இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2021
00:00

நண்பரின், 'நச்' ஐடியா!
எங்கள் பகுதியில், ஹோட்டல் வைத்திருக்கும் நண்பரை பார்க்க சென்றிருந்தேன். கல்லாவில் உட்கார்ந்திருக்க வேண்டியவர், டீ மாஸ்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
காரணம் கேட்டதற்கு, 'டீ மாஸ்டர் வேலையில யாரும் தொடர்ந்து இருக்க மாட்டேங்குறாங்க... கொஞ்ச நாள் வேலை செய்து, அப்புறம் சொல்லிக் கொள்ளாமல் ஓடிப் போயிடுறாங்க... நல்ல ஆளா தேடிட்டு இருக்கேன்...' என்றார்.
அப்போது, அங்கே வந்த இளைஞர் ஒருவர், டீ மாஸ்டர் வேலைக்கு வந்திருப்பதாக கூறினார்.
அவரை பற்றி விசாரித்து, 'என் கடையில் வேலைக்கு சேர, ஒரே ஒரு நிபந்தனை. வேலைக்கு வரும்போது, மொபைல் போன் எடுத்து வராமல் இருந்தால், ஒரு நாளைக்கு, 750 ரூபாய் சம்பளம். சாதாரண பட்டன் போன் வைத்திருந்தால், 600 ரூபாய். ஸ்மார்ட்போன் வைத்திருந்தால், 400 ரூபாய் தான் சம்பளம். இதற்கு நீ ஒத்துக்கொண்டால், இங்கு வேலை செய்யலாம். சம்மதமா...' என்றார், நண்பர்.
'இது என்ன, வித்தியாசமான நிபந்தனையா இருக்கு...' என்றேன்.
'வேலை செய்யும்போது, மொபைல் போனை நோண்டிக் கொண்டிருந்தால், கவனம் சிதற வாய்ப்புண்டு. வாடிக்கையாளர்களுக்கு சரியான சேவை கிடைக்காது. டீயில் சர்க்கரை போட வேண்டாம் என்று, வாடிக்கையாளர் கேட்டால், மொபைல் போனை பார்த்தபடியே சர்க்கரையை அதிகமாக போடும் வாய்ப்பு உண்டு. இம்மாதிரியான தவறுகளை செய்யாமல் இருக்கவே இந்த ஏற்பாடு...' என்று, விளக்கம் தந்தார், நண்பர்.
'என்னிடம், ஸ்மார்ட் போன் இருக்கிறது. ஆனால், நான் வேலைக்கு வரும்போது, அதை எடுத்து வரமாட்டேன். என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவசரத்திற்கு என்னை தொடர்பு கொள்ள, உங்கள் நம்பரை கொடுத்து விடுகிறேன், முதலாளி. என்னை நம்பி நீங்கள், இந்த வேலையை தரலாம்...' என்று உறுதிமொழி கொடுத்தான், அந்த இளைஞன்.
வேலையை விட, போன் முக்கியம் இல்லை என்பதை உணர்ந்து, பொறுப்பாக இருந்த அவனை, உடனடியாக வேலைக்கு சேர்த்துக் கொண்டார், நண்பர்.
நண்பரின் வித்தியாசமான இந்த முயற்சியை, மற்றவர்களும் பின்பற்றலாமே!
- வே. விநாயகமூர்த்தி, சென்னை.

நோய் தீர்க்கும் இசை!
நண்பனின் வயதான அம்மா, உடல்நலக் குறைவால், படுத்த படுக்கையாக இருப்பதை கேட்டு, பார்க்க சென்றிருந்தேன்.
அங்கு, நண்பரின் அம்மா அருகில், வானொலி பெட்டியில், மெல்லியதாக, பாடல் ஒலித்துக் கொண்டிருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டேன்.
'நோயாளிகள் அமைதியைதானே விரும்புவர். பாடல்கள் அவர்களுக்கு இடையூறாக இருக்காதா...' என்றேன்.
'வயதானவர்கள், தனிமையில் தன் உடல் வலி மற்றும் தேவையில்லாத பழைய கசப்பான நிகழ்வுகளை நினைத்து வருந்துவர். அதை திசை திருப்பவே, அம்மாவுக்கு பிடித்த, பழைய திரைப்பட பாடல்களை இசைக்க வைத்துள்ளேன்.
