மூன்றாவது அலைக்கு இரண்டு அடுக்கு முக கவசம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2021
00:00

கொரோனா வைரசை பொறுத்தவரை, உலகம் முழுதும் வைரஸ் குறித்து எந்த தீர்மானமான முடிவுக்கும் வர முடியவில்லை; டாக்டர்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், தினமும் புதிது புதிதாக கற்றுக் கொண்டு தான் இருக்கின்றனர்.

மருத்துவ சிகிச்சை முறைகளை தாண்டி, நிச்சயம் பாதுகாப்பு தரும், பரவலைத் தடுக்கும் என்று சொல்ல முடிகிற விஷயங்கள், முக கவசம் அணிவது, கை கழுவுதல், சமூக இடைவெளி, இவை தான். வெளி காரணிகளில் இருந்து பாதுகாப்பாக இருந்தால், வைரஸ் தொற்றுவதில்லை.
நிறைய பேர், முக கவசத்தை சரியாகப் போடுவதில்லை. கர்ப்பிணிகள் முக கவசம் அணிந்து வருகின்றனர். யாரிடமாவது பேசும் போது, முக கவசத்தை கீழே இழுத்து விட்டு அல்லது முழுவதுமாக கழற்றி விட்டு பேசுகின்றனர். எதற்காக முக கவசம் அணியச் சொல்கின்றனர் என்ற கவனம் இருப்பதில்லை.

கேட்டால், 'அப்போ தான் பேசுறது கேட்கும்; முக கவசத்தை அணிந்து பேசுவது மரியாதை இல்லை' என, பல காரணங்கள் சொல்கின்றனர். கடந்த ஓராண்டாக தான் பொதுமக்கள் முக கவசம் அணிகின்றனர்.
'ஆப்பரேஷன் தியேட்டர்' அறையில் முக கவசத்தோடு, கவச உடையும் அணிந்து பல மணி நேரம் டாக்டர்கள் இருக்கின்றனர். காது கேட்காமல் எப்படி சக டாக்டர்கள், நர்சுகளிடம் ஒருங்கிணைந்து, ஆப்பரேஷன் செய்ய முடியும்? மரியாதை இல்லை; பேசினால் கேட்காது என்பது தவறு.

சிலர் முக கவசம் அணிந்தாலும் வாயையும், மூக்கையும் இறுக்கமாக மூடி அணிவதில்லை. தானாகவே நம்மை தேடி வந்து வைரஸ் தொற்றாது. நாம் தான் கண்ட இடத்தில் கைகளை தொட்டு, பின் வாய், மூக்கில் வைத்து, வைரசை உடலுக்குள் செலுத்திக் கொள்கிறோம்.
மூன்றாவது அலை எப்படி இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. இனி வரும் நாட்களில், இரண்டு அடுக்கு முக கவசம் அணிவது தான் இன்னும் பாதுகாப்பாக இருக்கும்.

டாக்டர் தீபா ஹரிஹரன்,
பச்சிளம் குழந்தைகள் சிறப்பு மருத்துவர்,
சென்னை

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahesh - Chennai,இந்தியா
11-ஜூன்-202116:58:28 IST Report Abuse
Mahesh Mr.r Sridhar....stop telling false news...read the inspiration and expiration from school books and educate urself
Rate this:
Cancel
R SRIDHAR - Coimbatore,இந்தியா
11-ஜூன்-202107:00:11 IST Report Abuse
R SRIDHAR முதலில் நாம் எப்படி சுவாசிக்கிறோம் என்று தெரிந்துகொள்ள வேண்டும், மூச்சை வெளியே விடும்போது கார்பன்-டை-ஆக்சைடை வெளியே விட்டு ஆக்ஸிஜனை உள்ளேயே இழுப்போம், இந்த மாஸ் போடுவதின் மூலம் நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியே விட்டுவிட்டு திரும்ப ஆக்சிஜனை சுவாசிக்க முடியாமல் இந்த மாஸ்கால் தடுக்கப்பட்டு விடுகிறது, ஆகவே கார்பன் டையாக்சைடையே சுவாசிக்கும்போது மேலும் பல நோய்களா இன்னும் அதிகமாகுமே தவிர குறையாது இது டாக்டர்கள் தெரிந்த உண்மை.... அடக்கி வாசிக்கிறார்கள், எட்டு மணி நேரம் 9 மணி நேம் தொடர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு இது மிகவும் கடினமான ஒன்று. இதை எல்லோரும் புரிந்துகொண்டு உஷாராகவும், கவனமாக வும் இருக்கவேண்டும் ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X