திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2021
00:00

'பன்முக ஹிந்தி நடிகர், ராஜ்கபூர்' நுாலிலிருந்து: அண்டை நாடான பாகிஸ்தான், பெஷாவர் நகரில் பிறந்தவர், ராஜ்கபூர். நடிகர் திலிப் குமார் மற்றும் வினோத் கன்னாவும் பெஷாவரில் தான் பிறந்தனர். இவர்கள் தவிர, பாகிஸ்தானில் பிறந்த மற்றும் சில ஹிந்தி பட உலக பிரபலங்களை அறிந்துகொள்வோம்.
ராஜேந்திரகுமார் - சியல்காட், சுனில் தத் - ஜீலம்,
சாதனா - கராச்சி,
தேவ் ஆனந்த் - சாகர் கார்க்,
குல்சார் - டினா,
சுரேஷ் ஓபராய் - குயூட்டா, ராஜ்குமார் குடும்பம் - லுராலாய், ராஜேஷ்கன்னா - புரேவாலா மற்றும் அமிதாப்பச்சன் அம்மா,
தேஜி பச்சன் - பைசலாபாத்.
* ராஜ்கபூர் வீடு இன்றும் பாகிஸ்தானில் உள்ளது. இதை புதுப்பித்து, நினைவு இல்லமாக மாற்றும் முயற்சியை, பாகிஸ்தான் அரசு துவங்க உள்ளது
* 'ஸ்டார்டஸ்ட்' என்ற ஆங்கில இதழ், ராஜ்கபூரை, 'ஆயிரம் நுாற்றாண்டின் சிறந்த இயக்குனர்' என, கவுரவித்தது
* கனடா நாட்டின், டொரென்டோ நகரில், ஒரு தெருவுக்கு, ராஜ்கபூர் பெயரை வைத்துள்ளனர்
* ராஜ்கபூர் நடித்த பல படங்கள், ரஷ்யாவில் ஓடியுள்ளன. ஆவாரா படத்தை, ஆறு கோடி ரஷ்யர்கள் பார்த்ததாக கூறப்படுகிறது. ராஜ்கபூர், ரஷ்யா சென்றபோது, இந்த படத்தில் அவர் பாடிய, 'மைன் ஆவாரா ஹும்' பாடலை, திரும்பத் திரும்ப பாடச் சொல்லி கேட்டனர்
* ஸ்ரீ420 படத்தில் இவர் பாடிய, 'மேரா ஜோட்டா ஹை ஜப்பானி; யே பேட்டலுான் இங்கிலீஷ் டானி; சர் பேலால் டோபிரூஸி; பிர் பி தில் ஹை இந்துஸ்தானி...' பாடல் மிக பிரபலம்.
இதன் தமிழ் அர்த்தம், 'என் காலணிகள், ஜப்பான்; அணிந்திருக்கும் ஆடை, இங்கிலாந்து; தலையில் உள்ள தொப்பி, ரஷ்யா; இருந்தாலும் என் இதயம் இந்தியன்' என்பதாகும்.
அன்னிய நாட்டு பொருட்களின் மோகம், இந்தியர்களுக்கு போகவில்லை என்பதை சுட்டிக் காட்டும் பாடல். இதை பின்னாளில் பலர், பல சந்தர்ப்பங்களில், மக்களிடம் பாடி காட்டியுள்ளனர்
* தன், 63வது வயதில் காலமான ராஜ்கபூர், 11 பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார்
* கடந்த, 198௭ல் ராஜ்கபூருக்கு, 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்கப்பட்டது
* ராஜ்கபூருடன் மிகவும் இணைத்து பேசப்பட்டவர், நர்கீஸ். 16 படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர்
* ராஜ்கபூரின் குரலாகவே பல படங்களில் பாடியவர், முகேஷ். முகேஷ் இறந்தபோது, 'என் குரல் போய் விட்டது...' என்றார், ராஜ்கபூர்
* ஆஸ்தான இசையமைப்பாளர், சங்கர் ஜெய்கிஷன். ராஜ்கபூரின், 18 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அருணா பப்ளிகேஷன்ஸ், எஸ்.அனிதா எழுதிய, 'படித்தாலே பரவசம் - ராஜாஜியின் சுவையான உவமைகள்' நுாலிலிருந்து: அடுத்த ஆண்டு பயிரிடும் பொருட்டு, விதை நெல்லை சேமித்து வைக்கிறான், விவசாயி. பயங்கர பஞ்சம் தலைவிரித்தாடும் காலத்திலும், விதைக்காக வைத்திருக்கும் தானியத்தை, சாப்பாட்டுக்காக பயன்படுத்திக் கொள்ள விரும்ப மாட்டான்.