'மேலும், வயதானவர்கள், குழந்தைகளுக்கு ஒப்பானவர்கள். குழந்தைகளை துாங்க வைக்க, தாலாட்டு பாடுவது போல, இந்த பாடல்களை கேட்டுக் கொண்டே, வலியை மறந்து துாங்குவதால், பல நன்மைகள் உண்டாகிறது...' என்றான், நண்பன்.
வீட்டில் வயதானவர்கள் இருப்பின், நாமும், நண்பன் வழியில் அவர்களுக்கு நன்மை செய்யலாமே!
- வ. முத்துவேலன், சென்னை.

இப்படியும் ஒரு தலைமைஆசிரியர்!
அரசு பள்ளி ஆசிரியையாக இருக்கும், என் தோழியை பார்க்க, அவள் பணிபுரியும் பள்ளிக்கு சென்றிருந்தேன்.
தனியார் பள்ளியா என, வியக்கும் அளவிற்கு, அப்பள்ளியின் தோற்றம் என்னை பிரமிக்க வைத்தது.
சுற்றுச் சுவரில் துவங்கி, 'ஸ்மார்ட்' வகுப்பறை வரை, இயற்கை காட்சிகளும், விழிப்புணர்வு ஓவியங்களும் கண்ணை கவரும் வகையில் வரையப்பட்டிருந்தன.
பூக்கள், பழ செடிகள், மூலிகைகள், கீரை வகைகள் நிறைந்த தோட்டம் மற்றும் பள்ளி வளாகமெங்கும் வேம்பு, அரசன், கொன்றை, புங்கன் மரங்கள் என, அனைத்தும் அசத்தலாக இருந்தது.
இவற்றையெல்லாம் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், தம் சொந்த செலவில் செய்திருப்பதாக, தோழி கூறினாள்.
'அவரை, நேரில் பார்த்து, பாராட்ட வேண்டும்...' என்றேன்.
உடனே, 'அதுமட்டுமல்ல, மாதத்தின் முதல் வாரத்தில், மாணவர்களுக்கு மரக் கன்றுகளை வழங்கி, மரம் வளர்க்க ஊக்குவித்தல்; இரண்டாவது வாரத்தில், மருத்துவ முகாம் நடத்தி, மாணவர்களின் உடல் நலனை பராமரித்தல்; மூன்றாவது வாரத்தில், மாணவர்களின் தனி திறன், கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டிகள்...'நான்காவது வாரத்தில், நீதி போதனை கதைகள், நுாலக வாசிப்பு மற்றும் கைத்தொழில் பயிற்சிகள் என, நடத்துவார்...' என்றாள்.
அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய இத்தகைய ஆசிரியர்களால் தான், அரசு பள்ளிகள் இன்றும் நிலைத்திருக்கின்றன என்ற மகிழ்வுடன், தலைமை ஆசிரியரை நேரில் சந்தித்து, மனதார பாராட்டி வந்தேன்.
நர்மதா விஜயன், உளுந்துார்பேட்டை விழுப்புரம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL - tirumalai,இந்தியா
11-ஏப்-202119:46:12 IST Report Abuse
SENTHIL வேலை வாய்ப்புகள் இன்று நிறைய உள்ளன. எங்கும் படித்த ஆண் பெண் வேலைக்கு தேவை என விளம்பரங்கள்... அதே நேரம் வேலை தேடுவோர் ஒரு பக்கம் தேடிக்கொண்டே இருக்கின்றனர். வேலை கிடைத்தும் பல பேர் இது எனக்கு சரியாக இல்லை, ஆரம்ப சம்பளம் குறைவு, செல் போன் பேச தடை, போன்ற அற்ப காரணங்களை கூறி நின்று விட்டு அடுத்த வேலை வாய்ப்பை தேடுகின்றனர். அங்கும் எதாவது இதே மாதிரி காரணம் வந்தால் நிலைமை என்ன. எத்தனை இடங்களில் வேலைக்கு சேர்ந்து நிற்பது, இது சரியா? முக்கியமாக இன்று இளைஞர் ஆண்கள் பெண்கள் செல் போனிலேயே மூழ்கி கிடக்கின்றாநர். இது நல்லதல்ல. வேலைக்கு ஆட்கள் தேடுவோர் தகுந்த ஆட்களை அமர்த்துவதற்குள் நிறைய சிரம பட வேண்டி இருக்கிறது. நிலையாக ஓரளவு எதிர்பார்த்த படி இருந்தால் தானே அடுத்தடுத்த மாதங்களில் சம்பளம் அதிக படுத்தி கொடுக்கவோ வேறு சில படிகள் தரவோ நினைக்க முடியும்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
