கொய்யாப்பழத்தில் விதைகளை குறைக்கும் வழி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2021
00:00

குறைந்த முதலீடு செய்து நல்ல லாபத்தை தரக்கூடிய பழவகைகளில் கொய்யாவும் ஒன்று. மழை குறைவான, உப்பு மிகுந்த மற்றும் வளமில்லாத மண், நீர் தேங்கிய நிலம், வறண்ட நிலம் எதிலும் வளரக்கூடியது. ஆண்டில் இரு முறை காய்க்கும்.

தரை மட்டத்திலிருந்து ஒருமீட்டர் வரை உயரம் வரை கிளைகள் விரியக்கூடாது. பின்னர் 3 அல்லது 4 கிளைகளை சரியான இடைவெளியில் அனுமதிக்கலாம். அடிப்பக்கத்தில் தோன்றும் கிளைகளை நீக்க வேண்டும். இளந் தண்டுகளிலேயே பூப்பதால் செப்டம்பர், அக்டோபர் மற்றும் பிப்ரவரி, மார்ச்சில் கவாத்து செய்ய வேண்டும்.

வயதான, உற்பத்தி திறன் இழந்த மரங்களை தரையிலிருந்து 30 செ.மீ உயரத்தில் மட்டமாக வெட்டி விட வேண்டும். அவற்றிலிருந்து தழைத்து வரும் புதிய கிளைகளில் பூக்கள் தோன்றும். இலைகள் சிறுத்தும் நரம்புகளுக்கிடையே மஞ்சள் நிறமாகவும் கணுக்களிடையே இடைவெளி குறைந்திருந்தால் துத்தநாத சத்து குறைபாடு உள்ளது. 560 கிராம் துத்தநாக சல்பேட் மற்றும் 350 கிராம் சுண்ணாம்பு இரண்டையும் 72 லிட்டர் நீரில் கரைத்து மரங்களின் மேல் 15 முதல் 30 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

இலைகள் வெளிறியும் தீய்ந்தும் இருந்தால் தலா 25 கிராம் துத்தநாக சல்பேட், மக்னீசியம் சல்பேட், மாங்கனீசு சல்பேட் மற்றும் 12.5 கிராம் காப்பர் சல்பேட் மற்றும் பெரஸ் சல்பேட் ஆகியவற்றை 5 லிட்டர் நீரில் கரைத்து புதிய தளிர்கள் தோன்றும் தெளிக்க வேண்டும். ஒரு மாதம் கழித்து மறுமுறை பூக்கும், காய் பிடிக்கும் தருணத்தில் தெளிக்கலாம்.
வளர்ச்சியின்றி பழங்கள் வெடித்து காணப்பட்டால் ஒரு லிட்டர் தண்ணீரில் 3 கிராம் போராக்ஸ் மருந்தை கரைத்து தெளிக்க வேண்டும்.

பழங்களில் அதிக அளவு விதைகள் இருந்தால் சந்தையில் குறைந்த விலையே பெறுகின்றன. விதைகளின் எண்ணிக்கையை குறைத்து தரத்தை மேம்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 100 மி.கி., சாலிசிலிக் அமிலம் கலந்து மலராத பூ மொட்டுகளின் மீது தெளிக்கலாம். பூ மொட்டுக்களை இத்திரவத்தில் நனைத்தும் எடுக்கலாம்.

- மாலதி, உதவிபேராசிரியர்
விஜயகுமார், ஒருங்கிணைப்பாளர்,
வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம்
97877 13448

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
16-ஜூலை-202116:39:48 IST Report Abuse
Vittalanand சிவப்பு கொய்யாவை கண்டறிவது எப்படி ?
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
18-ஜூலை-202113:27:47 IST Report Abuse
pradeesh parthasarathyவாங்கி வெட்டி பார்க்கவும் ......
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் பழங்கள் தரமாக விளைய நல்ல எளிமையான வழிகளை சொல்லியுள்ளார்கள் பாராட்டுவோம் அப்படியே விளைச்சலை சற்றும் சேதாரமுமின்றி நகர மொத்த வியாபாரிகளிடம் கொண்டு சேர்க்கவும் அவர்கள் அவசரமாக பழுக்க வைக்க ரசாயனங்களை உபயோகிக்காமல் இயற்கையாகவே பழுக்க விட்டு நுகர்வோருக்கு கிடைக்க செய்யவும் அரசும் சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமே சென்னையில் ரசாயம் ட்ரீட்மெண்ட் இல்லாத ஆப்பிள் முதல் வாழை மா கொய்யா பழங்கள் கிடைப்பதில்லை என்ற சோகநிலை பத்திரிகைகளுக்காவது தெரியுமா?
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-ஜூலை-202122:53:45 IST Report Abuse
தமிழவேல் பிரிட்டன் ஆப்பிள் வருதாம். அங்கெல்லாம் 6 மாசம் பத்திரப்படுத்தி வைக்கிறானுவோ. வெட்டினால் உள்ளே விதைகள் முலை விட்டு இருக்கு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X