இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2021
00:00

கூடி வாழ்ந்தால்...
எங்கள் அடுக்கு மாடி கட்டடத்தின் எட்டு வீடுகளில், தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று, பலதரப்பட்ட மொழிகள் பேசும் மக்கள் வசிக்கின்றனர். எங்கள் குடியிருப்புக்கு பக்கத்து வீட்டில் கன்னடியர் குடும்பம் உள்ளது. புகைப்படத்தில் ஏற்கனவே இரு வீட்டாருக்கும் பிடித்த நிலையில், அவர்கள் வீட்டு பெண்ணை நேரில் பார்த்து பேச, வெள்ளியன்று நாள் குறித்திருந்தனர்.
ஆனால், மாப்பிள்ளை பையனின் பதவி உயர்வு காரணமாக, டில்லிக்கு வரும்படி உத்தரவு வந்ததால், உடனே போக வேண்டியிருந்தது. மருமகள் வீட்டுக்கு வருமுன்பே, மகனுக்கு, 'ப்ரமோஷன்' கிடைத்தது என்று சந்தோஷப்பட்டு, வியாழக்கிழமை காலையில் போன் செய்து, 'இன்று மாலையே பெண் பார்க்க வருகிறோம். தாம்பூலம் மாற்றிக் கொள்ளலாம்...' என்று, தகவல் கூறினர், பையன் வீட்டார்.

திடீரென கூறியதால் திகைத்து போயினர், பெண் வீட்டார். 'கவலை வேண்டாம். குடியிருப்பில் இருக்கும் நாங்கள் அனைவரும் உதவுகிறோம்...' என, ஆறுதல் சொன்னோம்.
கேசரி, பஜ்ஜி, சேமியா பாயசம், சாம்பார் சாதம், தயிர் சாதம், காய், கூட்டு என்று, ஆளாளுக்கு ஒன்றை தயார் செய்தோம். அதற்குள் ஒருவர், கடைக்கு போய், பூ, பழம் வாங்கி வந்தார். வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டி, கோலம் போட்டனர்.
இப்படி, எட்டு வீடுகளின் ஆண்களும், பெண்களும் சேர்ந்து மகிழ்ச்சியாக எல்லா வேலைகளையும் முடித்தோம். மாப்பிள்ளை வீட்டிலிருந்து, 10 பேர் வந்திருந்தனர். பெண் பார்க்கும் படலம் சிறப்பாக முடிந்து, தாம்பூலம் மாற்றிக் கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பார்த்து அசந்து போன மாப்பிள்ளை வீட்டார், 'எட்டு குடும்பங்களும் சேர்ந்து ஜமாய்த்து விட்டீர்களே... மாப்பிள்ளைக்கும், பொண்ணுக்கும் அப்புறம் திருஷ்டி கழிக்கலாம். முதலில் இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள எல்லாருக்கும் திருஷ்டி கழிக்க வேண்டும்...' என்று சொல்லி, சந்தோஷமாக விடைபெற்றனர்.
'கூடி வாழ்ந்தால், கோடி நன்மை' என்று, சும்மாவா சொல்லி வைத்தனர்.
— மரகதம், சென்னை.

கீரைக்கார பாட்டியின் கனிவு!
எங்கள் பகுதியில், பக்கத்து கிராமத்திலிருந்து வரும் பாட்டி ஒருவர், கீரை வகைகளை எடுத்து வந்து விற்பனை செய்வார். பெரும்பாலான குடும்பத்தினர், அந்த பாட்டியின் வாடிக்கையாளர்கள் தான். அதற்கு காரணம், அந்த பாட்டி, 'கீரை வகைகளை, 'பிரிஜ்'ஜில் வைத்து சமைக்கக் கூடாது; 'பிரெஷ்'ஷாக இருக்கும்போதே சமைத்து விடவேண்டும்...' என்று, கனிவுடன் கூறி, அவரே கீரையை ஆய்ந்தும், தருவார்.
அதுமட்டுமின்றி, எந்தெந்த கீரையை எப்படி சமைக்க வேண்டும், கீரையில் என்னென்ன, 'வெரைட்டி' செய்யலாம் என்றும், 'டிப்ஸ்' தருவார். அது, புதிதாக சமைப்பவர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும்.
செய்யும் வியாபாரத்திலும், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்திலும் மட்டுமே குறியாக இருப்போர் மத்தியில், தன் இனிமையான செயல்முறையால், நுட்பமான வியாபார யுக்தியை கற்பித்து வருகிறார், கீரைக்கார பாட்டி.
