அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மே
2021
00:00

காலும் நலமும்!
மனிதர்களை தவிர எல்லா உயிரினங்களும் புவியில் நலமாக வாழ்கின்றன. ஆனால், பல சுவைகளில், விதவிதமான உணவுகளை சாப்பிடும் மனிதன் அல்லல்படுகிறான்.
நலமாக வாழ, மூன்று வகை உணவுகள் அவசியம் தேவை. அவை, பெரும் உணவு, நுண்ணுணவு, நுட்ப உணவு என்பவையாகும்.
பெரும் உணவு என்பது உடல் நிறைய சாப்பிடுவது. காற்றை தான் அதிகம் சாப்பிடுகிறோம். நீரிலும் காற்றுதான் அதிகம் உள்ளது. மூக்கால் மட்டுமல்ல, தோல் மூலமும் சுவாசிக்கிறோம். வாயால் மட்டுமல்ல தோல் மூலமும் நீரை உறிஞ்சுகிறோம். இவற்றை, எப்போதும் இயற்கையிடம் இருந்து பெற்று கொண்டே இருக்கிறது உடல். இதனால் தான் பெரும் உணவு எனப்பட்டது.
வாய் வழியாக சாப்பிடும் சோறு, இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற திட உணவுகளும், பால் போன்ற திரவ உணவுகளும் நுண்ணுணவு எனப்படும்.
இந்த உணவில், கரிமம், பிராணன், ஹைட்ரஜன், தாது உப்புக்கள், வைட்டமின்கள், கொழுப்பு, நார்சத்து போன்றவை இருக்கும். இந்த சத்துக்களின் விகிதம் உணவுக்கு ஏற்ப மாறுபடும்.
மூன்றாவது நுட்ப உணவு. எல்லா விலங்குகளும் ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த உணவு தான் காரணம். அது, 'மேக்னட்டிக்' எனப்படும் காந்த சக்தியாகும்.
இந்த உலகம் அளப்பெரிய காந்த சக்தியை கொண்டுள்ளது. உடலிலும் காந்த சக்தி உள்ளது. இது குறைந்தால், பூமியிலிருந்து கிரகித்து கொள்ளும் உடல். இதற்கு நிலத்துடன் தொடர்பு இருக்க வேண்டும்.
ஒரு குழந்தைக்கு, தாயின் அரவணைப்பு எவ்வளவு முக்கியமோ, அதுபோன்று மனிதனுக்கு பூமியே தாய். அளப்பரிய ஆற்றல் மிக்க அதன் தொடர்பில் இருந்தால், நுட்ப உணவு எனப்படும் காந்த சக்தி தாராளமாக கிடைக்கும். இதற்கு, மழையில் நனைந்து, வெயிலில் குளித்து, வெட்டவெளியில் நடக்க வேண்டும்.
ஆரோக்கிய உணவுகளை உண்டாலும், அது செரிமானம் ஆனால் தான், சத்தாக மாறி உடலில் சேரும். உண்ட உணவு, செரிமானம் ஆக பூமியில் கிடைக்கும் காந்த சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது.
அது, போதிய அளவில் கிடைத்தால் தான் சுரப்பிகள் வேலை செய்யும். உணவை செரிமானம் செய்து, ஆற்றலை உறிஞ்ச வைக்கும். காந்த சக்தி கிடைக்காத போது செரிமானம் மந்தமாகி, உண்ட உணவே நஞ்சாக மாறிவிடும்.
கூடுமானவரை பூமியுடன் தொடர்பில் இருக்க பழக வேண்டும். அதற்கு வெறுங்காலுடன், மணல், பாறைகளில் நடக்கலாம். பசும்புல்வெளியில் நடப்பது மிகவும் நல்லது.
நுட்ப உணவு எனப்படும் காந்தசக்தியை பெற, அமெரிக்க செல்வந்தர்கள் வார விடுமுறை தினங்களில் கிராமபுற வேளாண் பண்ணைகளில் குடும்பத்துடன், விவசாய வேலைகள் செய்கின்றனர். தண்ணீர் பாய்ச்சுவது, களை எடுப்பது போன்ற பணிகளை செய்து, இழந்த காந்த சக்தியை பெறுகின்றனர்.
இதுபோல் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டால், ஆரோக்கியமாக வாழலாம்.

படுக்கைக்கு சோடா!
படுக்கை மெத்தையில் கெட்ட வாசனையை நீக்க வாசனை திரவியங்கள் பயன் படுத்த வேண்டியதில்லை. சுலபமாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டே சுத்தமாக்கலாம்.
மெத்தையில் வீசும் துர்நாற்றத்தை அகற்ற உதவும் கரிமப் பொருட்களில் ஒன்று பேக்கிங் சோடா. இயற்கை சோப்பு போல செயல்படும். கறையை அகற்றுவதில் திறம்படச் செயல்படுகிறது. இதனுடன், 'ஹைட்ரஜன் பெராக்ஸைடு' என்ற வேதிப்பொருளையும் சேர்க்கலாம்.

இதன் செய்முறையை பார்ப்போம்...
தேவையான பொருட்கள்:
பேக்கிங் சோடா - 50 கிராம்
ஹைட்ரஜன் பெராக்சைடு - 250 மி.லி.,
திரவ சோப் - 2 சொட்டு.

தயாரிக்கும் முறை:
பேக்கிங் சோடாவை, பிளாஸ்டிக் வாளிக்குள் போடவும். அதனுடன் ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்க்கவும். இந்த கலவையுடன், திரவ சோப்பை சேர்க்கவும். இவற்றை நன்கு கலந்து, ஸ்ப்ரே பாட்டிலில் சேமிக்கவும்.
நன்கு குலுக்கி மெத்தையில் தெளிக்கவும். தெளித்த திரவம் முற்றிலும் வறண்டுபோகும் வரை காத்திருக்கவும். முடிந்தால், மெத்தையை துாயக்காற்று வீசும் இடத்தில் வைக்கவும்.
காய்ந்தவுடன், பேக்கிங் சோடா எச்சத்தை நீக்க, பிரஷ் கொண்டு துடைக்கவும். குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒருமுறை இதைச் செய்யலாம்.

காஞ்சிபுரம் இட்லி!
காஞ்சிபுரத்தில் உள்ளது வரதராஜ பெருமாள் கோவில். இங்கு, நைவேத்யமாக இட்லி தயாரித்து வழங்கப்படுகிறது. இதை காஞ்சிபுரம் இட்லி என்பர்.
சீரகம், மிளகு, இஞ்சி சேர்த்த மாவு தயாரிக்கப்பட்டு, மந்தாரை இலையில் ஊற்றி, மூங்கில் கூடையில் வைத்து பாத்திரத்தில் வேக வைப்பர்.
தனித்துவமான சுவை மற்றும் நறுமணம் கொண்டது இந்த இட்லி. மந்தாரை இலை கிடைக்காத போது, வாழை இலையை பயன் படுத்தலாம். இந்த இட்லி அபூர்வ ருசியை தரும்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X