இதப்படிங்க முதல்ல...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2021
00:00

வெறி ஏத்த சொல்லும் விஜய்!
சமூக விரோதிகளை அடித்து நொறுக்கும் கதைகளாக தேடிப்பிடித்து நடிக்கும் விஜய், தன் படங்களுக்கான, 'ஸ்கிரிப்ட்' வேலைகள் நடக்கும்போது, தான் படிக்கும், கேள்விப்படும் சில நாட்டு நடப்புகளையும் கதையில் புகுத்துமாறு இயக்குனர்களை கேட்டுக் கொள்கிறார். 'படத்தின் முதல் பாதியில் நாட்டு நடப்புகளை சொல்லும் அதே வேளையில், 'கிளைமாக்ஸில்' சமூக விரோதிகளான வில்லன்களை வெறித்தனமாக துரத்தி துரத்தி அடித்து வேட்டையாட வேண்டும். என்னோட படங்களின், 'கிளைமாக்ஸ்' ரசிகர்களுக்கு சும்மா வெறி ஏத்துற மாதிரி இருக்க வேண்டும்...' என்று, அதிரடியான காட்சிகளை வைக்க சொல்கிறார். இதனால், விஜய் படங்களின், 'ஸ்கிரிப்ட்' வேலைகள் நடக்கும் இடத்தில், உதவி இயக்குனர்களிடையே கடுமையான விவாதம் ஏற்பட்டு, சில சமயங்களில் ரணகளமாகி வெறி ஏறிப் போகின்றனராம்.
சினிமா பொன்னையா

மாளவிகா மோகனனின், 'ஹீரோ' பட்டியல்!
மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடித்த, மாளவிகா மோகனனுக்கு, முதல் தர நடிகையாக வேண்டும் என்பதே நோக்கம். இதனால், தனுஷுடன் மட்டுமே ஒரு படத்தில், ஒப்பந்தமாகி இருப்பவர், சில மூன்றாம்தட்டு, 'ஹீரோ'கள் படங்கள் தேடி வந்தபோது, தவிர்த்து விட்டார். அப்படி வந்த இயக்குனர்களிடம், தமிழ், தெலுங்கில் உள்ள சில மேல்தட்டு, 'ஹீரோ'களின் பெயரை பட்டியலிட்டவர், 'இவர்களுடன் நடிக்கும் வாய்ப்பு என்றால், கதையே கேட்காமல் நடிப்பேன். கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக் கொள்வேன்...' என்று, தன் நிலைபாட்டை வெளிப்படுத்தியுள்ளார், மாளவிகா மோகனன். ஓடி ஒரு கோடி தேடுவதிலும் இருந்து, ஒரு காசு தேடுவது நலம்!
எலீசா

சொப்பன சுந்தரியாகும், இலியானா!
'டாப் ஆங்கிளில்' தன், 'டூ - பீஸ்' புகைப்படங்களை வெளியிட்டு, இளசுகளை கிறங்கடித்து வரும், இலியானா, சமீபத்தில், கோலிவுட்டுக்கு வந்து பட வேட்டை நடத்தியுள்ளார். அதோடு, வெளிநாட்டு காதலருடனான, 'லிவிங் டு கெதர்' வாழ்க்கை, கதம் கதம் ஆகி விட்டது என்பதை வெளிப்படையாக சொல்லி, 'இப்போது, நான் முரட்டு சிங்கிள். அதனால், எந்தவித, 'டார்ச்சரும்' கொடுக்காமல், படத்தை முடித்துக் கொடுப்பேன். இளசுகளின் சொப்பன சுந்தரியாகும் அளவுக்கு கவர்ச்சிகரமான நடிப்பால் சொக்க வைப்பேன்...' என்றும், உத்தரவாதம் கொடுத்துள்ளார். அதை விட்டாலும் கதி இல்லை, அப்புறம் போனாலும் விதி இல்லை!
 எலீசா

