சொட்டுநீரில் சேப்பங்கிழங்கு கெட்டியான லாபம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2021
00:00

மதுரை திருமங்கலம் செட்டிகுளத்தைச் சேர்ந்த விவசாயி சூரையா. சொட்டு நீர் பாசனத்தின் மூலம் சேப்பங்கிழங்கு சாகுபடி செய்து லாபம் ஈட்டுகிறார்.
நான்கு ஏக்கரில் கோழிக்கொண்டை, தக்காளி, நிலக்கடலை மற்றும் சேப்பங்கிழங்கு சாகுபடி செய்கிறார். பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டுநீர் மானியம் பெற்றுள்ளதை விவரிக்கிறார்.

முதலில் பார் பாராக நீர் பாய்ச்சி சேப்பங்கிழங்கு அறுவடை செய்தேன். நீர் பாய்ச்சுவது பெரிய வேலையாக இருந்தது. திருமங்கலம் தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரபா, துணை தோட்டக்கலை அலுவலர் காசிமாயன் மூலம் பிரதமரின் நுண்ணீர் பாசனதிட்டத்தை பற்றி அறிந்து கொண்டேன்.

அவர்களை அணுகிய போது ஒன்றரை ஏக்கரில் சொட்டுநீர் பாசனம் அமைக்க வழிகாட்டினர். செலவில் ரூ.65ஆயிரத்து 400 மானியமாக கிடைத்தது. முக்கால் ஏக்கரில் சோதனை முறையில் சேப்பங்கிழங்கு விதைத்தேன். 120 மூடை கிழங்கு அறுவடையானது. 72 கிலோ எடையுள்ள மூடை விலை ரூ. 2500 வீதம் நல்ல லாபம் கிடைத்தது.

தற்போது ஒரு ஏக்கரில் 600 கிலோ சேப்பங்கிழங்கு விதைத்து சொட்டுநீர் அமைத்துள்ளேன். 25வது நாள் முளைவிட்டு வளர்ந்தது. 3 நாளைக்கு ஒருமுறை சொட்டுநீர் பாய்ச்சுகிறேன். இப்போது தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் இருக்கிறது.

20ம் நாளில் விதைக்கிழங்கை பாதிக்காமல் ரவுண்ட் அப் களைக்கொல்லி அடித்த பின் 4 மாதங்களாக களையே எடுக்கவில்லை. இன்னும் 45 நாட்களில் அடுத்த அறுவடைக்கு தயாராகி விடும். ஒரு விதையிலிருந்து ஒன்றரை கிலோ விதைக்கிழங்கு கிடைக்கும்.

ஏக்கருக்கு ஏழரை டன் எடையுள்ள கிழங்கு கிடைக்கும். இதுவரை செய்த செலவு ரூ. ஒன்றரை லட்சம். மூடைக்கு ரூ.2500 கிடைத்தால் கூட செலவு போக ரூ.ஒன்றரை லட்சம் லாபம் கிடைக்கும். சொட்டுநீர் பாய்ச்சுவதால் வேலையாட்கள் செலவும் குறைவு.

உரத்தையும் தண்ணீருடன் கலந்து கொடுப்பதால் அந்த வேலையும் மிச்சம். களைகளும் அதிகம் வளர்வதில்லை. இந்த முறை பயனுள்ளதாக இருப்பதால் கோழிக்கொண்டை செடிக்கும் நிலக்கடலை செடிக்கும் சொட்டுநீர் அமைத்துள்ளேன் என்றார். இவரிடம் பேச: 99526 13386.

- எம்.எம்.ஜெயலெட்சுமி
மதுரை

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
21-ஜூலை-202113:02:46 IST Report Abuse
Sridhar இத பத்தியெல்லாம் டிவி ல விவாதம் நடத்தமாட்டானுங்களே? விவசாயம் உண்மையாலுமே மிகுந்த லாபகரமானது, அதை எப்படி சரியான முறையில் செய்வது என்பது தெரிந்தால். புதிய முறைகளை கடைபிடிக்கும்போது, வேலைப்பளுவும் குறைகிறது. விவசாயத்தில் பொதுவாக, பூமிதான் எல்லா வேலையும் செய்கிறது. விவசாயி சும்மா காவல்தான் காக்கிறான். அதுக்கே இவ்வளவு பில்டப்பு. இதுல, அரசு மானியங்கள், இலவச மின்சாரம்னு ஏகப்பட்ட சலுகைகள் வேறு வருமான வரி கிடையாது விவசாயத்தை நினைச்சாலே செம ஜாலியா இருக்கு. வேலைய விட்டுட்டு உடனே விவசாயம் பண்ண போலாம்னு ஆசையா இருக்கு. பிறகு ஏன் இப்போ இருக்குற விவசாயிகள் எல்லாம் எப்ப பாத்தாலும் பொலம்பிகிட்டே இருக்காங்க?
Rate this:
Dinesh - ,
21-ஜூலை-202116:22:02 IST Report Abuse
DineshYou can leave your job and can do agriculture, but when you see from other side opposite side will always be green. First you should have own land otherwise buying land now is costly and you cant run life with small land. Second climate will play big role like unexpected cyclones will destroy your crop and even new diseases through various insects. Third need to wait for longer period to reap benefits. Fourth you should be financially strong to manage your expenses because rate for agriculture products is not fixed. Fifth labor shortage is more and initially need more investment to automate some repeated manual work. Finally free electricity is provided to encourage small farmers, if farmers need to pay electricity bill then sure there will not be any profit. Now agriculture is becoming costly business due to we need to apply latest technology and have more acres to cultivate which normal farmers cant compete with giant farmers....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X