இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2021
00:00

உழைக்கும் முதியோருக்கு உதவலாமே!
ஏதேனும் பொருளை விற்பனை செய்யும் பொருட்டு, தலைச்சுமையோடு முதியோர் யாரேனும் எங்கள் தெருவுக்கு வந்தால், அவரை ஓரிடத்தில் அமரச் செய்து, அப்பொருள் தேவைப்படும் வீடுகளுக்கும், கடைகளுக்கும், நேரிடையாகவோ, மொபைல் போனிலோ தகவல் தெரிவித்து, விற்பனையும் செய்து தருவர், எங்கள் பகுதி இளைஞர்கள். அதோடு நில்லாமல், யாராவது ஒருவர் வீட்டிலிருந்து, அந்த முதியவருக்கு உணவும் ஏற்பாடு செய்து கொடுப்பர்.
நான்கு நண்பர்கள் கூடினால், குடித்து, புகைத்து, ஊதாரியாக அரட்டையடித்து, உருப்படாமல் போவர் என்பதை மாற்றி, உழைக்கும் முதியோருக்கு உதவும் மனப்பாங்கோடு அவர்கள் இருப்பது, எங்கள் பகுதியினருக்கு பெருமை தருவதாக உள்ளது.
முதியோருக்கு உதவுவதன் மூலம், வேலையில்லாத இளைஞர்கள், தற்சமயம் சுயதொழில் செய்யவும் ஆரம்பித்துள்ளனர்.
வேலையில்லா இளைஞர்களே... நீங்களும், உங்கள் பகுதி உழைக்கும் முதியோருக்கு உதவிடுங்கள். அவர்கள் மூலம் வேலையின்மையை விரட்டி, சுயதொழிலில் ஈடுபடுங்கள்.
ஆர். செந்தில்குமார், மதுரை.

ஸ்வீட் வேண்டாம்; காய் - கனிகள் போதும்!
எங்கள் வீட்டிற்கு வந்த தாய் மாமன் குடும்பத்தார், காரிலிருந்து இரண்டு மூட்டைகளை இறக்கினர். அதில், இரண்டு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் இருந்தன.
மாமாவை வரவேற்ற அம்மா, 'ஏண்டா, இப்படி மூட்டையை சுமந்து வந்திருக்கிறாயே, என்ன வேலை இது...' என்று, திட்டினார்.
'அக்கா... நம் ஊரில் ஒரு பெரியவர், 'அக்கா வீட்டிற்கு போகிறேன் என்கிறாயே, ஸ்வீட், பலகாரம் வாங்குவதற்கு பதில், சத்தான, பசுமையான காய்கள் வாங்கி கொண்டு போய் கொடு...' என்றார். ஸ்வீட், காரம், பிஸ்கெட் வாங்குவதை விட, பசுமையான சத்தான காய்கறிகள் வாங்கி வந்தால், உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என, வாங்கி வந்தேன்...
'மேலும், 1,000 - 500க்கு, சுவீட், எண்ணெய் பலகாரத்தை வாங்குவதை விட, 'கொரோனா' காலத்தில், சத்தான, பசுமையான காய்கறிகள் மேலானவை. நோய் எதிர்ப்பு சக்தி தரும் காய்கறிகள் உடல்நலத்திற்கு நல்லது. அந்த எண்ணத்தில் தான் வாங்கினேன்...' என்றார்.
உறவினர்கள், நண்பர்கள் வீட்டிற்கு போக சந்தர்ப்பம் ஏற்பட்டால், இதுபோன்ற சத்தான, பசுமையான பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கிச் செல்லுங்கள். வீட்டில் உள்ளவர்களும் சந்தோஷத்துடன், எந்த அச்சமும் இல்லாமல் சாப்பிடுவர்.
ஏ.எம்.இஸ்மாயில், திருப்பூர்.

