மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2021
00:00

ஜூலை 23, உலக மன அழுத்தம் தணிப்பு தினம்

* உலகில் பலருக்கு உடல்நல கோளாறுகள் வர காரணமாக இருப்பதில் முதலிடம் வகிக்கிறது, மன அழுத்தம். அன்றாட வாழ்வில், அவ்வப்போது ஏற்படும் மன அழுத்தத்தால் பிரச்னை இல்லை. ஆனால், அதுவே அதிகரிக்கும்போது, தலைவலி முதல் இதயநோய் வரைக்கும் வர காணமாகிறது.
வேலை நேரத்தில் எழும் மன அழுத்தம், வாழ்நாள் ஆயுளை, 33 ஆண்டுகள் குறைத்து விடுவதாக, ஹார்வார்டு மற்றும் ஸ்டான் போர்டு பல்கலை கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
* அன்றாட வாழ்வில் ஏற்படும் மன அழுத்தம், பதற்றம் போன்றவைகளை தவிர்க்க, எளிய வழிமுறைகள் உள்ளன. மன பதற்றங்களை தவிர்க்க, நேர நிர்வாகம் முக்கிய பங்காற்றுகிறது.
எந்த வேலையாக இருந்தாலும், குறிப்பிட்ட நேரத்தில் துவங்கி, முடிக்க பழகுங்கள். தினசரி, வார, மாத வேலை அட்டவணையை தயார் செய்து, அதன்படி வேலை பார்க்க முயலுங்கள்
* வேலையின் இடையே ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை, சிறு இடைவெளி விடுங்கள். காரணம், '60 - 70 நிமிடங்கள் மட்டுமே, ஒரு வேலையை நம் மூளை தொடர்ந்து செய்யும். அதன்பின், சோர்ந்து விடும்...' என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்
* வேலை நேரத்தில் ஏற்படும், 'டென்ஷன்' மூலம், படபடப்பு குறைய, ஒரு நிமிடம் வரை ஆகும். அந்த ஒரு நிமிடம் எதையும் செய்யாமல் மனதை நிதானமான நிலைக்கு கொண்டு வந்து, 5 நொடிகள் ஆழ்ந்து மூச்சை இழுத்து விடும், ஆழ் மூச்சு பயிற்சியை செய்யுங்கள். 'டென்ஷன்' குறையும், பின் வேலையை தொடருங்கள்
* ஒரு நேரத்தில், ஒரு வேலை மட்டுமே பாருங்கள். பல வேலைகளை செய்து, 'ஹீரோ' ஆக வேண்டாம்
* மன அழுத்தம் அதிகரிக்கும் நேரத்தில், மனதிற்கு பிடிக்கும் இசையை கேளுங்கள்
* 'நம் மனதில் உள்ள நம்பிக்கையற்ற எண்ணங்களும், மன அழுத்தம் ஏற்பட காரணம். அதை அன்றாடம் செய்யும் உடற்பயிற்சி மூலம் தடுக்கலாம்...' என்கின்றனர், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள்
* நீங்கள், காலை நேரத்தில் செய்யும், 20 - 30 நிமிட உடற்பயிற்சி, நாள் முழுக்க உங்களை உற்சாக மூடில் வைத்திருக்கும்; மன இறுக்கத்தை தளர்த்தும், மூளை தடுமாற்றம் ஏற்படாமல் உற்சாகமாக இயங்கி, மன அழுத்தத்தை தவிர்க்கும்
* எப்போதும் பிரச்னையுடன் அலையாதீர்கள். அவைகளை நண்பர்கள் அல்லது உங்கள் மீது அக்கறை உள்ளவர்களிடம் மனம் விட்டு பேசி, பிரச்னைகளை சரி செய்ய பாருங்கள்
* நம் மூளையில் சுரக்கும், 'செரடோனின்' அளவை பொறுத்தே, நம் மூடும் இருக்கும். தினசரி நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள், 'செரடோனின்' அளவை நிர்ணயிக்கின்றன. வைட்டமின், 'பி' உள்ள, சிறு தானிய உணவு மற்றும் பயிறு வகைகளில், இதை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது.
பாதாம், வால்நட் மற்றும் முந்திரி பருப்பு, பசலைக் கீரை, புரோக்கோலி, ஒமேகா - 3 உள்ள உணவு வகைகள், நரம்புகளையும், மூளையையும் சுறுசுறுப்பாக வைத்து, மன அழுத்தத்தை வராமல் தடுக்கும்
* நிம்மதியான ஆழ்ந்த துாக்கம், மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கும். அன்றாட வாழ்வில் நேர்மறையான சிந்தனைக்கு திரும்ப, 7 - 8 மணி நேர துாக்கம் தேவை
* 'ஒருநாளைக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு, மட்டுமே மொபைல்போன், கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களை பயன்படுத்துங்கள். காரணம், நீங்கள் எந்தளவுக்கு அவைகளை பயன்படுத்துகிறீர்களோ, அந்தளவுக்கு அது உங்களின் துாக்கம், நினைவுத்திறன், செயல் திறன் போன்றவைகளை பாதித்து, மன அழுத்தத்தையும் அதிகரிக்கும்...' என்கின்றனர், அமெரிக்காவின் கனெக்டிக்கட் ஸ்கூல் ஆப் மெடிசன் ஆராய்ச்சியாளர்கள்.

