உயிரினங்களை காக்கும் தேசிய பூங்காக்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2021
00:00

இயற்கையை பாதுகாக்க உருவாக்கப்பட்டது, வன விலங்கு தேசிய பூங்கா. உலகம் முழுதும், 6,555 தேசிய பூங்காக்கள் உள்ளன. சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம், 2016ல் வெளியிட்ட புள்ளி விவரத்தில் இது பற்றி கூறப்பட்டுள்ளது.
வட அமெரிக்காவில் உள்ள மஞ்சள் கல் தேசிய பூங்கா மிகப்பெரியது. வனவிலங்கு மற்றும் சுடுநீர் ஊற்றுகளை பாதுகாத்து பராமரிக்கும் விதமாக, 1872ல் உருவாக்கப்பட்டது. இதை, உலக பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது, 'யுனெஸ்கோ' அமைப்பு.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த ஜெரால்டு போர்ட், இந்த பூங்காவில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்காசிய நாடான மங்கோலியாவில், போக்த்கான் மலைப்பகுதியும், உலக பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பூங்காக்களில் ஒன்று, வடகிழக்கு கிரின்லாந்து தேசிய பூங்கா; இது ஐரோப்பிய நாடான டென்மார்க் கட்டுப்பாட்டில் உள்ளது.
மிகச்சிறியது, அமெரிக்கா, அர்கானாஸ் பகுதியில் உள்ள, ஹாட் டெய்ரி பூங்கா; இது, 555 ஏக்கரில் பரவியுள்ளது.
ஆஸ்திரேலியா, தேசிய பூங்காக்களின் நாடு என அழைக்கப்படுகிறது. அங்கு, 685 பூங்காக்கள் உள்ளன. ஒரு பூங்காவில் பவளப்பாறைகள் நிறைந்துள்ளன. இந்த பகுதியை, விண்ணிலிருந்தே பார்க்க இயலும். இது, 2,300 சதுர கி.மீ., பரவியுள்ளது.
இதில், 400 வகை பவளபாறைகள், 1500 வகை மீன்கள், 4 ஆயிரம் வகை மெல்லுடலிகள், நத்தை போன்ற உயிரினங்களையும் காணலாம்.
ஆஸ்திரேலியா அருகே உள்ள கிறிஸ்துமஸ் தீவு, அபூர்வ வன விலங்குகளால் நிறைந்தது. இங்கு, சிவப்பு நண்டு ரகங்கள் ஏராளம் வசிக்கின்றன. ஆண்டு தோறும், 80 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் கூடுகட்டுகின்றன. இங்குள்ள மிருகங்கள், பறவைகள், செடி கொடிகளை வேறு எங்கும் காண இயலாது.
ஆஸ்திரேலியா, பிரசேர் தீவு ஏரிகளின் பூங்காவில், 100க்கும் அதிகமான சுத்த நீர் ஏரிகள் உள்ளன. உலகின் மிகப்பெரிய சுத்த நீர் ஏரியும் இங்கு தான் உள்ளது.
கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியா, மகாலே தேசிய பூங்காவில், 700க்கும் அதிகமான சிம்பன்சி என்ற வால் இல்லாத மனிதக்குரங்குகள் வசிக்கின்றன.
கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் மனித உடலுக்கு நெருக்கமான கொரில்லா என்ற பெரிய மனித குரங்குகள் உள்ளன.
ஆசிய நாடான தாய்லாந்தில், 120க்கும் அதிகமான தேசிய பூங்காக்கள் உள்ளன; இங்கு, 58 விலங்கு சரணாலயங்களும் உள்ளன.
அண்டை நாடான நேபாளத்தில் உள்ள சித்வான் தேசிய பூங்கா, ஒற்றை கொம்பு காண்டா மிருகத்தை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது; பெரிய யானைகளையும் இங்கு காணலாம்.
இந்தியாவில், 104 தேசிய பூங்காக்கள் உள்ளன; மிகப்பெரியது, 'ஹெமிஸ்' தேசிய பூங்கா; இது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில் அமைந்துள்ளது.
இந்தியாவில் முதன் முதலில், 1936ல் தேசிய பூங்கா உருவாக்கப்பட்டது. காடுகளை பாதுகாப்பதில் ஆர்வம் காட்டிய ஆங்கிலேயரான ஜிம்கார்பெட் பெயரில் தேசிய பூங்கா என, 1970ல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இங்கு, வங்காள புலி, யானை, நீர் நாய்கள் ஏராளமாக உள்ளன.
கர்நாடாகாவில் உள்ள பந்திபூர் தேசிய பூங்கா, புலி, சிறுத்தை, காட்டு எருமை போன்ற வன விலங்குகளை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம், சுந்தர்பன் தேசிய பூங்காவில் வங்காள புலிகள் பாதுகாக்க படுகின்றன. இங்கு, இரவாடி திமிங்கலம், சிறுத்தை என பல விலங்குகள் உள்ளன.
- பட்டு

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X