சவுதி தலைநகர் ரியாத்திலிருந்து, 350 கி.மீ., தொலைவில், நஜித் என்ற கிராம் உள்ளது. அங்குள்ள லைலா அப்லாஜ் மலைப் பகுதியில், ஒரு குகை உள்ளது. இதைச் சுற்றியுள்ள பாறைகளில், லைலா என்று பொறிக்கப்பட்டுள்ளன.
லைலாவை காதலித்து தோல்வி அடைந்ததால், காதலன் மஜ்னு தான், பாறைகளில் தன் காதலியின் பெயர் பொறித்துள்ளதாக, இங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.
மஜ்னுவின் நிஜ பெயர், கயிஸ். 'மஜ்னுன்' என்றால், அரபு மொழியில், மனநலம் பாதிக்கப்பட்டவன் என்று பொருள். காதல் தோல்வியில் மனநலம் பாதிக்கப்பட்டு அலைந்த அவரை, மஜ்னு என்ற ஊர் மக்கள் அழைத்ததாக, ஒரு கதையும் உலவுகிறது.
ஜோல்னாபையன்