ராவணன் பட்ட அடி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2021
00:00

தெய்வம் பலவிதங்களில் எச்சரிக்கிறது; பலர் மூலமாகவும் எச்சரிக்கிறது. உணர்பவர்கள், உய்கின்றனர்; உணராதவர்கள்...
கைலாச மலையை துாக்கி, சாமகானம் பாடி, சிவபெருமானிடம் வரங்கள் பெற்ற, ராவணன், ஒருசமயம், புஷ்பக விமானத்தில் வந்து கொண்டிருந்தான். அப்போது, அசும் நரகம் எனும் பாதாள உலகத்தை பார்த்து, அங்கு போனான்.
அங்கே, மகாபலியின் ஆஜானுபாகுவான உருவத்தை பார்த்ததும், வர பலத்திலும், தன் பலத்திலும் ஆணவம் கொண்ட ராவணன், 'உருவத்தை பார்த்தால் என்னவோ பெரிய வீரன் போல் இருக்கிறாயே... உண்மையான வீரனாக இருந்தால், நீ, என்னுடன் போருக்கு வா...' என்று கேலியாக, போருக்கு அழைத்தான்.
'அப்பா, நான் மகாபலி. மகாவிஷ்ணு என்னை இங்கே சிறை வைத்திருக்கிறார். என்னைப் போய் போருக்கு அழைக்கிறாயே...' என்றார்.
'கவலைப்படாதே, நான், உன்னை விடுவிக்கிறேன்...' என்றான், ராவணன்.
மகாபலிக்கு சிரிப்பு தாங்கவில்லை.
'என்னை சிறை வைத்தவனை வென்று, எனக்கு விடுதலையளிப்பது இருக்கட்டும். அதற்கு முன், அதோ என் எதிரில் இருக்கும் அந்த குண்டலத்தை துாக்கு, பார்க்கலாம்...' என்றார்.
அலட்சியமாக குண்டலத்தை நெருங்கிய, ராவணன், அதை துாக்க முயற்சித்தான். அசைக்க கூட முடியவில்லை. குண்டலத்தை துாக்க முயற்சித்து, வாயில் ரத்தம் கக்கி, மல்லாக்க விழுந்தான்.
'உன்னால் துாக்க முடியாத இந்த குண்டலம், என் தாத்தா இரணியகசிபு காதில் அணிந்திருந்தது. அப்படியென்றால், அவர் எவ்வளவு பெரிய வீரராக இருந்திருக்க வேண்டும். அவரையும், அவரை சேர்ந்த ஏராளமான அரக்கர்களையும் கொன்ற அந்த மகாவிஷ்ணுவை வென்று, என்னை விடுவிப்பது உன்னால் செய்யக்கூடிய காரியமா என்ன...' என்று விவரித்தார், மகாபலி.
'அப்படியா... உன்னை இங்கே சிறை வைத்து, வாசல் காவலனாக இருப்பதாக நீ சொன்ன அந்த மகாவிஷ்ணுவை வென்று, நான் உன்னை விடுவிக்கிறேன்...' என்றான், ராவணன்.
'இவன், ஏதோ ஆணவத்தில் பேசுகிறான். திருந்துகிறானா பார்க்கலாம். இல்லாவிடில் அழித்து விடலாம்...' என்று எண்ணி, ராவணனின் பார்வையிலிருந்து மறைந்தார், பகவான்.
'மகாவிஷ்ணுவே என்னிடம் பயந்து, மறைந்து விட்டார்...' என்று கொக்கரித்தபடி, இலங்கை திரும்பினான், ராவணன்.
மகாபலி சொல்லியும்; இரணியகசிபு அணிந்திருந்த குண்டலத்தை அசைக்க முடியாமல் அவமானப்பட்டும்; இவனை இப்போது தண்டிக்க வேண்டாம் என்று, ராவணன் பார்வையில் படாமல் வாய்ப்பளித்து, மறைந்தும்; ராவணன் நல்வழிப்படுவதாக தெரியவில்லை.
விளைவு... தெரிந்ததுதானே!
தெய்வம் பலமுறை பலர் வாயிலாகவும், பலவிதங்களாக எச்சரித்து, மன்னித்து வழிகாட்டுகிறது; உணர்ந்து சற்றேனும் நல்வழியில் நடக்க முயற்சிப்பது, மானிடர்களான நம் பொறுப்பு.

