இதப்படிங்க முதல்ல... | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
இதப்படிங்க முதல்ல...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2021
00:00

முருகதாஸ் புது திட்டம்!
விஜயின், 65வது படத்தை இயக்கயிருந்த, ஏ.ஆர்.முருகதாஸ், கடைசி நேரத்தில் விஜய்க்கு தன் கதையில் திருப்தி இல்லாததால், அந்த படத்தில் இருந்து வெளியேறினார். தற்போது அவர், கமல்ஹாசன் மற்றும் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை இணைத்து, ஒரு மெகா படம் இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். அதன் ஆரம்பகட்ட பணிகளை துவங்கியிருக்கும் முருகதாஸ், 'நான் இயக்கப் போகும் புதிய படம் சாதாரண படமல்ல; இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கும் அதிரடியான படமாக இருக்கும்...' என்றும் அடித்துச் சொல்கிறார்.
சினிமா பொன்னையா

நமீதாவின், நான்காவது முகம்!
நடிகை, அரசியல்வாதி, தயாரிப்பாளர் என, பன்முகம் காட்டி வரும், நமீதா, தற்போது, நமீதா தியேட்டர் என்ற பெயரில், ஓ.டி.டி., தளம் துவங்கியிருக்கிறார். ஆனால், 'இதில் எல்லாவிதமான படங்களையும் வெளியிடப் போவதில்லை. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் படங்களை மட்டுமே வெளியிடப்படும். மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு நிற்கவே, இந்த புதிய முயற்சி. அதோடு, இந்த தளம், சிறு பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவும் இருக்கும்...' என்கிறார். பட்டறை வாய்த்தால் பணி வாய்க்கும்!
எலீசா

குண்டக்க மண்டக்க நடிகையான, ராஷ்மிகா மந்தனா!
இதுவரை தான் நடித்த படங்கள் பற்றி மட்டுமே பேசி வந்த, ராஷ்மிகா மந்தனா, சமீபகாலமாக, அரசியல், விளையாட்டுத்துறை பிரபலங்கள் பற்றியும், அதிரடி கருத்துக்களை வெளியிடுகிறார். சில சமயங்களில் சர்ச்சை கலந்தும் பேசுகிறார். அதைப் பார்த்து, 'வளர்ந்து வரும் நேரத்தில், இதெல்லாம் தேவையா...' என்று, நலம் விரும்பிகள், 'அட்வைஸ்' கொடுத்தால், 'பரபரப்பும், பப்ளிசிட்டியும் தான், நம்மை வளர்க்கும். அதனால், குண்டக்க மண்டக்க ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இப்படி பேச ஆரம்பித்த பிறகு தான், நான் சினிமாவில் நடிப்பதையே உலகம் அறிந்தது...' என்று சொல்லி, தன் பேச்சுக்கு, நியாயம் கற்பித்து வருகிறார். சொல்லும் சொல் ஆக்கமும், கேடும் தரும்!
எலீசா

திருமணத்திற்கு தயாராகும், முதிர்கன்னி நடிகையர்!
திருமணம் செய்து கொள்ளாமல், 'பேச்சுலராக' வாழ்ந்து வரும் முதிர்கன்னி நடிகையரில், மூத்த நடிகையான, அனுஷ்காவிற்கு, 39 வயதாகி விட்ட நிலையில், இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.
அதேபோல், 36 வயதாகும், நயன்தாராவோ, இயக்குனர் விக்னேஷ்சிவனை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வருபவர்; இந்த ஆண்டில், அவருக்கு மனைவியாகி விடுவார் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரைத் தொடர்ந்து, 38 வயதாகும், த்ரிஷாவும், திருமணத்திற்கு தயாராகி விட்டார். ஏற்கனவே இரண்டு முறை, அவரது திருமணம் தடைபட்ட நிலையில், இந்த ஆண்டில், கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வது என, முடிவெடுத்து விட்டார். அந்த வகையில், அவரது சினிமா பயணத்திற்கு தடைக்கல் போடாத வரனை, அவர், ஓ.கே., பண்ணி வைத்திருப்பதாகவும், தன், 39 வயதுக்கு முன்பே, கெட்டி மேளத்தை கொட்டி விடுவார் என்றும் அவர் தரப்பில், செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன, கிடக்கிறது எல்லாம் கிடக்க, கிழவியைத் துாக்கி மனையில் வைத்த கதை!
எலீசா

