பணத்துக்கு கோவில்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
00:00

தெய்வங்களுக்கு கோவில் இருப்பது, இயற்கை. பணத்துக்கு கோவில்கள் இருக்கிறதா என்றால், தமிழகத்தில் அதுவும் இருக்கிறது.
செல்வத்தை ஒன்பது வகையாக பிரித்து, நவநிதிகள் என்பர். இவர்களில், குபேரனின் கணக்குப் பிள்ளைகளான, சங்கநிதி, பதுமநிதியை பெரம்பலுார் மாவட்டம், செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் மற்றும் கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில்களில் தரிசிக்கலாம்.
பிரம்மாவின் மகன் விச்ரவசு, சந்தர்ப்பவசத்தால், கேகயி என்ற அரக்கியை மணந்தார். இவர்களுக்கு ராவணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை, விபீஷணன், குபேரன் ஆகியோர் பிறந்தனர். முதல் மூவரிடமும், தாய்க்குரிய அரக்க குணம் மேலோங்கி இருந்தது. மற்றவர்கள், தந்தையைப் போல் சாத்வீகமாக இருந்தனர்.
இவர்களில், குபேரன் சிவபக்தனாகி, அவரது அன்பைப் பெற்றான். இருவரும் நண்பர்கள் ஆகும் அளவுக்கு பக்தி முற்றியது. தன் நண்பனுக்கு, சங்கநிதி, பதுமநிதி, நீலநிதி, மச்ச நிதி, முகுந்த நிதி, கஸ்யப நிதி, நந்த நிதி, கற்பக விருட்சம், காமதேனு ஆகிய நவநிதிகளை வழங்கினார், சிவன்.
சங்கநிதி - பணம்; பதுமநிதி - கல்வி அறிவு; நீல நிதி - கடல் வளம்; மச்ச நிதி - அதிர்ஷ்டம்; முகுந்த நிதி - நெய், வெண்ணெய், தயிர் வளம்; நந்த நிதி - பசு வளத்தை குறிக்கும். கற்பக விருட்சம் - மரங்கள், செல்வத்தையும், காமதேனு - லட்சுமி கடாட்சத்தையும் தரும்.
கஸ்யப நிதி - இந்த செல்வங்களை முறையாக செலவிட அருள்புரியும்.
இவர்களில், சங்கநிதி, பதுமநிதிக்கு முக்கிய கோவில்களில் சிலை இருக்கும். இவர்கள், குபேரனின் இருபுறமும் அமர்ந்திருப்பர். குபேரனின் கணக்குப்பிள்ளைகள் என, வர்ணிக்கப்படுவர்.
சங்கநிதியின் கையில், உழைத்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு ஆதாரமான வெற்றிச்சங்கும், பதுமநிதியின் கையில், படித்தவர்களுக்கு பரந்த மனம் வேண்டும் என்பதற்குரிய, விரிந்த தாமரையும் உள்ளன. இந்த நிதிகளை அடைவது அவ்வளவு எளிதல்ல. கடும் உழைப்பும், புத்திசாலித்தனமும், வள்ளல் தன்மையும் உள்ளவர்களே, இதை அடையலாம்.
பெரம்பலுார் - திருச்சி சாலையில், 15 கி.மீ., துாரத்தில் ஆலத்துார். அங்கிருந்து பிரியும் சாலையில், 8 கி.மீ., துாரத்தில் செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, குபேரன் அவரது மனைவி சித்ரலேகா மற்றும் கணக்குப்பிள்ளைகளுடன் தரிசனம் தருகிறார். தவிர, இங்குள்ள துாண்களில், 12 ராசிகளுக்கும் உரிய, குபேர சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
சங்கநிதி, பதுமநிதியை பெரிய சிலை வடிவில், கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் தரிசிக்கலாம்.

தி. செல்லப்பா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்
29-ஜூலை-202103:15:21 IST Report Abuse
கதிரழகன், SSLC குபேரன் தாய் அசுரர் இல்லியே? வேற யாரோ, முனிவர் மகள் ன்னு நினைவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X