கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2011
00:00

கேள்வி: இணையதளங்களில் உள்ள தகவல் பக்கங்களை ஆக்டிவ் கன்டென்ட், டைனமிக் கன்டென்ட் என்று வேறுபடுத்திக் கூறுகின்றனர். இவற்றில் என்ன வேறுபாடு உள்ளது?
-கே. நம்மாழ்வார், திருநகர்.
பதில்: இணையதளத்தில் நீங்கள் குறிப்பிடும் டெக்ஸ்ட் என்ன நோக்கத்திற்காக பார்மட் செய்யப்பட்டுள்ளது என்ற வகையிலேயே இதன் வேறுபாடான தன்மை அமைகிறது. தளத்தைப் பார்ப்பவர்களிடமிருந்து தகவல்கள் அல்லது ஆப்ஷன்களைப் பெற்று உறவாடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தால், அது ஆக்டிவ் கன்டென்ட். எடுத்துக்காட்டாக ஏதேனும் விஷயம் குறித்து கருத்து கேட்கும் தேர்தல் கட்டம், உங்களைப் பற்றிய தகவல்களைக் கேட்டு இமெயில் வசதி தரும் படிவங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். டைனமிக் கண்டென்ட் என்பது அனிமேஷன் படங்கள், சீதோஷ்ண நிலை குறித்த மேப்கள், ஸ்டாக் மார்க்கெட் குறித்து அவ்வப்போது மாறுதலைக் காட்டும் வரை படங்கள், ஸ்டிரீமிங் வீடியோ, ஆடியோ ஆகியவற்றைக் குறிப்பிடலாம். நிறைய ஆக்டிவ் கண்டென்ட் உள்ள இணைய தளம் என்றால் You Tube, My Space ஆகியவை முதல் இடத்தில் உள்ளன.

கேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரைத் திறந்தவுடனேயே அது மைக்ரோசாப்ட் வெப் தளத்தில் நுழைகிறது. இதைத் தடுக்க முடியமா? நான் முகவரியை டைப் செய்யும் வரை அது பேசாமல் இருக்க வேண்டும். இயலுமா?
-ஆர். லீலா சாமுவேல், திருப்பூர்.
பதில்: முடியும். இன்டர்நெட் எக்ஸ்புளோரை திறந்து கொள்ளுங்கள். Tools=> Internet options ஆகியவற்றை கிளிக் செய்யுங்கள். Use Blank என்பதை கிளிக் செய்து Ok சொல்லுங்கள். இனி இன்டர்நெட் எக்ஸ்புளோரரை இயக்கும்போதெல்லாம் அது எந்த தளத்தினையும் தானாகக் காட்டாது. உங்களுக்குப் பிடித்த தளத்துடன் திறக்கப்பட வேண்டுமென்றால் இந்த இடத்தில் அந்த தளத்தின் முகவரியை அமைத்து ஓகே கிளிக் செய்திடுங்கள்.

கேள்வி: ஏதாவது பைலை அழிக்க நினைத்தால் ""Recycle bin format is invalid. Do you want to empty the recycle bin?'' என்ற கேள்வி வருகிறது. இதற்கு Yes என்று கொடுத்தாலும் பயனில்லை No என்று கொடுத்தாலும் பயனில்லை. என்ன செய்யலாம்?
-இ. நாச்சியார், காரைக்குடி.
பதில்: கம்ப்யூட்டர் பூட் ஆகும் பொழுது F8 கீயை அழுத்தி MSDOS மோடில் நுழையுங்கள். Deltree /y C:/Recycled கட்டளையை கொடுங்கள்.
C: டிரைவ் போக D: ஹார்ட் டிரைவும் உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தால் Deltree /y D:/Recycled என்று கட்டளையை கொடுங்கள். இது போன்று இதர ஹார்ட் ட்ரைவ் களுக்கும் கட்டளை கொடுங்கள்.
கம்ப்யூட்டரை மறுபடியும் பூட் செய்யுங்கள்.

