திண்ணை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2021
00:00

'சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு' நுாலிலிருந்து: வறுமையால் பள்ளி செல்ல முடியவில்லை, சார்லி சாப்ளின். அவருக்கு, அம்மா தான் ஆங்கிலம் கற்பித்தார்.
சிறு வயதிலேயே நீண்ட வசனங்களை இலகுவாக மனப்பாடம் செய்து பேசுவார்.
தன், 17வது வயதில், சர்க்கசில் சேர்ந்து சாகசங்கள் செய்தார், சாப்ளின். அங்கு, மிக நீண்ட வசனங்களை, அழகாகவும், ஏற்ற இறக்கத்தோடும் பேசினார். ஒரு சிலரே அதை ரசித்தனர்; பலர், உம்மணாமூஞ்சியாக இருந்தனர்.
கோபம் கொண்ட சாப்ளின், சர்க்கஸ் நிர்வாகியிடம், 'யார் இவர்கள்... மனிதர்களா, மிருகங்களா... ரசிக்கத் தெரியவில்லையே...' என, கேட்டார்.
'சாப்ளின், அவர்கள் மேல் தவறு இல்லை. அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாதே... எப்படி ரசிப்பர்...' என்றார், நிர்வாகி.
பிறகு, புது முயற்சியில் இறங்கிய சாப்ளின், 'பாடி லாங்வேஜ்' என்ற, உடல் மொழியை கடைப்பிடித்தார். பல பக்கங்களை கொண்ட நீண்ட வசனங்களை, உடல் அசைவுகளால், முக பாவங்களால் செய்து காட்டினார்.
அந்த மவுன வசனங்களை கண்டு உலகமே ரசித்தது; வயிறு குலுங்க குலுங்க சிரித்தது. இன்றைக்கும், உடல் மொழியின் தந்தை, அவர் தான்!

'அலை ஓசை' எம்.பி.மணி எழுதிய, 'வழி நெடுக...' நுாலிலிருந்து: பள்ளியில் படித்த காலத்தில், சிவாஜி என்று எனக்கு சொல்ல வராது. ஜிவாசி என்று தான் சொல்வேன். அதற்காக வாத்தியாரிடம் அடிபட்டிருக்கிறேன்.
அப்படிப்பட்டவனுக்கு நடிகர் சிவாஜியுடன் பழக சந்தர்ப்பம் கிடைத்தால் எப்படி இருக்கும். சிவாஜியுடன் பழக மட்டுமல்ல, அவர் குடும்பத்தில் ஒருவனாகவே கருதப் பட்டிருக்கிறேன்.
சிவாஜியின் தம்பி வி.சி.சண்முகம் மற்றும் அண்ணன் வி.சி.தங்கவேலு மட்டுமின்றி, குடும்பத்தில் உள்ள அனைவரும் என்னிடம் ப்ரியம் கொண்டவர்கள். சிவாஜியின், 'அன்னை இல்ல'த்தில் எனக்கு செல்ல பெயரே, 'மலை ஓசை அணி!'
பின்னாளில், 'அலை ஓசை' பத்திரிகையில், நான் எழுதிய கட்டுரை தொடர்களையெல்லாம் ஒன்று விடாமல் படித்தார், சிவாஜி.
'உன் எழுத்தில் என்னவோ இருக்குது. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சில, 'கட்டிங்ஸ்' எடுத்து வெச்சிருக்கேன்...' என்று, ஒருமுறை, சிவாஜி என்னிடம் சொல்ல, பெருமை பூரிப்பில், என் காலர் உயர்ந்ததுண்டு.
ஒருமுறை, அவரை பேட்டி காண நேரம் வாங்கியிருந்தேன். அன்று, அவருக்கு படப்பிடிப்பு. அவர் வீட்டில் நாங்கள் சந்தித்து, ஸ்டுடியோவுக்கு காரில் போகும்போதே பேட்டி எடுப்பதாக திட்டம்.
அன்று, நான் ரொம்ப தாமதமாகி விட்டேன். காலை, 9:00 மணிக்கு படப்பிடிப்பு என்றால், 8:55க்கே, 'மேக் - அப்'புடன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் பழக்கம் உள்ள சிவாஜிக்கு, அன்று, என்னால் மிகவும் தாமதமாகி விட்டது.
என்னிடம் வாகனம் எதுவும் இல்லை. அதனால் தான் தாமதம் என்பதை அறிந்த சிவாஜி, தம்பி சண்முகத்திடம் சொல்லி, எனக்கு புல்லட் மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். என் தகுதிக்கு மிகவும் மேம்பட்டவர்களால், நான் நேசிக்கப்பட்டிருக்கிறேன். அதுவே, மிகப்பெரிய வரப்பிரசாதம்.

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
19-ஏப்-202110:52:41 IST Report Abuse
Manian ஏழ்மை இல்லை என்றால் அறிஞர்களும் இல்லை, உலகம் முன்னேறாது. ஏழ்மை பொதுவாக, கர்ப கால மூளை வளர்ச்சி, மறபணு கோளாறுகள் இல்லாதவரை, போராரும் மனோதிடத்துடன், புதிய பாதை, வழிகளை கண்டு பிடிக்க தூண்டுகிறது. "தேவையே புதிய கண்டு பிடிப்புக்களின் தாய்(Necessity is the mother of invention) என்பதில், ஏழ்மை விடுதலை தேவை என்பது மறைந்து நிற்கிறது. அம்பானி, அதானியின் முன்னோர்கள் ஏழைகளை -தற்போதய வாரிசுகள் அவர்கள் அமைத்த குதிரை ஏற்ற கால் படி(Stirrup) மூலம் மேல் வந்தவர்களே ஏழ்மைக்குப் பின் வரும் பலன் காலம் தாண்டி நிற்கும் ஆகவே இவர்கள் போன்றவர்களின் சரித்திரம் அறியாமல், போலி கோட்டாவில் நீட் தேர்வில் பெயிலாகி, தற்கொலை செய்து கொள்பவர்கள் சரித்திரம் படியா போலி பெற்றோர்ளை பெற்றவர்கள் "தீதும் நன்றும் பிறர் தர வாரா, நோதலும் (பிறரே காரணம்) தணிதலும் அவற்றோர் அன்ன ." என்று சங்காலத்திலேயே சொல்லி விட்டார்கள் என்னா, டாஸ்மார்க்கும் ஏழ்மையும் அவற்றோரன்ன என்று பாடவில்லை இளமை ஏழ்மை இனியதரும், முதுமயில் ஏழ்மை சாவே தரும்நாலாட்டின் புத்தூர் நலம்மறந்த கவிராயர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X