்கான தகுதியா பார்க்குற இந்த சமூகத்தால எப்படி எளிதா கடந்து போக முடியும்?'னு என்கிட்டே கேட்ட ஒரு பெண்ணோட வலியை என்னால இன்னும் உணர முடியுது.

இந்த பிரச்னையை கடக்கத்தான் செயற்கை மார்பகம் இருக்குதே?
இருக்கு; வசதியானவர்கள் மட்டும் வாங்கி பயன்படுத்துற விலையில இருக்கு; ஏழை பெண்களுக்கு இது சாத்தியமா என்ன!

பூர்வீகம் சென்னையாக இருந்தாலும், 68 வயது கு.ஜெயஸ்ரீ தற்போது வசிப்பது மஹாராஷ்டிராவின் மும்பையில். கணவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். 'மூத்த மகன் எங்ககூடத்தான் இருக்குறான். இளையவன் அமெரிக்காவுல இருக்குறான். அவனைப் பார்க்க அடிக்கடி பறந்திடுவேன்' என்பவருக்கு, 'நிட்டட் நாக்கர்ஸ்' எனும் 'பின்னல் மார்பகங்கள்' அறிமுகமானது அமெரிக்காவில்!

'பெண்களுக்கு இப்படியொரு பிரச்னை இருக்கிறதை என்னால அப்போதான் உணர முடிஞ்சது. என் உறவுக்கார பெண்ணும் புற்றுநோயால மார்பகத்தை இழந்திருந்தாங்க. இந்தியா திரும்பினதும், 'நான் பின்னித் தந்தா பயன்படுத்துவீங்களா'ன்னு கேட்டேன்; தயக்கத்தோட சம்மதிச்சாங்க. இன்னைக்கு என்னால 1,800க்கும் அதிகமான பெண்கள் மகிழ்ச்சியா இருக்குறாங்க. பணம் வாங்காம நான் செய்ற இந்த சேவையும், பலன் அடைஞ்சவங்களோட வாழ்த்தும் என் பெண்மையை ரொம்பவே பெருமையா உணர வைக்குது!

பெண்களை சதைப் பிண்டமா அணுகுற இந்த சமூகத்தை இப்படி ஜெயிச்சாகணுமா?
நியாயமான கேள்வி; ஆனா, இந்த சூழல் மாற பெண்கள் வெளி உலகத்துக்கு பழக்கப்படணுமே! 'நான் வீட்டை விட்டு வெளியே வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல ஆகுது'ன்னு சொல்ற பெண்கள்கிட்டே போராட்ட எண்ணத்தை விதைக்க முடியாது; ஆனா, அவங்க தாழ்வு மனப்பான்மையை உடைக்கலாம்; இதன் மூலமா, போராடுற குணம் தானா வெளியே வரும். நான் தயாரிக்கிற 'நிட்டட் நாக்கர்ஸ்' இதைத்தான் செய்யுதுன்னு நம்புறேன். கடந்த 2018ம் ஆண்டு ஜெயஸ்ரீ விதைத்த விதை இது. தற்போது இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த 230க்கும் அதிகமான பெண்கள் இவரைப் போலவே சேவை செய்து வருகின்றனர். பரவட்டும்... மனிதம்....

ஜெயஸ்ரீயின் புதுப்புது அர்த்தங்கள்
*அன்பு - உண்மை
*பெண் - மருந்து
*பணம் - அலை

Advertisement

 

மேலும் கண்ணம்மா செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
07-ஏப்-202111:49:18 IST Report Abuse
Manian எவ்வளவு உண்மை . கிளு கிளு பாக்கறானுங்கறவங்க பயலுக , புற்று நோயால் மார்பங்கள் இழந்த சகோதரிகளை நீச்சல் உடையில் பார்க்கா விரும்புவார்களா ? அவர்களே , தங்களுக்கு பிடிக்காத பெண் என்ற்றால் , "கேவலம் , ஜடடி போட்டுகிட்டு இப்படியா குத்திக்கறது, நம்ம நாகரிகம் எங்கே போச்சு ? " என்றும் கூவுவார்கள் .இந்தம்மாவின் இதயம் ஒரு பூ மாதிரி அந்த பெண்களை நினைப்பது , இவர் ஒரு தேவி என்று கும்பிட வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X