அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2021
00:00

எம். கணேசன், நாகர்கோவில்: அரசியல்வாதிகள், இன்று எப்படி இருக்கின்றனர்?
ஓட்டுப் போட்ட மனிதர்களை இளித்தவாயர்கள் என்று நினைக்கின்றனர். கட்சிகளுக்குள்ளே சவால் விட்டுக் கொள்கின்றனர்; அவர்களை பழி வாங்கிட திட்டமிடுகின்றனர். அவர்களிடையே உள்ள சண்டைகளை, அவர்களை அறியாமலேயே சந்தைக்கு கொண்டு வந்து விடுகின்றனர்!

* எம். பாண்டுரங்கன், விக்கிரவாண்டி: தே.மு.தி.க.,வின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
அமாவாசையாகவே இருக்கும்! விஜயகாந்த் போட்டியிடவே இல்லை; அவரது மனைவி தேர்தலில் நின்று, 'டெபாசிட்'டையே இழந்து விட்டார். இனி, அக்கட்சிக்கு எதிர்காலம் இல்லை!

அ. பட்டாணிதுரை, பூப்பாண்டியபுரம், ராமநாதபுரம்: 'ஏழு பேர் விடுதலையில், அரசியல் அழுத்தம் கூடாது...' என்று, தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி கூறியுள்ளாரே...
சரியானது தான்! வேண்டுதல் விடுப்போரின் குடும்பத்தில் இதுபோல் நடந்திருந்தால், வாய் திறப்பரா?

* எம். மகாலிங்கம், அனுப்பார்பாளையம், திருப்பூர்: தமிழ்நாடு, தமிழகம் எது சரி?
தமிழகம் என்பதே சரியானது. ஒரு திராவிடக் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும், இந்தியாவிலிருந்து தமிழகத்தைப் பிரித்து, தனி நாடாக்க வேண்டும் என்று ஆசை கொண்டுள்ளன. அவர்களே தமிழகத்தை, தமிழ்நாடு என்று அழைக்கின்றனர், பேசுகின்றனர், எழுதுகின்றனர். அவர்களது கனவு ஒருநாளும் பலிக்கப் போவதில்லை!

ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம், தென்காசி:'வாட்ஸ் - ஆப்'பில் தினமும், 'குட்மார்னிங்' வருமா, எத்தனை?
ஓ! தினமும் காலையிலேயே வந்து விடும்... அதில் முதலில் காலை, 5:00 மணிக்கே, 'குட்மார்னிங் ஜி' என அனுப்புபவர், நடிகர் காளிதாஸ். மேலும், 10 வாசகி, 10 வாசகர்களிடமிருந்தும், 'குட்மார்னிங்' வந்து விடும். அனைவருக்கும் பதில் அனுப்பி விடுவேன்!

என். ராகவன், திசையன்விளை:நம்முடைய முதல் எதிரி யார்?
இதில் என்ன சந்தேகம்... நம் முதல் எதிரி, சோம்பல் தான்! ஆனால், நாம் யார் யாரையோ எதிரி என, நினைத்துக் கொண்டிருக்கிறோம்!

* பொ. பாலாஜி கணேஷ், சிதம்பரம்:மத்திய அரசுடன் இணக்கமான போக்கை, தி.மு.க., கடைப்பிடிக்கவில்லை என்றால், காரியங்கள் நடக்குமா?
மத்திய அரசுடன் இணக்கமாகப் போகவில்லை என்றால், 100 சதவீத காரியங்களும் நடக்குமா என்பது சந்தேகம் தான்! ஆனால், முதல்வர் ஸ்டாலின் இணக்கமாகவே இருக்கிறார் என்று தோன்றுகிறது; சில, 'களை'கள் மட்டும் அனாவசியமாக வாய் நீட்டுகின்றனர். அவர்களை அடக்கி வைக்க வேண்டியது, முதல்வரின் கடமை!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
20-ஜூன்-202112:28:40 IST Report Abuse
D.Ambujavalli ஒரு கட்சி இணக்கமாக இருந்தால், அடிமைத்தனம். இவர்கள் அதையே செய்யும்போது இணக்கமாகிவிடும்
Rate this:
Cancel
V.B.RAM - bangalore,இந்தியா
20-ஜூன்-202106:52:48 IST Report Abuse
V.B.RAM இந்தியாவிலிருந்து தமிழகத்தைப் பிரித்து, தனி நாடாக்க வேண்டும் என்று ஆசை ??? கரெக்ட் ,அப்பத்தான் நாமும் இலங்கை தமிழர்கள் போல தெரு தெருவாக, மன்னிக்கவும், நாடு நாடாக அகதியாக சொந்த பந்தங்களை விட்டு அழியலாம்
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
22-ஜூன்-202117:09:40 IST Report Abuse
தமிழ்வேள்தனிநாடு கேட்கும் புயல்களுக்கு , இந்திய ராணுவத்தை வைத்து , பூலோக நரகம் எப்படி இருக்கும் என்பதை தெருவில் வைத்து ஷோவாக காண்பிக்கவேண்டும் .....ராணுவத்தின் இன்னொரு முகமும் தெரியும் ...தனிநாடு கேட்டால் என்ன ஆகும் என்பதும் தெரியும் .........
Rate this:
Cancel
V.B.RAM - bangalore,இந்தியா
20-ஜூன்-202106:50:23 IST Report Abuse
V.B.RAM அமாவாசையாகவே இருக்கும்??? யார் சொன்னது அக்கட்சியின் விடிவெள்ளி, விஜய் பிரபாகர் இருக்கிறாரே, வருங்கால முதல்வர், அவருடைய வாய் ஒன்று பொறாதா அடுத்த முதல்வர் ஆவதற்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X