11-ஏப்-202112:22:00 IST Report Abuse
D.Ambujavalli இவர்களைத் தேர்ந்தெடுத்து, நல்லாசிரியர் விருது அளித்து அரசு ஊக்குவிக்கவேண்டும். மற்ற பள்ளிகளுக்கும் இத்தகைய நற்செயல்களை பரப்ப வேண்டும்
Rate this:
Cancel
வழிப்போக்கன் - Somerville, MA,யூ.எஸ்.ஏ
10-ஏப்-202120:47:25 IST Report Abuse
வழிப்போக்கன் செல்போன் அரட்டை அடிக்க மட்டும் அல்ல, ஆபத்துக்கும் உதவும். அதனை எடுத்து வராதே என்பது பேச உதவும் மற்றபடி நடைமுறைக்கு சரி அல்ல இன்று எல்லாமே செல்போனில் செய்யவேண்டிய அவசியம் உருவாகி இருக்கிறது. செல்போன் தேவை இல்லை என்ற நிலைப்பாட்டில் நானும் பல ஆண்டுகள் இருந்தேன். இன்று வங்கிகள் தங்கள் பரிவர்த்தனைக்கு கூட, அட ஓலா வரவழைக்க கூட செல்போன் தேவை. அந்த டீக்கடைக்காரர் சென்ற நூற்றாண்டில் அல்லது இமயமலையில் டீக்கடை நடத்தலாம்.
Rate this:
Kathiresan - Chennai,இந்தியா
11-ஏப்-202117:02:40 IST Report Abuse
KathiresanHe is looking for a 'tea master' in Chennai to make tea worth Rs.10 per cup not for a 5 hotel in Massachusetts. His argument may be a practical one for him....
Rate this:
gayathri - coimbatore,இந்தியா
12-ஏப்-202109:27:55 IST Report Abuse
gayathriஒரு சின்ன கேள்வி, அது போன்ற சொல்நிலையில் நெனெகல் இருந்தால் என்ன செய்வீர்கள் என்பதை கொஞ்சம் சொல்லலாமே. அப்புறம் நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில இது போடுற அலைப்பேசியை உபயோகித்தால் அதற்க்கு அனுமதி உண்டா?...
Rate this:
Manian - Chennai,ஈரான்
12-ஏப்-202113:49:01 IST Report Abuse
Manianஇப்படியும் ஒரு தலைமைஆசிரியர் - - ஐயோ, ஐயோ தலைமை ஆசிரியர் தங்கமூலம் ஐயா என்னாச்சு பேச்சி முத்து சார்? உளுந்தூர் பேட்டை தலைமை ஆசிரியை "காட்டுமிராண்டி" நம்ளை எல்லாம் பெரியாறு சொன்னது சரிதான். ஆனா ஒரு ஆரிய பொம்பளை தலைமை ஆசிரியை நமக்கு வற்ற மாமூலை கெடுக்குறானங்களேங்கறதை தாங்க முடியலையே கவலையை வுடுங்க பேச்சி முத்து சார் நம்ம எம்எல்ஏ நம்பியேகெடுத்தாரைப் பாத்து நான் ஒரு வார்த்தை சொன்னாப்போதும், மாமூல இல்லை மணிலாகொட்டகை பள்ளியான்னு அந்தம்மாவை காலி பண்ணிப் போடுவாரே இதெல்லாம் செய்ய, எவ்ளோ அரசாங்கப் பணத்தை திருடினே, ஒடனே 50,000 தந்தா சரி, இல்லாட்டி அரசாங்க சொத்து திருடல், தண்ணி செலவு, மத்தய பள்ளிக் கூடங்கையும் மாறணும்னு தூண்டிவுடுறே, ஏழைங்க படிக்கிற பள்ளியிலே, ஏர் கலப்பை வைக்காம சிங்காரமா? அரசாங்கமே பண நெருக்கடிலே, ரோடு போட முடியலை, எம்எல்ஏக்களுக்கு கட்டவுட்டு வச்சு பாலாபிசேகம் பண்ணலை, அப்ப இது ஏழைங்க மனதிலே தாழ்மை உணர்வை ஏற்படுத்தாதானு நான் கொடுக்குற துண்டு சீட்டை படிச்சார்னா, அந்தம்மா கதி என்னாகும்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X