கேள்வி: ஒர்க் ஷீட் பிரிண்ட் செய்கையில், முதல் பக்கத்தில் அச்சாகும் தலைப்புகள் தொடர்ந்து அடுத்தடுத்த பக்கங்களிலும் வர என்ன செய்திட வேண்டும்?
-டி. கார்த்திக், கோவை.
பதில்: முதல் வரிசையில் தலைப்புகள் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். File --> Page Setup ஆகியவற்றைக் கிளிக் செய்து கொள்ளுங்கள். Sheet டேபை அழுத்துங்கள். Print Titles என்பதன் அடியில் Rows to repeat at top என்ற டெக்ஸ்ட் பாக்ஸில் $1:$1 என டைப் செய்து OK கிளிக் செய்திடுங்கள்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க்புக்கில் புதியதாக ஒர்க்ஷீட் ஒன்றை இணைக்க, Insert மற்றும் அதன்பின் Worksheet கிளிக் செய்து பெறுகிறேன். இதற்கான கீ போர்டில் உள்ள ஷார்ட் கட் கீகள் உள்ளனவா? அவை என்ன?
-டி. தியாகராஜன், தேனி.
பதில்: நீங்கள் சொல்வது சரி யான வழிதான். எக்ஸெல் தொகுப்பு பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் கூடுதலாக ஒரு ஒர்க் ஷீட் தேவை எனில் Insert மெனு சென்று அங்கு Worksheet என்னும் பிரிவினைக் கிளிக் செய்வர்கள். ஒரு ஒர்க்ஷீட் பெற இத்தனை கிளிக்குகள் தேவை இல்லை என நீங்கள் நினைப்பது தெரிகிறது. சில கீகளை அழுத்தியே அதனைப் பெறும் வழியினைக் கேட்கிறீர்கள். அடுத்த முறை எக்ஸெல் தொகுப்பில் பணியாற்றும்போது Shift + F11 அழுத்திப் பாருங்கள். உங்களுக்கு இன்னொரு ஒர்க்ஷீட் கிடைத்திருக்கும். இன்னொரு செய்தி சொல்லட்டுமா!
மாறா நிலையில், ஒர்க்புக் ஒன்றில், மூன்று வொர்க்ஷீட்கள் இருக்கும். நீங்கள் மேலே காட்டிய வழியில் புதிய ஒர்க்ஷீட்டினை இணைக்கையில், அது முதல் ஒர்க்ஷீட்டாக ஷீட் 4 என இணைக்கப்படும்.

கேள்வி: என்னுடைய கம்ப்யூட்டர் சற்று பழையது. எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். ஹார்ட் டிஸ்க்கில் காலி இடம் எவ்வளவு உள்ளது என்று எப்படி விரைவாக அறிந்து கொள்வது என்று கூறவும்.
-கா. செந்தாமரை, விழுப்புரம்.
பதில்: ஸ்டார்ட் ஹிட் செய்து கிடைக்கும் மெனுவில் மை கம்ப்யூட்டர் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கின் அனைத்து ட்ரைவ்களும் காட்டப்படும். இதன் மீது ரைட் கிளிக் செய்தால், கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். அடுத்து காட்டப்படும் விண்டோவில், ஜெனரல் என்ற டேப் தேர்ந்தெடுத்தால், அந்த ட்ரைவில் எவ்வளவு இடம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது, எவ்வளவு இடம் மீதம் உள்ளது என்பது, சொற்களிலும், பை சார்ட் எனப்படும் வரைபடமாகவும் காட்டப்படும். டிரைவில் மீதம் இருக்கும் இடம், இளஞ்சிகப்பு நிறத்தில் காட்டப்படும்.

