'ரஷ்யாவின் பென்சிலின் பூண்டு!' | நலம் | Health | tamil weekly supplements
'ரஷ்யாவின் பென்சிலின் பூண்டு!'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 ஏப்
2021
00:00

கி.பி.,17ம் நுாற்றாண்டில், பிரான்ஸ் நாட்டில் நடந்த உண்மை சம்பவம்.
பிரான்சில், தொற்று நோயாக, 'பிளேக்' பரவி, தினசரி கொத்து கொத்தாக மக்கள் மடிந்தனர். அப்போது, நான்கு திருடர்கள் தினசரி இரவில் காலியாக இருந்த வீடுகளில் புகுந்து திருடினர். இதை கண்ட காவலர்கள், ஒரு நாள் அவர்களைப் பிடித்து விசாரிக்கும்போது, 'ஊரே பிளேக் நோயால் அலறிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் நால்வர் மட்டும், மரண பயம் இன்றி திருடிக் கொண்டிருக்கிறீர்களே... எப்படி?' என்று கேட்டனர்.
அப்போது அந்த திருடர்கள் சொன்ன பதில், அதிர்ச்சியை அளித்தது...
'சார்... எங்கள் பாட்டி, முழு பூண்டு ஒன்றை அரைத்து, ஒயினில் கரைத்து குடித்து விட்டால், பிளேக் பாதிப்பு வராது என்று சொன்னாள்; அன்றிலிருந்து பூண்டை அரைத்து, ஒயினில் கலந்து பகலில் குடித்து விடுவோம்; இரவில் பயமின்றி திருடுவோம்...' என்றனர்.
இந்தத் தகவலை போலீசார் ஊரெங்கும் பரப்பி, பிளேக் பரவாமல் தடுத்தனர் என்கிறது பிரான்ஸ் வரலாறு.
கி.மு., 1,300லேயே பிரமிடுகளில் பூண்டு கண்டு பிடிக்கப்பட்டது. கி.பி., 18ம் நுாற்றாண்டில், லண்டனில் பரவிய விஷக் காய்ச்சலில் இருந்து தப்பிக்க, பூண்டை பயன்படுத்தினர்.
ஐரோப்பிய மருத்துவர்கள் புண்களைக் கழுவ, பூண்டின் கஷாயத்தைப் பயன்படுத்தினர். இது போன்ற தகவல்களை வெளிநாட்டு நுால்களில் ஏராளமாகக் காணலாம்; அதில் ஒரு தகவல், நம்மை வியக்க வைக்கும்.
கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், பூண்டு பற்றிய ஒரு நுாலை படித்தேன். அதில், பூண்டை பென்சிலினுக்கு இணையாக ரஷ்யர்கள் போற்றினர் என்பதை படித்து வியந்தேன்.

பூண்டு தரும் ஆரோக்கியம்:
குடல் பகுதியில் உருவாகும் பல்வேறு பாக்டீரியா மற்றும் வைரஸ்களை முற்றிலும் அழிக்கவல்லது. என் அனுபவத்தில், உணவு விடுதிகளில் உண்பவர்களுக்கு ஏற்படும் கிருமித் தொற்று, 'ஈ - கோலி, அமீபியாசிஸ்' எனப்படும் மலக்கிருமி தொற்றை, முழுமையாக அழிக்கவல்லது பூண்டு.
உணவு உண்டவுடன், மலம் கழிக்கும் பழக்கத்தால் அவதிப்பட்ட ஒருவர், கொதிக்கும் பாலில், ஐந்து பல் பூண்டை நசுக்கிப் போட்டு, ஆறிய பின் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து இரவில் பருகி வரச் சொன்னேன்; ஒரு மாதத்தில் முற்றிலும் குணமடைந்தார்.
பாக்டீரியாக்களை அழிப்பது, கெட்ட கொழுப்பை கரையச் செய்வது, இதய பாதிப்பு மீண்டும் வராமல் தடுப்பது, நுரையீரலில் ஏற்படும் தொற்றை அழிப்பது, கொரோனா வைரசை அழிப்பதில் என, பலவற்றில் பூண்டு முதலிடம் பெறுகிறது.
ஆஸ்துமா, இன்புளூயன்சா, நிமோனியா போன்ற தீவிர பாதிப்புகளை குணப்படுத்தும்.
புற்றுநோய் கட்டிகள் உருவாவதைத் தடுக்கிறது.
3,000 ஆண்டுகளுக்கு முன்பே, மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது பூண்டு. தினசரி பாலில், இரண்டு முதல் நான்கு பல் பூண்டை நசுக்கிப் போட்டு, தேன் கலந்து இரவில் பருகினால், இதயம், நுரையீரல், வயிறு, தோல், ரத்தக் குழாய்களில் தோன்றும் நோய்களை போக்கும்; அதனால் தான் ரஷ்யர்கள், இதை, 'ரஷ்யாவின் பென்சிலின்' என்று போற்றுகின்றனர்.
பூண்டை பச்சையாக பயன்படுத்தக் கூடாது; பால், மோர் அல்லது உணவுடன் சமைத்து உண்பதே நல்லது.

'மூலிகைமணி' க.வேங்கடேசன்,
சென்னை.
73388 23784

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X