இயற்கை எப்போதும் கைகொடுக்கும் சாதித்து காட்டும் தென்னை விவசாயி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
00:00

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி குலசேகரன்கோட்டை சிறுமலை அடிவாரத்தில் சுமதி, துரைசாமி தம்பதியின் 20 ஏக்கர் நிலமுள்ளது. இங்கு இயற்கை முறையில் தென்னை, மா விவசாயம் செய்து சாதித்து காட்டியுள்ளார் சுமதி.
எம்.எஸ்சி., விவசாயம் எம்.பில் படித்திருந்தாலும் சொந்த நிலத்தில் விவசாயம் செய்வதையே பெரிதும் விரும்புகிறார் சுமதி. அவர் கூறியது: 2011ல் நிலம் வாங்கினோம். மலையடிவாரம் என்பதால் பள்ளம் மேடாக இருந்தது. சீரமைக்க விவசாய பொறியியல் துறையை அணுகினோம். மிகக்குறைந்த வாடகையில் மணிக்கணக்கில் புல்டோசர் எடுத்து முதலில் 10 ஏக்கர் நிலத்தை சீரமைத்தோம்.
அதில் குட்டை, நெட்டை, செவ்விளநீர் தென்னை ரகங்கள், இமாம்பசந்த், கல்லாமை, காசாலட்டு, பாலாமணி மா ரகங்களை நட்டு பராமரிக்கிறோம். சப்போட்டா ரக மாம்பழக் கன்றுகள் புதிதாக நட்டுள்ளோம். மாசா கம்பெனியின் ஜூஸ் தயாரிப்புக்காக பிரத்யேகமாக 2500 மாங்கன்றுகள் நட்டு ஓராண்டாகிறது. காய்ப்புக்கு வர இரண்டாண்டுகளாகும். அறுவடை செய்து கம்பெனிக்கு அனுப்புவதாக ஒப்பந்தம் செய்துள்ளோம்.
மாமரத்திற்கு தலா 10 கிலோ மாட்டுச்சாணம், முக்கால் கிலோ வேப்பம்புண்ணாக்கு கலந்தும் தென்னைக்கு 25 கிலோ ஆட்டுச்சாணம், 2 கிலோ வேப்பம்புண்ணாக்கு கலந்து ஆண்டுக்கு இருமுறை உரமிடுகிறோம். சிறு மரங்களுக்கு குறைந்தளவே உரமிடுகிறோம். உரமிடும் போது மரத்தை சுற்றி வட்டமாக வெட்டுவதில்லை. எல்லா வேர்களும் காயப்படும் என்பதால் ஒருபக்கமாக முதல் முறையும் எதிர்பக்கமாக அடுத்த முறையும் குழிவெட்டி உரமிடுகிறோம்.
மலையடிவாரம் என்பதால் தொடர் மழை பெய்தால் நிலத்தில் இருந்து மழைநீர் வழிந்தோடி விடும். 2 ஏக்கருக்கு ஒரு கரை வீதம் அமைத்து பாத்தி பாத்தியாக மழைநீரை தேக்கி வைப்பதால் நிலத்துக்குள் ஊடுருவி செல்கிறது. ஆறு மாதமாக கிணற்று தண்ணீர் அப்படியே நிரம்பியுள்ளது. போர்வெல் மூலம் 10ஏக்கருக்கு சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சுகிறோம். ஒரு மணி நேரத்தில் 8 லிட்டர் கிடைக்கும் வகையில் சொட்டு நீர் அமைத்துள்ளோம்.
நாட்டு மரங்களில் இருந்து தேங்காயாகவும் செவ்விளநீர் மரத்தின் காய் இளநீருக்கும் விற்கிறோம். 60 நாட்களுக்கு ஒருமுறை 4000 காய்கள் வெட்டுவோம். ஒரு மரத்தில் மாதம் ஒரு குலை வீதம் 25 காய்கள் கிடைக்கும். 50 செம்மறியாடுகள், 120 நாட்டுக்கோழி ரகங்களை வளர்க்கிறோம். இயற்கையின் மடியில் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்தின்றி நிலமும் மரங்களும் சுகமாக வளர்கின்றன. அடுத்த 10 ஏக்கர் நிலத்தை விவசாய பொறியியல் துறையின் புல்டோசர் மூலம் சீரமைத்து வருகிறோம். விரைவில் பழமரக்கன்றுகள் நட உள்ளோம் என்றார்.
இவரிடம் பேச: 98401 72113.
- எம்.எம்.ஜெயலெட்சுமி,
மதுரை

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Panchalingam - Toronto,கனடா
23-ஜூலை-202107:02:12 IST Report Abuse
Siva Panchalingam அற்புதமான ஒரு தொழில் சாதனை. தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளுக்கு பின்னாலே திரிவதனைவிட இது ஒரு மகத்தான தொழில் துறை.
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
23-ஜூலை-202105:52:57 IST Report Abuse
Manian அண்ணே கோவிந்தே, இப்ப நம்ம தலைவேறுக்கு இந்த செய்தியை உடனே தெரியப்படுத்தணும். தலைவருக்குத்தான் இந்த பத்து ஏக்கர் சொந்தம். திருடர்கள் களகத் தலைவேறுன்னா சும்மாவா? தம்பி தளவாய், இங்கே பொறம்போக்கு நாம் எடுத்துகிட்ட 25 ஏக்கர்லே பங்கு தரலைன்ன கோவம் இப்ப பறந்தே போகும் நிலத்தடி நீர் திருடி சக்ரவர்த்திக்கு இது தெரியுமுன்னாடி, மேலே சொல்லிறணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X