கேள்வி: என்னிடம் உள்ள போட்டோக்களுக்கு தலைப்பு கொடுக்க ஆன்லைனில் ஏதேனும் தளங்கள் உள்ளனவா? இலவசமாக இந்த சேவையைத் தரும் தளங்கள் தேவை. உதவவும்.
-டி. சுந்தரேசன், சென்னை.
பதில்: உங்களுடைய நீண்ட கடிதத்தினைச் சுருக்கித் தந்துள்ளேன். மைக்ரோசாப்ட் பெய்ண்ட் மற்றும் வேர்ட் பயன்படுத்தி, உங்கள் போட்டோக்களுக்கு தலைப்பைத் தரலாம். இருப்பினும் நீங்கள் கேட்டுக் கொண்டபடி ஆன்லைனில் இதற்கான புரோகிராம்களைத் தேடிய போது, Rofbot (Online). Captioner (Online). Picasa (Offline) என மூன்று தளங்கள் கிடைத்தன. இதில் கேப்ஷனர் என்று இரண்டாவதாகத் தரப்பட்டுள்ள தளம் சிறப்பாக இயங்குகிறது. இதனைப் பயன்படுத்த http://bighugelabs. com/captioner.php. என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். பின்னர் பிரவுஸ் பட்டன் அழுத்தி, நீங்கள் தலைப்பினைக் கொடுக்க விரும்பும் போட்டோவினை அப்லோட் செய்திடவும். பின்னர் தலைப்பிற்கான டெக்ஸ்ட் பாக்ஸில், நீங்கள் விரும்பும் தலைப்பினைத் தரவும். இந்த தலைப்பு எந்தவிதத்தில் இருக்க வேண்டும் என்பதனையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் Speech Balloon, Though Bubble, and Action என மூன்று வகை உண்டு. பின்னர், கீழாகச் சென்று Create என்பதில் கிளிக் செய்திடவும். இந்த தலைப்பு உருவாக்கப்பட்டவுடன், நீங்கள் விரும்பிய வகையில் தலைப்பும், போட்டோவும் காட்டப்படும். தலைப்பை இழுத்து வந்து போட்டோவில் நீங்கள் விரும்பும் இடத்தில் விட்டுவிடவும். அடுத்து மீண்டும் கீழாகச் சென்று, Finish பட்டனை அழுத்தவும். அடுத்து சேவ் பட்டன் அழுத்தி, உங்கள் கம்ப்யூட்டரில் எந்த ட்ரைவில், போல்டரில் சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனைக் குறிப்பிட்டு ஓகே கிளிக் செய்திடவும்.
நான் இந்த கேப்ஷனர் உள்ள தளத்தினை உங்களுக்குப் பரிந்துரைக்க, அதன் எளிய வழியே காரணம். மேலும் மற்ற இரண்டில் இதில் உள்ள சில வகைகளும் வசதிகளும் இல்லை. ஆனால் இதில் எழுத்து வகைகள் அதிகம் தரப்படவில்லை. நிறைய வகைகளில் எழுத்துக் கள் தேவை என்று நீங்கள் விரும்பினால், மற்ற இரண்டையும் பயன்படுத்தலாம்.

கேள்வி: இணையத்தில் பக்கங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், சில தளங்களை என்னை அறியாமலேயே மூடிவிடுகிறேன். பின் முகவரி தேட சிரமப்படுகிறேன். தளங்களை லாக் செய்திட ஏதேனும் வழி உள்ளதா?
-சி. ரா. இசையரசன், கம்பம்.
பதில்: உங்கள் கடிதத்தினை பிரவுசர் வடிவமைப்பாளர்கள் பார்த்தால், நிச்சயம் லாக் செய்திடும் வசதியை அடுத்த பிரவுசர் பதிப்பில் தருவதற்கு முயற்சி செய்வார்கள். தற்போதைக்கு இந்த வசதியை எந்த பிரவுசரும் தருவதாகத் தெரியவில்லை. இருப்பினும், உங்களை அறியாமல் மூடிய தளத்தினைத் திறக்க, பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் குரோம் பிரவுசர்களில் கண்ட்ரோல்+ஷிப்ட்+டி (Ctrl+Shift+D) அழுத்துங்கள். இறுதியாக மூடப்பட்ட, (தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ) தளம் திறக்கப்படும். மீண்டும் இந்த கீகளை அழுத்தினால், அதற்கு முன் மூடப்பட்ட தளம் திறக்கப்படும். ஆனால் பிரவுசரை மூடிய பின்னர் மூடிய தளங்களை இந்த கீகள் கொண்டு திறக்க முடியாது.