கோவீ. ராஜேந்திரன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
21-ஜூலை-202103:53:11 IST Report Abuse
Manian இன்னும் சில வழிகள்: உங்களைப் பற்றி தவறான செய்திகள் பரப்புவர்கள் மூலம் வரும் மன அழுத்தம்: சொல்பவர்கள் வேலை தந்தமுதாலாளி என்றால் மட்டுமே அதை ஆராய வேண்டும். நேரடியாக பணிவாக காரணங்களை அறிய வேண்டும். அதே போல நீங்கள் படியளக்கும் ஆட்களின் குறைகளையும் காரணங்களை அறிய வேண்டும். மற்றவர்களின் கருத்துக்களை தள்ளி விடவேண்டும். (2) மன அழத்தம் வரும்போது, 5-10 நிமிடங்கள் வெளியில் உள்ள பச்சை மரங்கள், அணில்களின் சேட்டைகள், பறவைகளின் கூவல்களை கேளுங்கள். காட்டிற்கு செல்பவர்கள் இதன் படியே புத்துணர்ச்சி பெறுவதாக ஆராய்ச்சிகள் கண்டுள்ளன. இயற்கை சூழ் நிலை மனதை சாந்தப் படுத்துகிறது. (3) பிறரை குறை கூறித்திறிபவர்கள், தன் நம்பிக்கை இல்லாதவர்கள்,சுய பச்சாதாபிகள்,தங்கள் குறைகளுக்கு பிறறை குறை கூறித்திரிபவர்களை ஒதுக்கி விடுங்கள் உண்மையான நண்பர் / நண்பி ஒருவர் மிஞ்சினார் என்றாலும் நீங்கள் அதிர்ஷ்ட சாலிகளே (4) நீங்கள் உங்கள் குறைகளை ஆண்டவனிடம் கண் மூடி மனதில் முறையிடுங்கள்.இதுவே தியானம். குறைகளை நீக்க முடியாவிட்டாலும், குறை தீர்க்கும், தாக்கத்தை குறைக்கும் வழி தென்படும். கோயில்ள்,சர்சு, மசூதிகள் அதனாலேயே ஏற்படுத்தப் பட்டன வீணாக புலம்பி திறியாதீர்கள்.
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
18-ஜூலை-202102:15:58 IST Report Abuse
Manian விட்டுப் போனவை:(1) அவசரப்பட்டு திருமணம் செய்யாதீர்கள். மனக்கோளாறு, உடல் கோளாரு இல்லாதவர்களா, சுயநலமியா, பொறாமை பிடித்தவரா, சர்வாதிகாரியா, பிறர் தன்னைப் புகழ வேண்டும் என்பவரா, தன்நம்பிக்கை இல்லாதவரா என்ற முழு விவரங்களை ரகியமாக விசாரிக்காமல் திருமணம் செய்யாதீர்கள். 75% மனப்பிரச்சினைகள் தீரும்(2) எந்த வேலை உங்கள் திறமைக்கு ஏற்றது என்பதை நம்பகமான(போலி கோட்டா வியாதிகள் இல்லை) என்று தெரிந்த பின் வேலை தேடுங்கள்(3) திறமை வேறு, போலி கல்லூரி வேறு என்பதை உணருங்கள். கல்வி இயற்கை - உலகை -பூமி,காற்று, ரசாயனம் .. என்பதைக்கற்று உயிரோடு இருக்கவே,வேலைக்கு இல்லை(மருத்துவம், சட்டம் காணக்காயம் போன்றவை சிறப்புக் கல்வி, கோட்டா உதவாது) (4)சமூக சேவை கல்வி பேச்சுக்கள் மூலம் சுய திறமைகளை வளர்த்துக் கொள்ளு்கள்- நேரம் தவறாமை, சொன்ன சொல் காப்பாற்றல், பணிவு, தேவையானால்் தலைமை தா்குதல், இணைந்து பணியாற்றல், மேலும் புதியன கற்கும் ஆவல்,விடாமுயற்ச்சி... இவையே சிறந்த வேலைகளைத் தரும். அமெரிக்காவில் கோடீஸ்வரானாவது இப்படியே (5) உங்கள் நண்பர்களுக்கும் பொதுவாக உங்களைப் போலவே அனுபவம் இல்லாத புத்திசாலித்தனம்தான் இருக்கும் ஆகவே அவர்கள் ஆலோசனையும் ஆபத்தானே (6) எப்போது, எங்கு ஏன் கோபம் வருகிறது என்பதை பதிவு செய்து வெட்கப்படாமல் சிறந்த மனநல ஆலோசகரை, வருமுன் காப்போனாக கொண்டால் 95% மன அழுத்தம் இருக்காது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X