அறிந்த ராமன், அறியாத கதை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2021
00:00

இந்திய மக்களின் உயிரோடும் உறவோடும் கலந்து விட்டவர், ராமபிரான். அவரது பிறந்த நாளே, ராம நவமி.
சுப நிகழ்ச்சிகளுக்காக எவரும், நவமி திதியை தேர்வு செய்வதில்லை. ஆனால், ராமபிரான் தன் பிறந்தநாளுக்காக, நவமி திதியை தேர்ந்தெடுத்தார்.
எது நமக்கு வேண்டாம் என, கருதுகிறோமோ, அதை கடவுள் ஏற்றுக் கொள்கிறார் என்பதற்கு, இது உதாரணம்.
அவரது நாமமான, ராம என்பதை, மூன்று முறை உச்சரித்தால், ஆயிரம் முறை உச்சரித்த பலன் நமக்கு கிடைக்கும். அந்த மந்திரம் தான், ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சகஸ்ரநாமதத்துல்யம் ராம நாம வரானனே...
இந்த மந்திரத்தின் பொருளை தெரிந்து கொள்ளுங்கள்.
ராம எனும் பெயரை, மனதார தியானிப்பதில், நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மந்திரத்தை சொல்வது மூலம், விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களை சொன்ன பலனை அடைகிறேன்.
அதாவது, இந்த மந்திரத்தை சொல்வதன் மூலம், விஷ்ணு சகஸ்ர நாமத்தை கூறிய பலனை அடைகிறோம். சகஸ்ரநாமம் என்றால், ஆயிரம் பெயர்கள்.
ராம நாமத்தின் மகிமையை விளக்க, ஒரு சம்பவத்தை எடுத்துக் காட்டலாம்.
ராம பட்டாபிஷேகத்தில் கலந்து கொண்டார், நாரத முனிவர்; கலகக்காரர். ராம நாமத்தின் மகிமையை உலகறியச் செய்ய, ஒரு தந்திரம் செய்தார். இதற்காக, அனுமனை வம்புக்கு இழுத்தார்.
'அனுமானே... நீ அனைத்து முனிவர்களிடமும் ஆசி பெறு. ஆனால், விஸ்வாமித்திரரின் காலில் மட்டும் விழாதே...' என்றார்.
அனுமனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இருந்தாலும், நாரதர் சொன்னபடி செய்தார். இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, விஸ்வாமித்திரர்.
இதுதான் சமயமென, விஸ்வாமித்திரரிடம் சென்று, 'பார்த்தீர்களா, இந்த அனுமனின் திமிரை... நீங்கள் எவ்வளவு பெரிய தபஸ்வி. உங்களை அவன் மதிக்கவில்லை...' என்றார், நாரதர்.
இதைப்பார்த்த ராமபிரான், முனிவரை மதிக்காத அனுமன் மீது, அம்பு எய்து கொல்ல உத்தரவிட்டார்.
சற்றும் கவலைப்படாமல், 'ராம... ராம...' என்று, உச்சரித்தபடி நின்றார், அனுமன்.
எல்லா அம்புகளும் கீழே விழுந்தன. அனுமன் மீது, சிறு கீறல் கூட விழவில்லை.
உடனே, 'ராம நாமத்தின் மகிமையை அனுமன் மூலம் உலகுக்கு தெரியப்படுத்தவே, இப்படி ஒரு நாடகம் ஆடினேன்...' என்றார், நாரதர்.
ராமநவமியான, ஏப்., 21 அன்று, நீங்களும் ராம நாமம் சொல்லுங்கள். உயிருக்கு ஆபத்தான காலத்தில், இந்த நாமம் நம்மை பாதுகாக்கும்.
ஸ்ரீ ராம ஜெயம்.

தி. செல்லப்பா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
20-ஏப்-202110:25:49 IST Report Abuse
Manian இது போலவே கருணா என்ற மந்திரம் சர்க்காரியா கமிட்டி எய்த குற்ற அம்புகளையும் தடுத்துவிட்டது. இந்திராவும் பெருமூச்சு விட்டார். ஆகவே நைனாதான் கலியுக திராவிட அனுமன் தொளபதி-உதயநிதி-துர்கா-கவிதாயினி குழு .( நான் முதல்வரானதும், எல்லா அனுமார் கோவிலிலும், நைனா அர்ச்சனை செய்ய முதல் கையெழுத்து போடுவேன். "கருணா நைனா காந்தஸ்மரணம், ஜே ஜே கருணா நாயுடு" கோஷம் ஒலிக்கும் தொளபதி சூளுரை).
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
18-ஏப்-202106:22:04 IST Report Abuse
Manian ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே, சகஸ்ர நாம தத் துல்யம் ராம நாம வரானனே. பிரித்து பல தடவை சொன்னதும், தேவையான இடங்களில் சொற்கள் இணைந்து(சந்தி) வந்து விடும். இவ்வாறு தற்போது சமிஸ்கிருதம், தமிழ் கற்பிப்பது சுலபமாக மொழித் திறமை மேன்படும். இது குற்றம் சாட்ட எழுதவில்லை. செல்லப்பாவிற்கு நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X