தெய்வங்களுக்கு ஒரு தலை, இரண்டு தலை, மூன்று தலை, நான்கு தலை, ஐந்து தலை, ஆறு தலை என, தலைகள் எண்ணிக்கையில் வித்தியாசம் இருக்கும். ஆனால், பாதங்கள் இரண்டு தான் இருக்கும். முருகனுக்கு ஆறு முகம் என்றாலும், அவரது திருவடிகள் இரண்டு தான். ஆனால், மூன்று முகத்துடன், மூன்று பாதங்களும் கொண்ட ஜுர தேவர், வித்தியாசமானவர். படைப்பைக் கவனிக்கும் பிரம்மாவின் உதவியாளர்களை, பிரஜாபதிகள் என்பர். இவர்களில் ஒருவர் தட்சன். தன் தவ பலத்தால், சிவனின் மனைவி பார்வதி தேவியையே மகளாகப் பெற்றான். அவளுக்கு, தாட்சாயணி என, பெயர் சூட்டினான். அவளை, சிவனுக்கு திருமணம் செய்து வைத்தான்.
காலப்போக்கில், மாமனார், மருமகன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தன் மருமகனை அவமானப்படுத்த நினைத்த தட்சன், யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தான். அதற்கு மருமகனையும் - மகளையும் அழைக்கவில்லை. இதைத் தட்டிக் கேட்க சென்றாள், தாட்சாயணி; அவளை விரட்டியடித்தான். கோபமடைந்த சிவன், வீரபத்திரர் எனும் தன் அம்சத்தை அனுப்பி, யாக குண்டத்தை அழிக்க உத்தரவிட்டார். வீரபத்திரருக்கு உதவியாக, தன் வெப்பமான உடலில் இருந்து தோன்றிய, ஜ்வரம் என்ற பூதத்தை அனுப்பினார். அது யாக குண்டத்தை தீக்கிரையாக்கி, மீண்டும் சிவனை அடைந்தது. இருப்பினும், அதன் உக்கிரம் தணியவில்லை. இதைத் தாங்க முடியாமல் தேவர்களும், உலக மக்களும் சிரமப்பட்டனர். சிவனை சமாதானப்படுத்தி, அந்த வெப்பத்தை உலகிலுள்ள அத்தனை உயிர்களுக்கும் பகிர்ந்தளித்தார், பிரம்மா. ஜ்வரத்துக்கு ஒரு வடிவத்தையும் கொடுத்த பிரம்மா, மற்றவர்களைப் போல் அல்லாமல், இவருக்கு மட்டும் மூன்று கால்களைக் கொடுத்தார். இவருக்கு, ஜுர தேவர் என, பெயர் சூட்டப்பட்டது. ஒருவருக்கு அதிக காய்ச்சல் வந்தால், சக்தியிழந்து, கால்கள் தள்ளாடி படுத்து விடுவார். இவர்கள், ஜுர தேவருக்கு, மிளகை அரைத்து பூசினால், மீண்டும் சக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். சக்தியிழந்த நோயாளிக்கு மூன்றாவது காலாக இருந்து, அவரை எழுப்பும் தெய்வம் என்பதால், இவருக்கு மூன்று கால்கள் உள்ளன. முக்கிய சிவன் கோவில்களின் தெற்கு பிரகாரத்தில், வடக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும், ஜுர தேவர் சிலைகள். இவர்களில் அதிக சக்திமிக்கதாகக் கருதப்படுபவர், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வீரமார்த்தாண்டேஸ்வரர் கோவிலில் அருள்பாலிக்கிறார். திருநெல்வேலி - பாபநாசம் சாலையில், 37 கி.மீ., துாரத்தில் உள்ளது அம்பாசமுத்திரம். இவ்வூர் பேருந்து நிலையத்தில் இருந்து, ஊர்க்காடு கிராமம் செல்லும் சாலையிலுள்ள கிருஷ்ணன் கோவில் அருகில், இக்கோவில் அமைந்துள்ளது.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
