யார் இவர்?
பெயர்: அஸ்வதா பிஜு
வகுப்பு: 9ம் வகுப்பு
பள்ளி: ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி, பல்லாவரம், சென்னை
கதைகளாக, சிற்பங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் புதைப்படிமங்கள் குறித்து படிப்பதும், பேசுவதும்தான் இவரது அன்றாடம்.
ஆர்வமே அடிப்படைஅப்பா தந்த 'என்சைக்ளோபீடியா' மூலமா 5 வயசுல துளிர்விட்ட ஆர்வம் இது! புதைப்படிமங்கள் பற்றி தெரிஞ்சுக்க அருங்காட்சியகம், ஆற்றுப்படுகை பயணம், பேராசிரியர்கள் சந்திப்புன்னு நிறைய பார்த்துட்டேன். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால மண்ணுக்குள்ளே புதைந்த உயிரினங்களோட படிமங்களை வைச்சு இறந்த காலம், எதிர்காலம் கணிக்கிறது பெரிய ஆச்சரியம்!
என் எதிர்காலம்
'புதைப்படிமங்கள் எல்லாம் நினைவுச் சின்னங்கள் இல்லை'ங்கிற புரிதலை பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு எடுத்துட்டுப் போறதுல சந்தோஷம். 'புதைப்படிமங்களை கொண்டு அந்த உயிரினத்தை மறுபடியும் பூமிக்கு கொண்டு வரணும்!' - இந்த ஆய்வுதான் என் எதிர்கால திட்டம்.
என் அறிவுரை
அர்ப்பணிப்போட செயல்படுங்க; மற்றதெல்லாம் தானா நடக்கும்!
எங்கள் அஸ்வதா பிஜு
'தொட்டனைத் துாறும் மணற்கேணி குறளுக்கு பொருத்தமான உதாரணம் அஸ்வதா; அவளுக்கு ஆசிரியரா இருக்குறதுல பெருமைப்படுறேன்!'
- வ.ராஜேஷ், ஆசிரியர்.