இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2021
00:00

தனிமையே, போ போ...
ஆதரவற்ற முதியோர்களுக்கான இல்லம் ஒன்றை நடத்துகிறார், என் தோழர்.
அங்கு, உணவு, உடை, உறைவிடம், மருத்துவ வசதி என கிடைத்தாலும், அவர்களின் தனிமை, பெரும் சவாலாகவே இருந்தது.
தனிமையால், அவர்களது கசப்பான கடந்த கால நினைவுகளை அசைப் போட்டதில், மனநிலையும், உடல்நிலையும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதை மாற்ற நினைத்த தோழர், முதியவர்களை அணுகி, அவர்களின் விருப்பத்துடன், அவரவருக்கு தெரிந்த கைத்தொழிலை அறிந்து, அதில் ஈடுபட வைத்து, வேலைவாய்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.
உதாரணமாக, தையல் தொழில், பனை ஓலை விசிறி செய்தல், கூடை முடைதல், பழங்கால சமையல் கற்பித்தல், பூ மாலை கட்டுதல், கம்பங் கூழ், கேழ்வரகு கூழ் தயாரித்து விற்பனை, மசாலா பொருட்கள் தயார் செய்தல், காய்கறி தோட்டம் அமைத்தல் என, பல வகையான கைத்தொழில்களை ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் செய்து வருகின்றனர், முதியவர்கள்.
இதனால், அவர்கள், தற்சமயம் தனிமையிலிருந்து விடுபட்டு, சுறுசுறுப்புடனும், மன நிம்மதியுடனும் காணப்படுகின்றனர்.
உறவினர்களால் கைவிடப்பட்டு, தன் மீதே சுய மதிப்பு குறைந்து, அத்தியாவசிய தேவைகளுக்கு, பிறரை சார்ந்திருந்த முதியவர்களை, தன் சொந்த காலில் நிற்க வைத்த தோழரை பாராட்டி வந்தேன்.
- கே. கணேஷ், கடலுார்.

தொழில் தர்மத்தை மீறலாமா?
சமீபத்தில், மாலை வேளையில், வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த என், 5 வயது மகனின் காலில் அடிப்பட்டது. அதற்காக, மருந்து வாங்க, 'மெடிக்கல் ஷாப்' சென்றேன்.
'கொரோனா' இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், தமிழக அரசு, ஞாயிறு முழு ஊரடங்கு அறிவித்திருந்தது. இதனால், மளிகைக் கடை உட்பட, அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.
மருந்தகம் செயல்படலாம் என்பதால், அது திறந்திருந்தது. நான், அங்கு சென்ற போது, சிலர், பிஸ்கட், சோப், முட்டை போன்ற பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.
அங்கிருந்த நபரிடம் விசாரித்தபோது, 'ஞாயிறு ஊரடங்கு என்பதால், 'மெடிக்கல் ஷாப்'பில், மளிகை வியாபாரம் நல்லா நடக்குதுங்க... விலையும் கொஞ்சம் கூட்டி விற்பதால், அதிக லாபம் கிடைக்குது...' என்றார்.
'இந்த கொரோனா காலத்திலும், எப்படியெல்லாம் சம்பாதிக்கிறாங்க...' என நொந்தபடியே, வீட்டிற்கு திரும்பினேன்.
- சி.கலாதம்பி, பட்டுக்கோட்டை.