இளவட்ட, 'ஹீரோ'களின் கனவை கலைக்கும் நயன்தாரா!
சிவகார்த்திகேயன் போன்ற இளவட்ட நடிகர்களுடன் சில படங்களில் நடித்தார், நயன்தாரா. அதைப்பார்த்து, 'உங்களைப் பார்த்தால், காதலன்- - காதலி போல் இல்லை. அக்கா- - தம்பி போன்று இருக்கிறது...' என்று, ரசிகர்கள் வெளிப்படையாகவே விமர்சித்தனர். இதையடுத்து, இளவட்ட, 'ஹீரோ'களின் படங்களை தவிர்க்கிறார்; 'மெச்சூரிட்டி'யான, 'ஹீரோ'களுடன், 'டூயட்' பாட மட்டுமே, ஓ,கே., சொல்கிறார். யாராவது இளசுகள், 'உங்களுடன் ஒரு படத்திலாவது, 'டூயட்' பாட வேண்டும் என்பது, என் நீண்டநாள் கனவு. என் கனவை நீங்கள் தான் நனவாக்க வேண்டும்...' என்று துரத்தினால், 'அதெல்லாம் நடக்காது தம்பி, அக்கா கூட, 'டூயட்' பாட யாராவது ஆசைப்படுவரா?' என்று சொல்லி, அவர்களின் கனவை கலைத்து அனுப்பி வைக்கிறார், நயன்தாரா.
சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!
சமீப காலமாக பல சர்ச்சைகளில் அடுத்தடுத்து சிக்கி வருகிறார், பீட்சா நடிகர். ஆனபோதும், அதுகுறித்து நடிகர் பெரிதாக, வருத்தப்படுவதாக தெரியவில்லை. 'காய்க்கிற மரம் தான் கல்லடி படும் என்பது போன்று, நான் சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கிறேன். என் மீது அனைவரது கவனமும் இருப்பதால், சிறிய விஷயத்தை கூட ஊதி பெருசாக்கி விடுகின்றனர்...' என்று, 'கேஷுவல்' ஆக சொல்கிறார். அதோடு, 'இது பத்தாது, இன்னும் நிறைய சர்ச்சைகளை எதிர்பார்க்கிறேன்...' என்று, 'தில்'லாக சொல்லி, நல்லெண்ண அடிப்படையில், 'அட்வைஸ்' கொடுத்தவர்களை, வாயடைக்க வைத்து விடுகிறார்.
'அடேய் பேராண்டி... உன் பாட்டன் மாதிரி அறிவு, வீரம், செல்வாக்கு எல்லாம் உனக்கும் கிடைத்து, பேரும், புகழோடு வாழணும்ன்னு தான், உனக்கு, எம் புருஷன் பேரான, விஜய்சேதுபதின்னு வெச்சேன். நீ என்னடான்னா, அடுத்த வீட்டு புள்ளைங்கள வம்புக்கிழுத்துக்கிட்டு, அடி - உதைன்னு அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருக்கே. வேணாம்டா... நல்லவிதமா நடந்துக்கடா...'
'கவலைப்படாத பாட்டி... நீதானே அடிக்கடி சொல்லுவே... தாத்தா மாதிரி வரணும்ன்னு. அதுக்குதான், இப்பலேர்ந்து, 'டிரைனிங்' எடுத்துக்கறேன். சும்மா இருந்தா, யார் பாட்டி கவனிப்பா... இப்படி ஏதாவது அதிரடியா செய்து, மத்தவங்க கவனத்த நம் பக்கம் திருப்பணும். இல்லாட்டி, மறந்துடுவாங்க. அதெல்லாம் உனக்கு தெரியாது பாட்டி, நான் இந்த ஊர்ல பெரிய மனுஷனா ஆகி காட்டுறேன்...'
'என்னவோ செய்து தொலை...' என்று, அலுத்துக் கொண்டார், பாட்டி.

சினி துளிகள்!
* பத்து படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ள, விஜய்சேதுபதி, 'வெப்சீரியல்'களிலும் நடிக்க, 'கால்ஷீட்' கொடுத்து வருகிறார்.

அவ்ளோதான்!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X