ஜீரோ பட்ஜெட்டில் ஆர்கானிக் கொய்யா சாகுபடி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
00:00

மதுரை உசிலம்பட்டி தொட்டப்ப நாயக்கனுார் வாசிநகரில் 4 ஏக்கரில் கொய்யா, முருங்கை, தென்னை, மாட்டுத்தீவனங்கள் 5 ஏக்கர் என 9 ஏக்கரில் ஆர்கானிக் விவசாயம் செய்கிறார் விவசாயி கணேசன்.

நிலம் வாங்கும் போதே லக்னோ 49 ரக கொய்யா மரங்கள் இருந்தன. மூன்றாண்டுகளுக்கு முன்பே இயற்கை விவசாயம் தான் செய்வதென முடிவெடுத்து விண்ணப்பித்தேன். இங்குள்ள 700 மரங்களுக்கும் 20 வயதாகிறது. ஒரு பகுதி மரங்களை ஓரடி உயரம் விட்டு கவாத்து செய்துள்ளேன். இவற்றின் வளர்ச்சியைப் பார்த்து மற்ற மரங்களையும் கவாத்து செய்ய வேண்டும்.

கொரோனா காலத்திற்கு முன்பு வரை வாரம் ஒருநாள் மரங்களுக்கு ஜீவாமிர்த கரைசலை தண்ணீரோடு பாய்ச்சி வந்தேன். நாட்டு மாடுகள் இருப்பதால் அவற்றின் சாணம் தான் முக்கியமான உரம். மரங்களுக்கு கொடுத்தது போக மீதமுள்ள சாணத்தில் அழகிய கலைப்பொருட்கள் தயாரித்து விற்கிறேன்.

உதைக்காய், காவெட்டு, அரைவெட்டு காயாக வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். வியாபாரிகள் குறைந்த விலைக்கே எங்களிடம் வாங்குகின்றனர். சில்லறையாக கிலோ ரூ.50க்கு விற்கிறேன். ஆர்கானிக் கொய்யாவை வாங்குவதற்கு நிறைய பேர் தயாராக உள்ளனர். ஆனால் போக்குவரத்து செலவை ஒப்பிடும் போது லாபம் குறைவாக இருக்கிறது. இதனால் தோட்டத்தில் வந்து காய் எடுத்துச் சென்றால் ரூ.30க்கு தருகிறேன்.

ஊடுபயிராக கொடிக்கால், மாமரங்கள் தானாக வளர்ந்து காய்ப்பில் உள்ளது. பெயருக்கு வரப்போரமாக புளியமரங்கள் உள்ளன. வீட்டுத் தேவைக்கு அவ்வப்போது காய்கறிகளை பயிரிடுகிறேன். ஆண்டுக்கு ஒருமுறை மாட்டுச்சாணத்தை ஊட்டமேற்றி மரத்துக்கு 20 கிலோ தொழு உரம் மட்டும் போடுவேன். வெள்ளைப்பூச்சிகள் இருந்த போது தண்ணீர் தெளித்து கட்டுப்படுத்தினேன். மருந்து தெளிக்கவில்லை.

இயற்கை உரத்துடன் ஒப்பிடும் போது அதற்கேற்ப லாபம் கிடைக்கும். கொரோனா பிரச்னைக்கு பின் ஜீவாமிர்த கரைசல் கூட கொடுக்கவில்லை. மரங்களின் இலை, தழைகள் உதிர்ந்து தானாக உரமாகிறது. அதன் பின் உழவும் செய்யவில்லை. களை எடுக்கவில்லை. மருந்தும் தெளிக்கவில்லை. ஒரு காசு செலவில்லாமல் ஆர்கானிக் விவசாயம் செய்கிறேன். இயற்கை முறை என்பது வெளியிலிருந்து எதையும் வாங்கக்கூடாது. இதுதான் ஜீரோ பட்ஜெட் விவசாயம். ஆண்டுக்கு 2 சீசன் வீதம் மரத்துக்கு 50 கிலோ பழங்கள் கிடைக்கிறது.காலத்திற்கேற்ப எவ்வளவு பழம், எவ்வளவு பலன் கொடுக்க வேண்டும் என மரங்களுக்கு தெரியும். மரங்களை அதன் போக்கில் விட்டு விட்டேன் என்றார்.

இவரிடம் பேச: 99420 85413.

- எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை

Advertisement

 

மேலும் விவசாய மலர் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan - Srirangam, Trichy,இந்தியா
09-ஏப்-202109:12:27 IST Report Abuse
raghavan ஏதோ ஆட்சி மாற போகுதாம். நிலங்களை, பண்ணைகளை மிரட்டி அபகரிக்க வாய்ப்புள்ளதால் ..........
Rate this:
Cancel
Ganesan - Masurai,இந்தியா
09-ஏப்-202106:52:12 IST Report Abuse
Ganesan விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறுவது அவர்களுக்கும் நல்லது நுகர்வோர்களுக்கும் நல்லது. ஆம் விவசாயிகளுக்கு இயற்கை உரம் என்பதால் குறைந்த செலவு அதிக லாபம் அதேபோல் வாங்குவோருக்கும் உடலுக்கு எந்த கேடும் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X