சாம்சங் நிறுவனம், 'சாம்சங் கேலக்ஸி எஸ். 20 எப்.இ., 5ஜி' எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இந்த மாடலில், 4ஜி மற்றும், 5ஜி ஆகிய வகைகள் கடந்த செப்டம்பரில் அமெரிக்காவில் அறிமுகம் ஆனது. ஆனால், இந்தியாவில், 4ஜி மாடல் போன் மட்டுமே, அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது, 5ஜி மாடல் அறிமுகம் ஆகியுள்ளது.
சிறப்பம்சங்கள்:
6.5 அங்குல முழு எச்.டி., திரை
குவால்காம் ஸ்நாப்டிராகன் 865 எஸ்.ஓ.சி.,
8ஜி.பி. ரேம்; 128 ஜி.பி., சேமிப்பு திறன்
1 டி.பி., வரை சேமிப்பை அதிகரிக்கலாம்
மூன்று கேமரா செட் அப்
4,500 எம்.ஏ.எச்., பேட்டரி
15 வாட் பாஸ்ட் சார்ஜிங்
விலை: 55,999 ரூபாய்
அறிமுக விலை: 47,999 ரூபாய்.