மெட்டி பிள்ளையார்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2021
00:00

விநாயகப் பெருமானை, தமிழகத்தில், பிரம்மச்சாரியாக வழிபடுகின்றனர். வட மாநிலங்களில் ரித்தி (புத்தி), சித்தி என்னும் சக்திகளை திருமணம் செய்த குடும்பஸ்தராக வழிபடுகின்றனர். ரித்தி என்றால், செல்வ வளம்; சித்தி என்றால், ஆன்மிக அறிவு.
விநாயகரை வணங்கினால், ஆன்மிக எண்ணங்களுடன் நல்லவனாகவும் வாழலாம். செல்வ வளமும் பெறலாம் என்ற அடிப்படையில், இந்த சக்திகள் ஒட்டிக் கிடக்கின்றன. இந்த இரண்டு நன்மைகளையும் இரு பெண்களாக பாவனை செய்து, ரித்தி, சித்தி என்கின்றனர்.

இவர்களை பிரம்மனின் புத்திரிகள் என்றும், படைப்புத் தொழிலில் பிரம்மனுக்கு உதவியாக விளங்கும், பிரஜாபதிகளில் ஒருவரான விஸ்வரூபன் என்பவரின் மகள்கள் என்றும் கூறுவதுண்டு. இவர்களை, விநாயகர் திருமணம் செய்து கொண்டார்.
தமிழகத்தில், விநாயகரின் சக்திகளை சித்தி, புத்தி என்பர். ஆனால், சித்தி, புத்தியுடன் இணைந்த கோவில்களைக் காண்பது அரிது. அவற்றில் ஒன்று, கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில்.
திருச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார், மலை மேல் இருக்கிறார். கும்பகோணத்தில், மேடான இடத்தில் இருப்பதால், இவரை, உச்சிப்பிள்ளையார் என்கின்றனர்.
கும்பகோணத்திலுள்ள அனைத்து சிவாலயங்களுக்கும், தலைமையாக உள்ளதாலும், இவருக்கு, உச்சிப்பிள்ளையார் என்று, பெயர் வந்திருக்க வாய்ப்புண்டு.
உச்சிப்பிள்ளையார் இங்கு அருள்பாலிக்க காரணம் உண்டு. அயோத்தியில், ரங்கநாதர் சிலையைப் பெற்று வந்த ராவணனின் தம்பி, விபீஷணன், காவிரியின் மேடான இடத்தில், அதை, ஒரு சிறுவனின் கையில் கொடுத்து, 'தம்பி... இதை தரையில் வைத்து விடாதே, மீண்டும் எடுக்க முடியாமல் போய் விடும். நான் நீராடி விட்டு வருகிறேன்...' என்றார்.
அந்த சிறுவன் தான் விநாயகர் என்பதை அவர் அறியவில்லை. விநாயகரோ, அதை தரையில் வைத்தார். தன் மாமாவான விஷ்ணு, அந்த இடத்திலேயே அருள்பாலிக்க வேண்டும் என்பது, அவரது விருப்பம். நீராடி வந்த விபீஷணன் ஏமாந்தது, அறிந்த கதை.
இதன்பின், உலகமே அழிந்த காலத்திலும், அழியாமல் இருந்த கும்பகோணத்துக்கு வந்தார், விநாயகர். அங்கே, ஒரு மேடான இடத்தில் அமர்ந்து, தன் தந்தை, கும்பேஸ்வரரை தினமும் பூஜித்து வருவதாக ஐதீகம்.
மேடான இடத்தில் அமர்ந்ததால், இவரும், உச்சிப்பிள்ளையார் எனப்பட்டார். இங்கு, சித்தி - புத்தியை திருமணம் செய்வதுடன், அவர்களுக்கு, மெட்டி அணிவிக்கும் கோலத்தில், விநாயகரைத் தரிசிக்கலாம். இந்த சுதைச் சிற்பத்தைக் காண, கண் கோடி வேண்டும். இவரை, மெட்டிப்பிள்ளையார் என, செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர், பக்தர்கள்.
திருமணத் தடை நீங்க, இவரை வணங்குவர். இங்கேயும், தன் மாமாவான விஷ்ணுவை, கண் குளிரக் காண வேண்டும் என, விநாயகர் எண்ணினார் போலும். சாரங்கபாணி கோவில் திருப்பத்தில் அமர்ந்து விட்டார்.
கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில், (நாகேஸ்வரன் வடக்கு வீதி), இந்தக் கோவில் உள்ளது.

தி. செல்லப்பா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
02-ஜூன்-202107:09:58 IST Report Abuse
Manian சித்தி- தனக்குள்ளே கடவுளைக் கண்டு எங்கும் அதுவே இற்கையாக பரவி உள்ளது புத்தி- சிந்திக்கும் கூர்மையான அறிவு மூலம் அதை உணர்தல், இவை இரண்டும் நிரம்பினவனே "நானே கடவுளாக இருக்கிறேன்- அஹம் பிரம்மா அஸ்மி- என்ற தத்துவங்களை உணரவே உருவகமே சித்தி-புத்திகள்: இரு மனவிகள் உள்ளதாக- முருகன், பிள்ளையார், விஷ்ணு, ஈசன்(பார்வதி-கங்கை) என்றெல்லாம் முன்னோர்கள் காது வழியா -கர்ண பரம்பரையாக- எழுத்து வடிவம் வரும் முன்னே- சொன்னார்கள். ஆனால் வடமொழி, புராண புளுகுகள் என்று புலம்பித்திரியும் பகுத்தறி வாளிகளுக்கு, சைபர் என்பது ஆரிய பட்டர் 460ல் கண்டுபிடித்தார்,670 பிரம்மகுப்தர் அதை அரேபிய வணிகருக்கு அதுவே இன்று அது எண் கணிதம் சர் ஐசக் நியூட்டனின் 3 பௌதிக விதிகள் இந்திய அறிஞர் அறிஞர் கானடாவின் 5வது அத்யாயம், முதல் பிரிவில் வைசிக சூத்திரத்தில் இருந்து திருடப்பட்டது என்று மான்செஸ்டர் பல்கலை கழகம் சொல்கிறது: सम् योग अभावे गुरू तत्वम् पतनम् அதாவது வெளிப்புற சக்திகள் தடுக்காத வரை கனமான பொருள்கள் மேல் இருந்து கீழே விழும்: நியூட்னின் முதல் விதி 1: An object will be in uniform motion, unless external forces acts up on it: வெளிப் படை தடுப்பு சக்தி இல்லாத வரை, பொருளின் சீரான வேகம் தடைப் படாது இது போலவே மற்றய விதிகளும் சொல்லப்பட்டுள்ளன. ஆகவே, நம் முன்னோர்கள் புத்திசாலிகள் என்று உணர்த்து, சித்தி-புத்தி என்பதை உணரலாம். கடவுளுக்கு ரெண்டு பெண்டாட்டிய என்று புலம்பும் நமது அறியாமையை கைவிடவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X