ஆப்பிள் - ஏ, பீட்ரூட் - பி, கேரட் - சி இவற்றின் கூட்டணி தான், ஏ பி சி பானம். இந்த காய் கனி கூட்டணி, நமக்கு தரக்கூடிய நன்மைகள் அளவில்லாதவை.
'மிராக்கிள் ட்ரிங்க்' என போற்றப்படும் இது, சீன மூலிகை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது. இந்த பானத்தால், புற்றுநோயின் தீவிரத்தை குறைக்கலாம், குணமாக்கலாம் என ஆரம்பித்து, இன்று பல்வேறு நோய்களுக்கு கண்கண்ட மருந்தாக விளங்குகிறது.
இந்த பானம் தயாரிக்க, ஆப்பிள், கேரட், சிறிய பீட்ரூட் தலா ஒன்று எடுத்து நன்றாக கழுவி, தோலுடன் மிக்சியில் போட்டு அடித்து வடி கட்டி குடிக்கவும். 'பிரிஜ்'ஜில் வைத்து குடிக்க கூடாது. வேண்டுமானால் சிறிது தண்ணீர் சேர்த்து குடிக்கலாம். 'ப்ரெஷ்'ஷாக குடித்தால் அதன் பலன் அதிகம்.
இந்த பானத்தில் உயிர் காக்கும்,
'ஆன்டி ஆக்சிடென்ட்ஸ்'கள் நிரம்பி இருக்கின்றன. நார்ச்சத்து மிக்க ஆப்பிளில் வைட்டமின் ஏ, பி 1, பி2, பி 6, ஸிங்க், காப்பர், நியாஸின், பொட்டாஷியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளன. பீட்டா கரோட்டின் கொண்ட கேரட்டில், மினரல்கள் ஏகமாக உள்ளன. பீட்ரூட்டில் வைட்டமின்களுடன் இரும்பு சத்து, பொட்டாஷியம் என, எல்லா சத்துகளும் உள்ளன.
தினமும் காலையில், சிற்றுண்டிக்கு ஒரு மணி நேரத்துக்கு முன், ஏ பி சி பானம் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்:
* புற்றுநோயால் அவதிப்படுவோர் தினமும் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பருகினால், நோயின் தாக்குதலிலிருந்து விடுபடலாம்
* சிறுநீரகம், கணையம் மட்டுமல்லாது இதயத்தையும் வலுப்பெற செய்கிறது. ரத்த விருத்தி, சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. கழிவுகளை வெளியேற்றுகிறது. சருமம் பளபளக்கும். முகப்பரு வராது
* ஜீரண சக்தி அதிகரிக்கிறது. அல்சர் மற்றும் மலச்சிக்கல் தீர்க்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மூளையின் செயல் திறன் அதிகரிக்கிறது.
* பெண்களுக்கு மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. தொப்பை குறைய, நாள் முழுக்க புத்துணர்ச்சியாக இருக்க உதவுகிறது.
* கணினி எதிரே மணிக்கணக்காக வேலை செய்து, கண்கள் சோர்ந்து, சிவந்த விழிகளுடன், கண்ணில் ஈரப்பசை குறைந்தவர்களுக்கு ஒரே தீர்வு, ஏ பி சி பானம் தான்
* தொடர்ந்து மூன்று மாதம், தினமும் காலையில் ஒரு டம்ளர் பருகி வந்தால், ஆரோக்கியம் கூடும்.
ஆர். நிவேதிதா