டி. பிரேமா, மதுரை.

தொழில் சிறக்க...
சமீபத்தில், 'டூ - வீலர்' பழுதாகி, நடு ரோட்டில் நின்று விட்டது. அதை தள்ளியபடியே அருகில் உள்ள, 'மெக்கானிக் ஷாப்'பில், கொண்டு நிறுத்தினேன். மெக்கானிக் இளைஞரை, எங்கோ பார்த்த ஞாபகம் வர, அது குறித்து அவரிடம் விசாரித்தேன்.
'சர்வீஸ் சென்டர் ஒன்றில் வேலை பார்த்தேன். சொந்தமாக இந்த கடை ஆரம்பித்து, மூன்று மாதங்கள் ஆகிறது...' என்றார், அந்த இளைஞர். கடையில் நிறைய டூ - வீலர்கள் இருந்தன. இரு மெக்கானிக்குகளை பணியில் அமர்த்தி இருந்தார். குறுகிய காலத்தில், தொழில் முன்னேற்றம் அடைந்திருப்பதை கண்டு, மலைப்பாக இருந்தது.
பழுதுக்கான, 'பில்'லுடன், கடை பெயர் அச்சிடப்பட்ட கையேடு ஒன்றையும் கொடுத்தார்; புரட்டிப் பார்த்தேன். அதில், 'பஞ்சர்' போடும் நபர்களின் மொபைல் போன் எண்கள் மற்றும் மாவட்டத்திற்குள் இருக்கிற பெட்ரோல் பங்குகளின் பெயர்கள்; மழை மற்றும் வெயில் காலங்களில், டூ - வீலரை கையாள்வது குறித்த தகவல்கள் இருந்தன.
இதுதவிர, 'ஒரிஜினல் ஸ்பேர் பார்ட்ஸ்' பொருத்தி தரப்படும். அதை சம்பந்தப்பட்ட நபர்கள் சோதித்து கொள்ளலாம். என்ஜின் ஆயில் கலப்படம் இன்றி வாடிக்கையாளரின் முன்னிலையில், ஊற்றி தரப்படும் என, கடையின் சிறப்பு அம்சங்களை பற்றி மேலும் சில தகவல்களும் இருந்தன.
கடையின் குறுகிய கால வளர்ச்சிக்கு, இவைகள் தான் காரணம் என புரிந்தது.
'இந்த புத்தகம் குறித்த யோசனை உங்களுக்கு எப்படி தோன்றியது?' என, கேட்டேன்.
'லோக்கல் மெக்கானிக் என்றவுடனேயே, 'அவன் ஏமாற்றுவான்...' என, சிலர் கூறுவதை கேட்டிருக்கிறேன். இதனால், ஒழுங்காக வேலை செய்பவர்களையும், சந்தேகிக்கும் நிலை உருவாகிறது. எனவே தான், இந்த புத்தகத்தை அச்சிட்டு, வாடிக்கையாளர்களிடம் வழங்கி வருகிறேன்.
'தற்போது, நான் எதிர் பார்த்ததை விட, கடை மிக சிறப்பாக இயங்குகிறது. இன்னும் ஒரு கடை ஆரம்பிக்கும் ஏற்பாட்டில் இருக்கிறேன்...' என்றார். அவரின் வித்தியாசமான முயற்சியை, பாராட்டினேன்.