செம, 'ஷாக்' கொடுக்கும் சந்தானம்!
காதல், 'த்ரில்லர்' கதைகளாக நடித்து வரும் சந்தானத்திற்கு, மாறுபட்ட, 'கெட் -- அப்'களில் தன்னை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால், தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், 'கமல், விக்ரம் நடிப்பது போன்று வித்தியாசமான, 'கெட் - அப்'களில், என்னை வெளிப்படுத்தக்கூடிய கதைகளாக சொல்லுங்கள்...' என்று கேட்கிறார். அதோடு, 'அந்த அளவுக்கு உங்களால், 'ரிஸ்க்' எடுக்க முடியுமா?' என்று கேட்டால், 'நடிப்புக்காக உடலை மட்டுமல்ல; உயிரையே கொடுக்கக் கூட தயாராக இருக்கிறேன்...' என்று செம, 'ஷாக்' கொடுக்கிறார்.
சினிமா பொன்னையா.

கறுப்புப்பூனை!
* 'ஹீரோ' மார்க்கெட், 'அவுட்'டாகி விட்டதால், கேரக்டர் நடிகராகியிருக்கிறார், முருங்கைக்காய் நடிகரின் வாரிசு. ஆனபோதும், தான் நடிக்கும் சிறிய கேரக்டர்கள் பற்றி, 'சோஷியல் மீடியா'வில் ஏகப்பட்ட, 'பில்ட் - அப்' செய்திகளை வெளியிடுகிறார். அதையடுத்து, அந்த படங்கள் வெளியாகும்போது, அவரது கேரக்டர் மிகச்சிறியதாக இருப்பதைப் பார்க்கும் நெட்டிசன்கள், 'நாலு சீனில் வருவதற்கே இப்படி, 'பில்ட் - அப்' கொடுத்தால், படம் முழுக்க வந்தால் எத்தனை அலம்பல் செய்வீர்கள். 'ஓவர் பில்ட் - அப்' உடம்புக்கு ஆகாது...' என்று, வாரிசு நடிகரின் இமேஜை, 'டேமேஜ்' செய்து வருகின்றனர். அதனால், இதுவரை தன்னைத்தானே புகழ்ந்து, செய்தி வெளியிட்டு வந்த, வாரிசு நடிகர், 'நெட்டிசன்கள், என்னை ஓவராக, 'டேமேஜ்' செய்து விட்டனர்...' என சொல்லி, தான் நடிக்கும் படங்கள் பற்றிய செய்திகளை வெளியிடுவதையே நிறுத்தி விட்டார்.
இரு நண்பர்கள்...
'மத்தவங்களைப் பார்த்து, சிலம்பு சுத்தறேன், குஸ்தி போடறேன், நீளம் தாண்டறேன், உயரம் தாண்டறேன்னு, 'ஓவர் பில்ட் - அப்' கொடுத்து, மக்களை ஏமாத்திட்டு திரிஞ்சானே, சாந்தனு... அவனை உனக்கு தெரியும் தானே...'
'கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா, பார்த்ததில்லை... அவனுக்கு என்ன இப்ப...'
'ஒரு விஷயமும் தெரியாம, சும்மா, 'போஸ்' கொடுத்துட்டும், 'செல்பி' எடுத்து, சமூக வலைதளங்களில் போட்டுட்டும் இருந்தான். அவன், சகலகலா வல்லவன் என்று நினைத்து, அவனிடம் சிலம்பம் கற்க இரண்டு பேர் வந்திருக்காங்க... அவன், 'சால்ஜாப்பு' சொல்ல, குட்டு வெளியாகி விட்டது. அடிக்காத குறையாக, திட்டிட்டு போயிட்டாங்க...' என்றான், நண்பன்.

சினி துளிகள்!
* கடந்த, 2006ல் சிவப்பதிகாரம் என்ற படத்தில் விஷாலுடன் ஜோடி சேர்ந்து நடித்த மம்தா மோகன்தாஸ், 14 ஆண்டுகளுக்கு பிறகு,மீண்டும் விஷாலின் எனிமி படத்தில், நடித்துள்ளார்.
* கேரக்டர் வேடங்களில் நடித்து வரும், சாந்தனுவை தேடி, சில, 'நெகடீவ்' வேடங்கள் சென்றபோது, அதில் நடிக்க, மறுத்து விட்டார்.

அவ்ளோதான்!

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X