தேவையான பொருட்கள்:
நறுக்கிய வெள்ளை பூசணிக்காய், சுரைக்காய், வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் - தலா ஒரு கப், நறுக்கிய கேரட் - அரை கப், சீரக துாள் - ஒரு தேக்கரண்டி, புதினா இலை சிறிதளவு, பெருங்காய துாள் - கால் தேக்கரண்டி, கெட்டி தயிர் - ஒரு கப், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு.
செய்முறை: காய்களை மிக்சியில் போட்டு, அரை கப் தண்ணீர் சேர்த்து, ஒரு சுற்று சுற்றி வடிகட்டி எடுத்து வைக்கவும். இஞ்சி, கறிவேப்பிலையை மிக்சியில் அரைத்து எடுத்து, வடிகட்டிய காய்கறி நீருடன் சீரக துாள், பெருங்காய துாள், தயிர், தேவையான அளவு உப்பு, ஐஸ் துண்டுகள் சேர்த்து, மிக்சியில் அடித்து புதினா இலைகள் சேர்த்து பரிமாறவும்.
வெயிலால் வரும் வியர்வை காரணமாக, தாது உப்புகள் வெளியேறுவதை சரி செய்து, சோர்வை விரட்டும் இந்த பானம்.