கவிதைச்சோலை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2021
00:00

இருள் வாழ் இனம்...

மண் புழுக்களுக்கு
மருந்தடித்துவிட்டு
மனக்கவலையில் இருக்கிறேன்
மகசூல் இல்லையென்று!

குளங்களில்
குப்பைகளை கொட்டிவிட்டு
குழப்பத்தில் இருக்கிறேன்
குடிக்க நீர் இல்லையென்று!

தெருக்களில்
கற்களை பதித்துவிட்டு
பற்களை கடிக்கிறேன்
பாதங்கள் சுடுகிறதென்று!

கட்டப்பஞ்சாயத்துக்கு
கல்லறை கட்டிவிட்டு
காத்துக் கிடக்கிறேன்
கறுப்பு கோட்டுகளின் தீர்ப்புக்கு!

நரிக்கூட்டத்துக்கு
வரி கட்டிவிட்டு
பரிதாபத்தில் இருக்கிறேன்
பரிபாலனம் சரியில்லையென்று!

ஜாதி, மதங்களுக்கு
சந்தனம் பூசிவிட்டு
சங்கடத்தில் இருக்கிறேன்
நந்தவனம் நாறுகிறதென்று!

நலிந்தவர்களுக்கு
நன்மை செய்துவிட்டு
நாதியற்று இருக்கிறேன்
நல்லதுக்கு காலமில்லையென்று!

ஆம்...
வெள்ளி நட்சத்திர வீதிகளில்
விளக்குகளை அணையவிட்டு
இதயத்தை தொலைத்து
இருளில் நிற்கும் இனம் நான்!

நலம் தரும் என்ற
நஞ்சு கலந்த நாகரிக
கால மாற்றத்தின் கட்டாயத்தை
கை கட்டி கடந்து போகிறேன்!

நாளைய
கதிரவனின் காலைப்பொழுது
இருட்டு சமுதாயத்திற்கு
வெளிச்ச கதிர்களை வீதியெங்கும்
வீசும் என்ற நம்பிக்கையில்!

க. அழகன், விருதுநகர்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
16-ஜூன்-202113:07:28 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI தவறு செய்வது நாம். பிறரை குற்றம் சாட்டுவதில் பயன் இல்லை. மாற்றம் நம் இடமிருந்து வராத வரையில் முன்னேற்றம் நாணயம் ஏட்டளவில் தான் இருக்கும்.
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
15-ஜூன்-202103:48:37 IST Report Abuse
Manian ஓட்டை விற்று உல்லாசப் பயணம் சென்றேன், மாமூல் மூலம் வேலை பெற்றேன், வரதட்சனை வருகுதே என்று மணம் முடித்தேன், டாஸ் மார்க் சரக்கடித்து சொர்கம் போனேன், ஆனால் வேகாத சோறு, மாமூல் எதுவுமே நம்மைக் காக்காதென்று செத்தபின் அறிதலால் பயன் உண்டோ? நம்பிக்கை போதாது நாணயம் வருமா என்று வருமோ ரோட்ரி சாமியார் லோகநாதன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X