இளஸ் மனஸ்! (93)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2021
00:00

அன்பு பிளாரன்ஸ்,
என் வயது, 35; அரசு ஆரம்ப பள்ளியில், துப்புரவாளராக பணிபுரிகிறேன். கணவர் கொத்தனாராக வேலை செய்கிறார். ஒரு மகனும், இரு மகள்களும் இருக்கின்றனர். நாங்கள், கடலோர கிராமத்தில் வசிக்கிறோம்.
மூத்தவன் வயது, 12; 7ம் வகுப்பு படிக்கிறான்; முதல் மகள்களுக்கு, 8 வயதும், இரண்டாவது மகளுக்கு, 6 வயதும் ஆகிறது.
மகன் படித்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வேண்டும் என்பது என் குறிக்கோள். ஆனால், அவனோ, இரவு நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் துாண்டில் எடுத்து, மீன் பிடிக்க கிளம்பி விடுகிறான். பிடித்த மீன்களை விற்கவும் செய்கிறான்.
இப்படியே போனால், படிப்பை விட்டு முழு நேரம் துாண்டில்காரன் ஆகிவிடுவானோ என பயப்படுகிறேன். அவனுக்கு தகுந்த அறிவுரை கூற வேண்டுகிறேன்.

அன்பு அம்மா...
ஆதி மனிதனின் முதல் தொழிலே மீன் பிடித்தல் தான்; மீன் வளம் தான் அள்ள அள்ள குறையாதது. மீன் பிடிக்க பெரிய முதலீடு தேவையில்லை; துாண்டிலும், கை நிறைய மண் புழுக்களும் இருந்தால் போதும்.
மீன் பிடித்தலை பற்றி, பல பொன்மொழிகள் உள்ளன.
அவற்றில் சில...
* மீன் பிடித்தல் பொழுதுபோக்கோ, விளையாட்டோ அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை
* மீன் பிடித்தல் என்பது புழுக்களின் ஆழ் கடல் நீச்சல்
* மீனும், மனிதனும் ஒன்று; வாயை திறக்கும் போது மாட்டி கொள்ளும்
* உன் வியாபாரத்தில், மீன் பிடித்தல் குறுக்கிட்டால், வியாபாரத்தை கை விடு
* நான் மீன் பிடிக்க செல்வது என்னை கண்டுப்பிடிக்க அல்ல; என்னை தொலைக்க
* மீன் பிடிக்காத நாள் சூரியன் உதிக்காத நாள்.
மீன் பிடிக்கும் பொழுதுபோக்கில், சியாம் நீசன், லிண்ட்சே வான், ட்வைட் ஹோவர்ட், டைகர் வுட்ஸ், ஜாக் நிக்கோலஸ், கெவின் காஸ்ட்னர், கிறிஸ்டியானோ ரொனால்ட்டோ, பிராட்பிட், ராண்டி மோஸ், லுாக் பிரியான் போன்ற பிரபலங்களுக்கு ஈடுப்பாடு உண்டு.
மீன் பிடித்தல் பற்றி, 'டிவி' நிகழ்ச்சிகள் பல உள்ளன.
அவை...
* பாட்டில் பிஷ்
* டெட்லியஸ்ட் கேட்ச்
* பிஷ்ஷிங் வித் ஜான்
* அல்டிமேட் மேட்ச் பிஷ்ஷிங்
* எக்ஸ்ட்ரீம் பிஷ்ஷிங் வித் ராப்சன்.
கடலும், நதியும் சேரும் முகத்துவார பகுதியில், நீங்கள் குடியிருக்கிறீர் என நம்புகிறேன். அங்கு, ஓரா, ஆற்று கெழுத்தி, நன்னீர் இறால், வெள்ளை கிழங்கான், தேளீ, விலாங்கு போன்ற மீன்கள் பிடிக்கலாம். ஒரு முறை மீன் பிடித்தால், 500 ரூபாய்க்கு விற்கலாம்; குழம்பாகவும், பொரித்தும் சாப்பிடலாம்.
பொதுவாக, மீன் பிடிப்பவர்கள், மகா பொறுமைசாலிகளாக இருப்பர்; மீன் பிடிக்க, துாண்டில் போடுவதே தவத்தில் இருப்பது போல தான்.
மகன், மீன் பிடிப்பதை தடுக்க வேண்டாம்; படிப்புக்கு இடைஞ்சல் இல்லாமல் பொழுதுபோக்காய் மீன் பிடிக்கட்டும்.
டைகர் வுட்ஸ், மீன் பிடிக்கிறார் என்றால், கோல்ப் ஆட்டத்தை விட்டு மீன் பிடிக்கவில்லை. பள்ளிக்கு போன நேரம் போக, படிக்கும் நேரம் தவிர, மீதி நேரம் ஒதுக்கி மீன் பிடிக்கட்டும்.
துாண்டில் கொக்கியில், மண்புழுவை கோர்த்து, மீன் நடமாடும் இடத்தை கணித்து, துாண்டிலை வீசி, தக்கை கடி வரும்வரை காத்திருந்து, சுண்டி இழுக்கும் சாகசம் தனி விதம்.
விவசாயிகளுக்கு விதை நெல்லும், நீரும், உரமும், வயலும், காலமும் தேவை. அப்போது தான் விளைச்சலை காண்பான்.
துாண்டில் போட பொறுமை ஒன்றே மூலதனம்; தக்க சந்தர்ப்பத்தில் துாண்டிலில் திமிங்கலம் கூட சிக்கும்.
துாண்டில் போடும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு வாழ்த்துகள்!
- அன்புடன், பிளாரன்ஸ்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X