பி. என். பரசுராமன்

ஆன்மிக தகவல்கள்
ஏகாதசி, சஷ்டி, கார்த்திகையன்று விரதம் இருந்தால், எலுமிச்சை சாறு மற்றும் மோர் குடிப்பதை தவிர்க்கவும். இது, விரத பலனை குறைக்கும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்
25-ஏப்-202123:18:35 IST Report Abuse
கதிரழகன், SSLC இது எந்த புரணத்துல வருது?
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
25-ஏப்-202112:05:26 IST Report Abuse
Girija இப்படி ஒரு கதை? இதில் ஆச்சாரம் அனுஷ்டானம் என்ற இடை செருகல் வேறு?
Rate this:
Cancel
Stalin - Kovilpatti,இந்தியா
25-ஏப்-202111:38:45 IST Report Abuse
Stalin ராவணன் குறித்த உங்களின் திரிபு கதைகள் முடிவுக்கு வரும் நாள் மிக விரைவில் வரும். பத்து கலைகளில் தலை சிறந்த சிவ பக்தனை இதிகாசம் என்ற பெயரில் பழித்து பேசி வரும் கூறும் மாந்தர்கள் தெளிவார்கள் இனி.
Rate this:
Manian - Chennai,ஈரான்
26-ஏப்-202106:51:41 IST Report Abuse
Manianகோவம் எதுக்கப்பா ஸ்டாலின்(சுடலை?)?...
Rate this:
SK Dass - Maraimalai nagar,இந்தியா
26-ஏப்-202116:34:33 IST Report Abuse
SK Dassஇராவணன் சிவபக்தனா? இராவணன் வெளிப்புறமாக செல்லுமிடமெல்லாம் தனது கரத்தில் வைத்திருக்கும் சிவலிங்கத்தை வழிபடும் சிவபக்தனாக தோன்றினாலும், வாலி, காத்தவீர்யார்ஜனன், அகத்தியர், சிவபெருமான் உள்ளிட்ட வெல்லமுடியாதவர்களிடம் தோற்று அவர்களிடமெல்லாம் வேறுவழியின்றி சமரசம் செய்து கொண்டதே இராவணனின் வீரமாகும். ஒருமுறை சிவனின் இருப்பிடத்தை கடக்க முயன்ற தசக்ரீவன் நந்தி தேவரால் இடைமறிக்கப்பட்டான். மிகுந்த கோபமடைந்த இராவணன் 'யார் இந்த சங்கரன்?' என்று அதிகாரத் தோரணையில் கேட்டவாரே வானர முகத்துடன் நின்றிருந்த நந்தியை பார்த்து ஏளனமாக சிரித்தான். கோபமடைந்த நந்தி, 'வருங்காலத்தில் வானரங்களே உனது இனத்தை அழிக்கும்' என்று சாபம் விடுத்தார். “இராவணனோ, நீ எனது விமானத்தை தடுத்ததால் உனது தலைவன் சிவபெருமானை கொன்று பழி தீர்பேன் என கூறி. தனது கைகளால் மலையை உயர்த்தத் தொடங்கினான். விபரீதம் அறிந்த மஹாதேவன் தனது கால்கட்டைவிரலால் மலையை அழுத்தினார். அதனால் ஏற்பட்ட பெரும் வலியினால் மூவுலகங்களும் நடுங்க கதறிய இராவணனை ஓராண்டுக்கு பிறகு விடுவித்து அவனுக்கு இராவணன் என பெயரையும் சுட்டினார். எனினும் அவன், சிவனுக்கும் அவருடைய பக்தர்களுக்கும், உடைமைகளுக்கும் அபராதம் இழைத்தவனே. ஒருவகையில் பார்த்தால், இராவணன் விஷ்ணுபக்தன் வைகுந்த லோகத்தின் வாயிற் காவலர்களான ஜெயனும், விஜயனும் சனகாதியர்களால் சபிக்கப்பட்டு முறையே ஹிரன்யாக்ஷன், ஹிரன்யகசிபு இராவணன், கும்பகர்ணன் சிசுபாலன், தண்டவக்ரனாக இப்பூவுலகில் மும்முறை பிறவி எடுத்தனர். எப்படி இருப்பினும் முதலில் அவன் விஷ்ணு பக்தனே... ஏனோ இராவணனின் குணம் படைத்த தமிழர்கள் தன்னைப்போன்றே குணம் கொண்ட இராவணனை தமிழனாக என்னி, சிவபக்தன் என்று சொல்லி திரிபு செய்கின்றனர்......
Rate this:
SK Dass - Maraimalai nagar,இந்தியா
26-ஏப்-202116:42:03 IST Report Abuse
SK Dassபாதாள லோகத்தை நரக லோகம் என்று குறிப்பிடுவதா? பாதாளம், (Patala) (சமக்கிருதம்: पाताल, Pātāla), இந்து அண்டவியலில், பூமிக்கு அடியில் நாக தேவதைகள் வாழிடங்களாக கூறப்படுகிறது. இந்து அண்டவியலில் சுவர்க்கம், பூமி, மற்றும் பாதாளம் என மூன்றாக பிரிக்கப்படுகிறது. ஏழு கீழ் உலகங்களில் இறுதியாகக் கூறப்படும் பாதள உலகம், ஏழாவதும், கீழானதும் ஆகும். பாதாளம் உலகம் நாகர்கள் வாழ்வதால் நாகலோகம் என்றும் கூறுவர். மேலும் நாகர்களின் உறவினர்களான அசுரர்கள், தானவர்கள், தைத்தியர்கள் மற்றும் இயக்கர்களும் பாதளத்தில் வாழ்கின்றனர். சூரிய சித்தாந்த சாத்திரங்களின் படி, பூமியின் தென் துருவத்தை பாதாளம் என்றும் வட துருவத்தை நாவலந்தீவு என்றும் குறிப்பிடுகிறது. பாகவத புராணம், ஏழு கீழ் உலகங்களில் ஒன்றாக பாதளத்தை குறிப்பிடுகிறது. அசுரர்களின் கட்டிடக் கலைஞரான மயன், பாதாள லோகத்தில் பல அழகிய கட்டிடங்கள் கட்டினார். விஷ்ணு புராணம், ஏழு கீழ் உலகங்களை, அதலம், விதலம், நிதலம், தலாதலம், மகாதலம், சுதலம் மற்றும் பாதாளம் பெயர்களால் குறிப்பிடுகிறது. பாதளத்தில் வசிக்கும் ஆயிரம் தலை கொண்ட, நாகர் இன தலைவரான ஆதிசேஷன், இப்பூமியை தாங்குவதாக கூறப்படுகிறது. பாதள உலகத்தின் கீழ், இறப்பிற்குப் பின் பாவிகள் வசிக்கும் நரக லோகம் உள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், பி. என். பரசுராமனோ பாதாள லோகத்தை நரக லோகம் என்று குறிப்பிடுகிறார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X