உழைக்க தயாரா?
எங்கள் வீட்டில் வேலை செய்யும் பணிபெண், வேலைக்கு வர முடியவில்லை என்று, இளம் வயது பெண்ணை வேலைக்கு அனுப்பியிருந்தாள். அப்பெண், திருத்தமாக உடை அணிந்து வந்திருந்தாள்.
'நீ, படித்திருக்கிறாயா...' என்று கேட்டேன்.
'நான், பி.பி.ஏ., படித்திருக்கிறேன்...' என்றாள், அப்பெண்.
ஆச்சரியத்துடன், 'ஏன்மா இந்த வேலைக்கு வந்திருக்கிறாய்...' என்று கேட்டேன்.
'இதற்கு முன், ரத்தப் பரிசோதனை செய்யும், 'லேப்'பில் இருந்தேன். இப்போ, 'கொரோனா'வால், 'லேபரட்டரி'யை மூடி விட்டனர். அங்கு, நாள் பூரா வேலை செய்தால், மாதம், 10 ஆயிரம் ரூபாய் தான் கொடுப்பர். இப்போது, நான்கு வீடுகளில் வேலை செய்கிறேன். மாதம், 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது.
'மேலும், இதில் நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டாம்; ஓய்வும் கிடைக்கிறது. படிப்பு என்பது அறிவு வளர்ச்சிக்கு. ஆனால், உழைத்தால் தான் காசு கிடைக்கிறது. எந்த வேலை செய்தால் என்னம்மா... 'திருடக் கூடாது; பொய் சொல்லக் கூடாது; பிச்சை எடுக்க கூடாது'ன்னு எங்கம்மா சொல்லியிருக்காங்க.
'படித்ததால், நாட்டு நடப்பு தெரிகிறது. என் மகனுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க முடிகிறது. படிப்புக்கும், உழைப்புக்கும் சம்பந்தமில்லை. படித்தவர்களுக்கெல்லாம் அரசு வேலை கிடைக்க வேண்டுமென்றால், நடக்குமா... உழைப்புக்கு ஏற்ற கூலி வேண்டும் அவ்வளவு தான்...' என்று சொல்லி, தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
அவளை நினைத்து, எனக்கு பெருமையாக இருந்தது.
மரகதம், சென்னை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.K - Hamburg,ஜெர்மனி
14-ஜூன்-202118:17:08 IST Report Abuse
N.K /என், 5 வயது மகனின் காலில் அடிப்பட்டது. அதற்காக, மருந்து வாங்க, 'மெடிக்கல் ஷாப்' சென்றேன்// ஒவ்வொரு முறையும் அடிபட்டவுடன் மருந்துக்கடைக்கு செல்வதை விட, வெளிக்காயங்களுக்கான மருந்து, முதுகுவலி தலைவலிக்கான மருந்து, மருத்துவர் அறிவுரை தேவைப்படாமல் நாமே எடுத்துக்கொள்ளும் சில மருந்துகள், தைலங்கள், களிம்புகள். முதலுதவி பேட்டி, பஞ்சு போன்றவற்றை வீட்டில் எப்பொழுதும் கையிருப்பு வைத்திருப்பது நல்லது. அவ்வப்போது தேதி முடிந்துவிட்டதா என்பதை பார்த்துக்கொள்ளவும்.
Rate this:
Cancel
Vinu J - Chennai,இந்தியா
13-ஜூன்-202114:54:41 IST Report Abuse
Vinu J வீட்டு வேலை செய்ய இந்தப் பெண் தேர்ந்தெடுத்ததை நான் குறை கூற விரும்பவில்லை. ஆனால் இது தற்காலிகம் தான் என்பதை உணர்ந்து, தான் படித்த படிப்பிற்கான வேலையை அவள் நோக்கி செல்ல வேண்டும். அது அவள் படித்த படிப்பிற்கு செய்யும் நியாயம் ஆகும். தன் படிப்புக்கு எந்த வேலை கிடைக்கிறதோ அதை தேர்ந்தெடுத்து அதில் மேலும் படிக்க முற்பட்டு வாழ்க்கையில் முன்னேற நினைத்தால், அவளின் வாழ்வு எதிர்காலத்தில் பிரகாசமாக இருக்கும். அப்படி இல்லாமல் இது போதும் என்று நினைக்க ஆரம்பித்தால் வருங்கால வாழ்வில் மிகவும் வருத்தப்பட வேண்டியிருக்கும்.
Rate this:
Girija - Chennai,இந்தியா
14-ஜூன்-202121:08:59 IST Report Abuse
Girijaஇந்த பதிவே உடன்ஸ், இந்த கொரோன காலத்தில் பலர் வீட்டு வேலை பணியாளர்களை நிறுத்தி விட்டனர் .வீட்டுவேலைக்கு யாரையும் தேடி கூப்பிடுவதில்லை...
Rate this:
gayathri - coimbatore,இந்தியா
16-ஜூன்-202111:06:21 IST Report Abuse
gayathriஇது தர்களிடமே. . வீட்டு பணிக்கு ஆளில்லாமல் சிலர் கஷ்டப்படுவதை பார்க்கிறோம். அந்த பணிக்கு எப்போதுமே செல்பவர்கள் சென்றுகொண்டுதானே இருக்கிறார்கள்....
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
13-ஜூன்-202114:53:27 IST Report Abuse
pattikkaattaan முதல் கடிதமும் மூன்றாவது கடிதமும் மிக அருமை ... உழைத்து வாழவேண்டும் என்ற உயர்வான எண்ணத்தை தருகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X