வருங்கால சமூகத்து விதை போன்றவர்கள், நம் மாணவர்கள். சுதந்திர போரிலோ, நாட்டில் நடக்கும் கிளர்ச்சிகளிலோ அவர்களை ஈடுபட செய்வது, தவறான செயல். இந்தியாவின் வருங்கால மேன்மையை உத்தேசித்து, அவர்கள் நன்றாக படித்து, அறிவை வளர்த்து, பிற்காலத்தை சமாளிக்க தயாராக வேண்டும்.
பிச்சைக்காரர்களுக்கென்று தனி விடுதி அமைக்க வேண்டுமென்று கற்பனை செய்வது சுலபம். ஆனால், காரியம் சாத்தியமில்லை. ஊரில் கொஞ்சம் பிச்சைக்காரர்களா இருக்கின்றனர்... நகரத்திலும், நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமாய் வியாபித்திருக்கின்றனர்.
எனவே, அவர்களுக்கு தனி விடுதி கட்டுவது, முடிகிற காரியமல்ல. கொசுக்களை பிடித்து வைத்து விட்டால், கொசு உபத்திரவமே நீங்கிவிடும் என்று நினைப்பது போல் தான், பிச்சைக்காரர்களுக்கு விடுதி அமைக்கும் யோசனையும்.

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pirandai - Srivilliputthur,இந்தியா
15-ஏப்-202120:49:54 IST Report Abuse
pirandai ராஜ்கபூரின் படங்கள் எல்லாமே கதாநாயகியையும் மற்ற பெண்களையும் நடனங்களிலும் காதல் காட்சிகளிலும் உடை குறைத்து ஆபாசமான தரக்குறைவான ரீதியில் காண்பித்து காசு வியாபாரம் செய்யப்பட்டவை. முகத்தில் ஒரே பாவத்தை கொண்டு, அப்பாவி கதாபாத்திரத்தை தவிர வேறெதுவும் செய்ததில்லை தமிழில் அருவருக்கத்தக்க விரச வசனங்களையும் சேர்த்து பாக்கியராஜும் இதையேதான் செய்து பிழைப்பு நடத்தினார். இவர்களுக்கெல்லாம் விருதுகள் கேவலம்
Rate this:
Manian - Chennai,ஈரான்
17-ஏப்-202103:27:51 IST Report Abuse
Manianஇது விருது கொடுத்தோர்க்கு தெரியவில்லையே...
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
14-ஏப்-202110:26:48 IST Report Abuse
Manian "வருங்கால சமூகத்து விதை போன்றவர்கள், நம் மாணவர்கள்" - இது உண்மையில் நடந்தது. காசி பல்கலை கழக வேதாந்த பிரிவின் தலைவராக இருந்தவர் பத்மபூஷண் திருப்பத்தூர் ராமசேஷய்யர் வெங்கடாசல மூர்த்தி என்பவர் "பௌத்த மதத்தின் மய்ய வேதாந்தம்"(Central Philosophy of Buddhism- Allen Unwin 13 Ed, London) என்ற அபூர்வமான ஆராய்ச்சி செய்தவர். உலக பௌத்த மத தலைவர்களால் வணங்கப்பட்டவர். சைவசித்தாந்தம், மேற்கு நாட்டு வேதாந்தங்கள் மூன்றிலும் தலை சிறந்தவர். சமிஸ்கிருத வல்லுனர். மதுரை தமிழ் சங்க பொற்பதக்கம் வென்றவர். அவரும் அவர் மூத்த சகோதரர், கோவிந்த ராஜ சர்மா( சென்னைராம கிருஷ்னா மட மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்) இருவரும் திருச்சி ஸெயின்ட்ஜோசப் கல்லூரியில் 2வது வருஷ இண்டர்மீடியட்டு படிப்பை விட்டு காந்தீஜியின் சுத்திர போராட்டத்தில் சேர நடந்தே வார்தா போய் சேர்ந்தார்கள். ஆனால் அவர்கள் தந்தை காந்திஜிக்கு எழுதினாராம்-"சுதந்திர போராட்டத்தில் இளைஞர்கள் எல்லாம் இறந்த பின், சுதந்திரம் கிடைத்த பின் ஆட்சி செய்ய இளைஞர்களை எங்கே தேடுவீர்கள்? காந்தி அந்த இளைஞர்களை திரும்ப போக சொன்னாராம். கதரையே கடைசிவரை உடுத்திய அவர்கள் ஊருக்கு திரும்பாமல், காசியில் படித்து மேலே மேன்மை பெற்றார்கள். ராஜஸ்தான் பல்கலை கழக துணைவேந்தர் கிருஷனா 2003ல் 'பேராசிரியர் டிஆர்வி மூர்த்தியின் 100 ஆண்டு விழாவில் ' பேசியதை கேட்டேன்.
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
11-ஏப்-202123:30:29 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI ராஜ்கபூர் நடிப்பில் வந்த அத்தனை படங்களும் அருமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X