சமயோசித அறிவுக்கு உதாரணம் இவர்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2021
00:00

ஜூலை  1, டாக்டர்ஸ் டே

புகழ்பெற்ற மருத்துவர், எஸ்.ரங்காச்சாரி. சென்னையில், அவருக்கு மட்டும் தான், வெள்ளைக்காரன் ஆட்சியில், 1939ல் சிலை வைக்கப்பட்டது. அச்சிலையை, சென்னை அரசு பொது மருத்துவமனையில் இன்றும் காணலாம்.
சைக்கிளில் சென்று மருத்துவம் பார்த்தவர். நிறைய பேருக்கு சேவை செய்ய வேண்டும் என்று, 'ரோல்ஸ் ராய்ஸ்' கார், பின், சிறு ரக விமானம் வாங்கி, அதில் சென்று மருத்துவம் பார்த்தார். தினமும், 18 மணி நேரம் கடினமாக உழைத்தவர்.
சென்னை எழும்பூர் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின், முதல் டெபுடி சூப்பரின்டென்ட்டாக பணியாற்றியவர். சட்டென்று முடிவுகளை எடுக்கும் திறமையும், பல சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்தவர். அவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு.
ஒருநாள், நடந்து போகும்போது, வழியில், பெரிய கூட்டம் கூடியிருந்தது. என்னவென்று விசாரித்தார்.
'மனைவிக்கு பிரசவ நேரம். பெரிய மருத்துவரிடம் போக வசதியில்லை, ஐயா...' என்று, அழுதான், கணவன்.
நிறைமாத கர்ப்பிணிக்கு, குழந்தையின் கால் வெளியில் வந்துவிட்டது. கொஞ்சம் தாமதித்தாலும், இரு உயிர்களுக்கும் ஆபத்து. சட்டென, தன் கையிலிருந்த சிகரெட்டின் முனையை, குழந்தையின் காலில் வைத்து அழுத்த, காலை உள்ளே இழுத்து, உள்ளுக்குள்ளேயே சுழன்று சுகப்பிரசவமாகி விட்டது. தாய் - சேய் இருவரும் நலம்.
இதுபோல் பல சிக்கலான பிரச்னைகளை எளிதில் தீர்த்து வைத்துள்ள, டாக்டர் ரங்காச்சாரியை, டாக்டர்கள் தினத்தன்று நினைவு கூர்வோம்!
ஜோல்னாபையன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
29-ஜூன்-202118:13:58 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI ஆங்கிேயர் காலத்திேேயே சிலை வைத்துள்ளனர் என்றால் எவ்வளவு ெரிய வித்தகர். அவர் இருந்த காலத்தில் நாம் பிறந்திருந்தால் என எண்ணி வியந்தேன். மருத்துவர்கள் கடவுளுக்கு அடுத்தபடியாக மதிக்கப்படுபவர் என்பதற்கு இலக்கணம் இவரே. கண்டிப் பாக அவர் தம் அறிவுக்கு நம் சமர்பணங்கள்.
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
29-ஜூன்-202100:51:54 IST Report Abuse
Manian பொதுவாக சிறந்த மருத்துவர்கள் -Specialists" ஒரு பொருள் சிறப்பு அறிவு- Domain Specific Intelligence " படைத்தவர்கள். இவர்களே ஸ்பெஷலிஸ்டுக்கள்- தென்னை , பனை மரம் போன்வர்கள். அப்பல்லோ மருத்துவ மனை உயிர் பாதுகாப்பாளர்கள். டாக்டர் ரங்காச்சாரி போன்றவர்கள் மிகக்குறைவே. இவர்கள் "ஒரு பொருள் பொது அறிவு ஜீவிகள்- Domain General Intelligence". இவர்கள் பல ஆராய்வத் திறமை கொண்டவர்கள் ஆலமரத்தின் நடுவே முளைத்த அபூர்வ தென்னை மரம்- இளநீரோடு நிழல் தரும் மரச்சோலை. 'எது what,எப்படி- how என்று கற்க்கும் "ஒரு பொருள் சிறப்பு அறிவு- Domain Specific Intelligence " சிறந்த மருத்துவர்களை விட, "ஏன் -why " பரவலாக ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் விடைதேடும் வித்தகர்கள். நோபல் பரிசு பெரும் பெரியோர்கள். துரதிர்ஷ்ட வசமாக, பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரிய்களுக்கும் பொதுவாக, "ஏன்" என்பதைக் கற்பிக்கும் "காணிலிருந்து விடை தேடும் காரண கண்டு பிடிப்பை கற்பிக்கும்- Inductive Resoning -திறன், முறைகள் இல்லை ஆகவே, அவர்கள் "சித்தாந்தம் சொல்லி உதாரணம் காட்டும் -Theory to example deductive logic -கல்வியே பொதுவாக எங்கும் கற்பிக்கிறார்கள்.'தீ சுட்டால் கை-கால்கள் அனிச்சை செயலாக, தற்காப்பாக உள் வாங்கும்' என்ற அறிவை உபயோகித்தார். இந்த பரந்த அறிவை சிந்தனையாளர்களாலே மட்டுமே செய்யமுடியும். இதை வள்ளுவர் " அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்." என்கிறார். டாக்டர் ரங்காச்சாரி மருத்துவ துருவ நட்சத்திரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X