கேள்வி: மெகாபைட்ஸை கிகா பைட்ஸாக மாற்றுவதற்கு ஏதேனும் பார்முலா உள்ளதா? இருந்தால் இரண்டு வழிகளுக்கும் தரவும்.
-மீரா கண்ணன், கோவை.
பதில்: இதற்கென்ன பார்முலா தேடுகிறீர்கள். சின்ன கணக்கு போதுமே. 1024 எம்பி = ஒரு கிகா பைட். எனவே 1 எம்பி = 1/1024 ஜி.பி.=0.0009765625 ஜிபி. ஒரு கணக்கு போடுவோமா! 16 எம்பி = 0.0009765625 x 16 ஜிபி. அதாவது 0.015625 ஜி.பி.
இதெல்லாம் எதற்கு மீரா கண்ணன். கூகுள் சர்ச் பாக்ஸ் செல்லுங்கள். அதில் Convert 128 Mb to Gb என்று கட்டளை கொடுங்கள். உடனே விடை கிடைக்கும். இதே போல மற்ற அலகு மாற்றங்களுக்கு கூகுள் தேடல் தளத்திலேயே கொடுக்கப்பட்டுள்ள கன்வர்டர் கால்குலேட்டர் பயன்படுத்துங்கள்.

கேள்வி: டிஜிட்டல் கேமராவிலிருந்து படங்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்ற முயற்சிக்கை யில், “not TWAIN compliant” என்று செய்தி வருகிறது. அதன் பின்னர் எதுவும் செய்திட முடியவில்லை. இதற்கு என்ன காரணம்? என்ன பிரச்னையை இது குறிக்கிறது?
-கா. சிவப்பிரகாஷ், சென்னை.
பதில்: இது ஒரு தொழில் நுட்ப ரீதியாக வரையறை செய்யப்பட்ட ஸ்டாண்டர்டைக் குறிக்கிறது. கம்ப்யூட்டர் ஒன்றை ஸ்கேனர், டிஜிட்டல் கேமரா போன்ற சாதனத்துடன் இணைப்புக் கொள்ள வைக்கும் தொழில் நுட்பம் இது. பொதுவாக, அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில் நுட்பத்தினைக் கொண்டிருக்கும். இல்லை எனில் அதனுடன் தரப்பட்டிருக்கும் சிடியில் அதற்கான சாப்ட்வேர் இருக்கும். நீங்கள் உங்கள் கேமராவுடன் தரப்பட்டிருக்கும் சிடியைப் பயன்படுத்தி, கேமராவினை உங்கள் கம்ப்யூட்டருடன் தொடர்பு கொள்ளும் வழியை அமைத்திடவும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
palanisamy - karur,இந்தியா
19-ஜூன்-201106:58:15 IST Report Abuse
palanisamy sir internet explorer ல் load ஆகும்போது loading ஆவது தெரிவது இல்லையே அதற்கு யாதேனும் வழி உள்ளதா
Rate this:
Share this comment
Cancel
நந்தினி c - THIRUKKOVILUR,இந்தியா
18-ஜூன்-201123:08:37 IST Report Abuse
நந்தினி c நான் முதலில் ஒரு folder ஐ hide செய்து பின்பு unhide செய்தேன்.. இப்போது அந்த folder சட்ட்று மங்கலாக தெரிகிறது... அதை சாதாரணமாக தெரிய வைக்க என்ன செய்ய வேண்டும்?
Rate this:
Share this comment
Cancel
nandhini c - திருக்கோவிலூர்,இந்தியா
18-ஜூன்-201123:02:30 IST Report Abuse
nandhini c நான் என்னுடைய folder ஒன்றிற்கு password கொடுத்து திறக்க விரும்புகிறேன். அதாவது என்னுடைய கவனம் இல்லாமல் எவரும் திறக்க இயலாதபடி செய்ய விரும்புகிறேன்.. இதற்கு என்ன செய்வது??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X