உறவுகளை புதுப்பிக்கும், 'பாட் லக்' விருந்து!
ஞாயிறன்று, தன் குடியிருப்பில், வித்தியாசமான விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக, என்னை அழைத்தார், நண்பர். விருந்துக்கு, இரவு, ௭:௦௦ மணிக்கு வரும்போது, எங்கள் வீட்டு, 'ஸ்பெஷல் அயிட்ட'மான சுண்டலை செய்து எடுத்து வருமாறும் கூறினார்.
'அப்பார்ட்மென்ட்' பின்புறம், ஷாமியானா பந்தல் போட்டு, அனைவரது வீட்டிலிருந்தும் எடுத்து வந்திருந்த உணவு பதார்த்தங்களை மேஜையில் வைத்திருந்தனர்.
சிறிது நேரத்தில், அறிமுகப்படலம், குசல விசாரிப்புகள், தங்கள் பிரச்னைகள், சந்தோஷங்களை பகிர்ந்தவாறு, எடுத்து வந்த பதார்த்தங்களை உண்டு மகிழ்ந்தோம்.
'இதற்கு, 'பாட் லக்' விருந்து என்று பெயர். அனைவரும், தங்கள் வீடுகளில் சமைத்த உணவுகளை எடுத்து வந்து, கூட்டாஞ்சோறு போல, ஒருவருக்கு ஒருவர் பரிமாறி உண்ணும் முறை.
'பொதுவாக, கார்ப்பரேட் நிறுவனங்களில் இதை கடைப்பிடிப்பர். இம்முறையை, 'அப்பார்ட்மென்ட்' நண்பர்கள் மத்தியில், மூன்று மாதத்திற்கு ஒருமுறை செய்வதால், அனைவருடனும் பேசி மகிழவும், தங்கள் மன அழுத்தத்தை போக்கும் வாய்ப்பாகவும் இருக்கிறது...' என்றார், நண்பர்.
'கெட் டுகெதர்' என்றாலே, நண்பர்களின் உற்சாகபான பார்ட்டி தான் என்ற நிலை மாறி, இதுபோன்ற ஆரோக்கியமான சந்திப்பாகவும் அமைந்தது, வியப்பாக இருந்தது.
நவீன யுகத்தில், பண்டைய கால கூட்டாஞ்சோறு, நிலாச்சோறு போன்ற நிகழ்வுகள் அரிதாகிவிட்ட போதும், இதுபோன்ற, 'பாட் லக் பார்ட்டி' மூலம் உணவை மட்டுமல்லாது, நம் அன்பையும் பரிமாறிக் கொள்ளலாமே!
எம். விக்னேஷ், மதுரை

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
22-ஏப்-202114:44:19 IST Report Abuse
Natarajan Ramanathan நான் பல வருடங்களாக இந்தமாதிரி செல்லும் இடங்களுக்கு தகுந்தவாறு அவர்கள் விரும்பும் காய்கறிகளை நான்கு ஐந்து வகை வாங்கி செல்வது வழக்கம்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
21-ஏப்-202103:04:26 IST Report Abuse
Girija @எம். விக்னேஷ், மதுரை சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் மாதாந்திர மெய்ன்டினான்ஸ் கூட தராத கல்லுளிமங்கங்கன் கல் தான் அதிகம் . இதுல புறா கூண்டில் பார்ட்னெர்ஷிப் ஆம் . சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசிப்பது அல்லது வீட்டை வாங்குவது வடிவேலு பார்த்திபன் காமெடி கதைதான் . @ஆர். செந்தில்குமார், மதுரை சென்னை அல்லாத மற்ற நகரங்களில் கோயமுத்தூர் போன்ற ஊர்களில் புடவைக்காரர் ஜமுக்காளம் பெட்ஷீட் வியாபாரிகள் வளையல் காரர்கள், தங்கள் பொருட்களை வழக்கமா ஒரு வீட்டில் இறக்கிவைத்துவிட்டு அந்த தெருவில் உள்ள மற்ற வீட்டு பெண்மணிகளை அழைத்து வந்து விற்பனை செய்கின்றனர் மாத தவனையும் உண்டு . @ஏ.எம்.இஸ்மாயில், திருப்பூர். குழந்தைகளும் பெரியவர்களும் விருந்தினர் வரும்போது எதிர்பார்ப்பது புதிய வகை சுவீட் சாக்லேட் பிஸ்கட் சமோசா பழங்கள் மாம்பழம் திராட்சை போன்றவற்றை தான்.
Rate this:
Manian - Chennai,ஈரான்
21-ஏப்-202111:22:14 IST Report Abuse
Manianகொரோனாவுக்கு ஊசி போடாம, குடும்பத்தோட யமலோகம் போனா, வாடகையில்லாம அங்கே ஜாலியா இருக்கலாமே, அதான் நான்தான் மருத்துவர்னு போலி ஜாதி சான்றிதழிலே மருத்துவராயிட்டேனே ::விக்கினேஷு, மதுரை...
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
19-ஏப்-202117:34:56 IST Report Abuse
D.Ambujavalli இந்த பாட்லக் முறை நம் பக்கம் வந்தும் வெகு காலமாய்விட்டது இளைஞர்கள் நல்ல உள்ளனர், வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X