அந்துமணி பதில்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2021
00:00

*ஆ. மோகன், அமராவதிபுதுார்: 'கழுதை தேய்ந்து கட்டெறும்பானது' என்ற பழமொழி, இன்று, எந்த தேசிய கட்சிக்கு பொருந்தும்?
இரு கட்சிகளுக்கு பொருந்தும். முதலாவது, காங்கிரஸ்; இரண்டாவது, கம்யூனிஸ்ட்டு கட்சி!

* பா. ஜனார்த்தனன், மதுரை: பா.ஜ., உட்பட அனைத்து கட்சிகளும் நடிகையரை சேர்த்துக் கொள்கின்றனவே... எதனால்?
காசு கொடுக்காமல் கூட்டம் சேர்க்க வேண்டுமே... அதனால் தான்!

எஸ். பார்வதி, மதுரை: என் தோழி, 'நேரம் வரட்டும் காரியங்களை பார்த்துக் கொள்ளலாம்...' என, பேசாமல் இருக்கிறாளே... கடலில் அலை ஓயுமா?
அந்த கதை தான் இது என்பதை, தோழிக்கு புரிய வையுங்கள்... அலை பாட்டுக்கு அடிக்கட்டும், நாம் நீந்துவோம் என்று எண்ணச் சொல்லுங்கள்!

ஜெ. கீதா, திருவண்ணாமலை: இன்று, தமிழகத்தில் உள்ள கட்சிகளில், எது மக்களிடம் நன்மதிப்பை பெற முடியும்?
குண்டர்கள் இல்லாத கட்சிகளால் மட்டுமே! உண்மையான தொண்டர்கள் உள்ள கட்சிகள் மட்டுமே, மக்களிடம் எடுபடும்!

* எஸ். பாஸ்கர், நெல்லை: எனக்கு நண்பர்கள் வேண்டும் எனத் தோன்றுகிறது. எப்படிப்பட்டவர்களை நண்பர்களாக்கிக் கொள்வது?
நெருக்கடி நேரும்போது, நமக்காக செலவு செய்பவனா என்பதை, முதலில் அறிந்து கொள்ளுங்கள்; அடுத்து, அறிவுள்ளவனாக இருக்க வேண்டும்; மேலும், துணிவுள்ளவனாக இருக்க வேண்டும். இந்த மூன்றில் ஒன்று கூட இல்லாதவர்களிடம் நட்பு வேண்டாம்!

கே. சேகர், வத்தலக்குண்டு: நான் என்னை கஞ்சன் என்று நினைத்துக் கொள்வதில்லை. ஆனால், என் நண்பர்கள் அப்படிச் சொல்கின்றனரே...
போகட்டும் விடுங்கள். இந்தக் காலத்தில் சிக்கனமாக இருப்பதே நன்று. நண்பர்களுக்காக, செலவாளியாக மாறி விடாதீர்கள்!

வி. கோபாலன், சிவகாசி: தேர்தல் முடிந்து விட்டது; கரும்புக் கரம் எது; இரும்புக் கரம் எது?
ஓட்டு வாங்கி விட்டவர்களின் கரம், இரும்பு; ஓட்டு போட்டவர்களின் கரம், கரும்பு!

ஆ. ஜெயபாலன், சிதம்பரம்: எனக்கு, துன்பங்கள் தொடர்ந்து வருகிறது; இதை எப்படி சமாளிப்பது?
துவளாதீர்கள்; அலையற்ற அமைதியான கடல் உண்டா; அவை, திறமையான மாலுமியை உருவாக்குமா?

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
11-ஏப்-202111:30:20 IST Report Abuse
Manian ஆ.மோகன்: கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பம் முதலே கட்டுறும்பாக இருந்தது, தற்போது சிற்றெறும்பாக தேய்ந்து விட்டது காங்கிரஸ் கர்வப்பட்ட ..இப்போ ... ஆக கேள்வி," கழுதை தேய்ந்து கட்டெறும்பானது, என்ற பழமொழி, இன்று, எந்த தேசிய கட்சிக்காவது பொருந்துமா" என்றல்லவா இருக்க வேண்டும் புதுச்சேரி சீட்டு கிடைக்காம தேம்பி அழும் தங்கப்பன்
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
11-ஏப்-202111:21:35 IST Report Abuse
Manian எஸ் பார்வதி: நண்பி அரசாங்க வேலையில் இருக்கும், படித்த படிப்புக்கு ஏற்ற சம்பளம் இல்லை என்றும் புலம்புவளா என்ற தகவல் இல்லாமல், எப்படி பதில் கூறமுடியும்?
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
11-ஏப்-202111:17:48 IST Report Abuse
Manian ஜெ, கீதா: யாரு அதிகமாக ஓட்டுக்கு காசு தருகிறார்களோ, அவருதான் அடுத்த எலக்ஷனிலும் தொகையை கூட்டி தருவார் என்று 70-80% கிராம மக்களின் நன்மதிப்பை பெருவார்கள். நகரத்தினர், மேல் மட்டம் அரசாங்க வேலை தரும் குறைந்த மாமூர்களே நன்மதிப்பை பெருவார்கள் -சுமார்15% மற்றவர்களின் (5%) நன்மதிப்பை பெருவதால் பயனில்லை, அவர்கள் நன்மதிப்பு கூவதோடு சரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X