சிந்தித்து செயல்படுங்கள்!
யாரெல்லாம்
நம்மோடு இருப்பர்
விலகுவர் என்று
காலம் முடிவு செய்வதில்லை...
அவரவர்களின் வார்த்தையும்
நடத்தையும் தான்
முடிவு செய்கிறது!
வாய் தவறி விழும்
பேச்சுக்கள்
கை தவறி விழும்
கண்ணாடியை விட
கூர்மையானது!
யாரிடம் பேசுகிறோம்
என்பதை விட
என்ன பேசுகிறோம்
என்பதை அறிந்து பேசுங்கள்!
தன்னுடைய செயலும்
வார்த்தைகளும்
மட்டும் தான் சரியென்று
வாதாடுபவர்கள் மத்தியில்
அமைதியை மட்டும்
உங்கள் ஆயுதமாக
வைத்துக் கொள்ளுங்கள்!
இதுவும் கடந்து போகும்
அது பழமொழி
இதுவும் பழகிப் போகும்
இது புதுமொழி!
ஒவ்வொரு சோகமும்
துன்பமும்
வாழ்க்கையில்
நல்ல பாடத்தை
கற்றுத் தரவே வருகிறது!
யாரும் உங்கள்
கவலைகளை பார்ப்பதில்லை
யாரும் உங்கள்
வலிகளை பார்ப்பதில்லை
ஆனால், எல்லாரும்
உங்கள் தவறை மட்டுமே
பார்ப்பர்!
மனிதனும்
வாழை மரமும்
ஒன்று தான்...
தேவைப்படும் வரை
வைத்திருப்பர்
தேவை முடிந்தவுடன்
வெட்டி வீசி விடுவர்!
சிந்தித்து செயல்படுவோம்!
கே. கோபாலன், சென்னை.