கடவுளை மனித உருவகத்தில் பார்க்கும் போது. கடவுளுக்கு ஒரே தலைதான். மூன்று வேதங்களை ஓவ்வொன்றாக மாற்றி போதிப்பால், சிந்தனை படைப்பாளி பிரம்மனுக்கு 3 தலைகள் நாமும் இப்படி -அப்பா, மகன், மாப்பிள்ளை என்று சந்தர்பத்துக்கு ஏற்றவாறு நடக்கும் போது, நமக்கும் பல தலைகள் -ஆனால் ஒரே உடலில் இருப்பது போல் பிரமை இல்லையா? ஆறு குணங்களை வெவ்வேறு சூழ் நிலையில் தனித்தனியாக காட்டுவதால் ஆறுமுகன்-ஏறு மயில் ஏறி விளையாடும் பால முகம், ஈசனுக்கு "ஓம்" தத்துவத்தை போதிக்கும் ஞான முகம், அடியா்கள் குறைளை தீர்க்கும் வள்ளல் முகம்... ஆகவே, எழுத்து வடிவம் இல்லாத காலத்தில் உவமையாக கூறப்பட்டது. ஒரே "உள் உணர்வால் - ஊணினை உருக்கி உள் ஒளி பெருக்கி.." உணர்வதே கடவுள். மகா விஷ்ணு பட்டு பீதாம்பரம் உடுத்தினார் என்ற கர்ப்பனையில், கடவுளே பட்டு பூச்சியை கொன்ற பட்டை உடுத்தினார், ஆகவே இந்து என்றால் பட்டு உடுத்தலாம் என்பது சரியாகுமா? ஆகவே உட் பொருளை உணர்தல் வேண்டும். அதற்கு புத்தி- ஆராய்ந்து அறியும் அறிவு திறன், சித்தி -உள்ளுணர்வால் உணர்ந்த மன முதிர்ச்சி தேவை அதே சமயம் எல்லோருக்கும் அன்பு காட்டும் கடவுளின் குணம் நம்மிடம் ஏன் இல்லை எனவே நமக்கு போலிமுகமே பொருந்தும் நாம் முதலில்....
இது போல எல்லா இந்து மத கோட்பாடுகளும். பண்டைய நாளை மொழி வரலாறு, அவை எப்படி உபயோகித்திருப்பார்கள் என்பதை அறியாமல் பிதற்றுவோறே பகுத்தறிவாளி போலிகள். உடல், மன ஆரோக்கியத்திற்க்காகவே கோயில்கள், சிலைகளுடன் (மனோதத்துவராக எண்ணி) மனம் மூலம் பேசி துன்பம் பகிர்ந்து மன நலம்பெறல், உள்ளூர் மரம்,காடுகளை, நதிகளை கடவுளாக பாவித்து இயற்கை சுற்று சூழல் பாதுகாத்தல், நலம் பேணல்... என்றார்கள். காலப் போக்கில் நாம் நேரில் காணத முன்னோ்களுக்கு திதி தறுவது போல் இன்றும் செயல்படுபவது போலவே புரிதல் இன்றி இந்து மதத்தை இழிக்கிறோம்.2,500 வருஷங்களுக்கு முன்பே உருவகம் இல்லாத கடவுளையே எங்கும் நிறைந்து என் உள்ளத்திலும் நிறைந்த நானே கடவுள்(அஹம்- நானே, பிரம்ம
- கடவுளாக, அஸ்மி-இருக்கிறேன் என்று வடமேற்கு இந்திய சமிஸ்கிருதம் பேசிய முன்னோர்கள் சொன்ன்னார்கள். 10வது நூற்றாண்டில் காஷ்மீர் சைவத்திலும், மறுபிறப்பை (ஆத்மாவை) நம்பும், உருவக கடவுளை நம்பாத புத்த மதமும் சொல்கிறது இதை உணர, வேர்-முதல்-இலை வரை: வேர் இருந்தாலே மரம், அதில் இலை இருக்கும் : (Inductive logical reasoning- from hypthesis find the theory) அனுமானம் மூலம் விதி காணல் -கண்டு பிடித்தல் என்ற புத்திசாலி தர்க்கம் மூலமே உணரமுடியும். விஞ்ஞானம், இலை இருக்க மரம் இருக்க வேண்டும், மரம் இருக்க வேர் வேண்டும் என்ற அல்காரிதம் அல்லது - விதி கூறி - பலன் காட்டல்(Detective Logic : State Theory and show examples)) தர்க்கமே பயன் படுத்துகிறது. அது உள் உணர்வை விவரிக்க முடியாது....
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.