ஆவி பிடிப்பது நுரையீரலுக்கு ஆரோக்கியம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2021
00:00

வைரஸ் தொற்று வந்து விட்டால், என்ன தான் மருத்துவ கண்காணிப்பு, மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டாலும், ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க வேண்டும் என்றால், நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.
தொற்று வந்துவிட்டால், உடலளவில் நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பது உண்மை தான். ஆனாலும், சில நடைமுறைகளை செய்து தான் ஆக வேண்டும்.
காலை எழுந்ததும், முதல் வேலையாக பிராணாயாமம் செய்ய வேண்டியது கட்டாயம். முறைகேடாக மூச்சு பயிற்சி செய்ய முடியாவிட்டாலும், குப்புறப்படுத்து, சுவாசத்தை வலுக்கட்டாயமாக உள்ளிழுத்து வெளியே விட்டால் போதும்; நுரையீரலின் வலிமை அதிகரிக்கும்.

புரதச் சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும். குளிர்ச்சியான பானங்களை தவிர்த்து, வெந்நீர் குடிக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே, தினமும் கஷாயம் காய்ச்சி குடிக்கலாம்.
இஞ்சி, அதிமதுரம், அஸ்வகந்தா, பட்டை, அன்னாசி பூ, சீரகம், மிளகு, கருஞ்சீரகம், மஞ்சள், வெற்றிலை, கற்பூரவள்ளி இலை இவற்றில், தலா, ஒன்றிரண்டை போட்டு, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பாதியாக வற்றியதும், அவ்வப்போது குடிக்க வேண்டும்.

டாக்டர் என்.தீபா
சென்னை

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அ.வேல்முருகன் - Salem,இந்தியா
14-மே-202122:24:16 IST Report Abuse
அ.வேல்முருகன் ஆவி பிடித்தல் நல்ல பலன் அளிக்க கூடியது.உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி சிறுவர்கள் ஆவி பிடிக்க வேண்டும்.
Rate this:
Cancel
சங்கர் - Tamilnadu, tirunelveli,இந்தியா
14-மே-202121:08:31 IST Report Abuse
சங்கர் தங்கள் உடலால் தாங்கும் அளவிற்கு வெப்பத்தை வைத்து ஆவி பிடிக்கலாம் ஆபத்தில்லை...அளவிற்கு மிஞ்சினால்...
Rate this:
Cancel
சங்கர் - Tamilnadu, tirunelveli,இந்தியா
14-மே-202121:05:12 IST Report Abuse
சங்கர் முறைப்படி ஆவி பிடிக்க வேண்டும்... இல்லை என்றால் பின்விளைவுகள் பயங்கரமாகத்தான் இருக்கும்... நம் உடலால்(முகத்தால்) தாங்க கூடிய அளவில் வெப்பத்தை பயன்படுத்தி ஆவி பிடிக்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X