மகேஷ் அப்பாசுவாமி, பனங்கொட்டான் விளை.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohanraj Raghuraman - Madurai,இந்தியா
02-ஜூன்-202122:55:42 IST Report Abuse
Mohanraj Raghuraman கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, எல்லா கேள்விகளையும் விமர்சனங்களையும் ஒன்று விடாமல் படித்துவிடுவதாகவும் ஈ மெயிலில் வரும் கடிதங்களையும் கூட படித்துவிடுவதாகவும் கூறியிருக்கிறீர்கள். நான் வாரம் தவறாது போட்டிகளில் பங்கெடுத்துக்கொண்டு விடைகளை ஈ மெயிலிலேயே தவறாது அனுப்பி வருகிறேன். விடைகள் சரியாக இருந்தும் பரிசு பெரும் அதிர்ஷ்டம் இன்னும் வரவில்லை. இருப்பினும் எனது முயற்சி தொடர்கிறது. சென்ற வாரம் குறுக்கெழுத்து போட்டிக்கான குறிப்புகளில் தங்கள் தரப்பில் தவறுகள் இருந்தும், ஒன்றும் நடவாததுபோல் விடைகளையும் வெளியிட்டு, பரிசுபெறும் அதிர்ஷ்டசாலிகள் பெயர்களையும் வெளியிட்டுள்ளீர்கள். தவறை சுட்டிக்காட்டியும் அதுபற்றி வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. பொதுவாக வருத்தத்தை வெளியிடாவிட்டாலும், சுட்டிக்காட்டிய எனக்கு ஈ மெயிலிலேயே ஒரு பதிலை அனுப்பி வருத்தம் தெரிவித்திருக்கலாம். எனக்கும் சற்று மகிழ்ச்சியாக திருப்தியாக இருந்திருக்கும். குறைந்தபட்சம் எனது விடைகள் படிக்கப்பட்டு பதில் வந்துள்ளது என்று மகிழலாம். ஒரு ஆதங்கம் தான். ஈ மெயிலில் அனுப்புவோர்க்கு மட்டுமாவது ஈ மெயிலிலேயே பதில் அனுப்ப ஏற்பாடு செய்யலாமே... நடக்குமா ?
Rate this:
Manian - Chennai,ஈரான்
04-ஜூன்-202101:29:37 IST Report Abuse
Manianகீதையில் உங்களுக்கு பதில் சொல்லப் பட்டிருக்கிறதே-"கர்மண்யேவ அதிகாரம் அஸ்தே, மா பலேஷு கதா ச நா": ஒரு காரியத்தை செய்யும் உரிமை(சுதந்திரம்) மட்டுமே உனக்கு உண்டு, பலனை தீர்மானிக்கும் உரிமை(உனக்கு கிடையாது)...
Rate this:
Mohanraj Raghuraman - Madurai,இந்தியா
09-ஜூன்-202112:48:37 IST Report Abuse
Mohanraj Raghuramanஅன்பரே... காரியத்தை சரியாக செய்து முடித்ததற்கு பலனை எதிர் பார்ப்பது மனித இயல்பு தானே. அதே வேளையில் தவறை சுட்டிக்காட்ட உரிமை உள்ளவர்களுக்கு மனம் திறந்து தவறை ஏற்றுக்கொண்டதாக ஒரு பதிலை எதிர்பார்ப்பதும் தவறில்லையே. தன்னடக்கம் உள்ளவர்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள் என்றே எதிர்பார்த்தேன்.......
Rate this:
Cancel
31-மே-202119:45:23 IST Report Abuse
சாம் லோக்கல் மெக்கானிக் பழம் மாதிரி பேசிவிட்டு ஸ்பார் பார்ட்ஸ் திருடி விற்று விடுவார்கள்.... நம்ம கண் முன்னாடியே என்னா?? 10 ஆயிரமா என்று பிட்டு போடுவார்கள்....டீசல் பெட்ரோல் திருடுவார்கள் ....
Rate this:
Cancel
gayathri - coimbatore,இந்தியா
31-மே-202110:34:35 IST Report Abuse
gayathri இவர் சொல்லும் அந்த கருத்துருக்கள் உண்மை. ஒருமுறை இருசக்கர வாகனம் பழு நீக்க ஒரு மெக்கானிக் இடம் வண்டியை விட்டேன். அவர் எனக்கு வழங்கிய பில் அதில் எந்த விவரமும் இல்லை. அலைபேசி ஏன் இல்லை, தொலைபேசி நெம்பர் இல்லை கதவு நெம்பர் இல்லை, அதிலும் பில் என்பதற்க்கு பதிலாக கோட்டத்தின் என்கிற வார்த்தை. அப்படி பட்ட ஏமாற்று பேர்வழிகளை நல்லவர்களுக்கும் கெட்ட பெயர். அப்புறம் நாம் தொடர்ச்சியாக வண்டி வேலை செய்யும் மெக்கானிக் சின்ன சிறிய வேலைகளை செய்து கொடுப்பதில்லை. எல்லா உதிர்பகங்களையும் அதிக விலை போட்டு பில் வாங்கி கொடுப்பது என்று ஏகப்பட்ட தில்லுமுல்லு வேலைகள். சிலர் வெள்ளை பப்பேரில் இவர்களாக ஒரு தொகையை எழுதி கொடுப்பது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X