இதப்படிங்க முதல்ல...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
00:00

குற்றப்பரம்பரையை துாசி தட்டும், பாரதிராஜா!
கதாசிரியர், ரத்னகுமார் எழுதிய, குற்றப்பரம்பரை என்ற கதையை, படமாக்க வேண்டும் என்பது, பாரதிராஜாவின், 20 ஆண்டு கனவு. அந்த கதையை படமாக்க, சிவாஜிகணேசன், விஜயகாந்த் என, பல நடிகர்களை அணுகினார். ஆனபோதும், அந்த படம் துவங்கப்படவே இல்லை. அதையடுத்து, குற்றப்பரம்பரை கதை சம்பந்தமாக, இயக்குனர் பாலாவுடன் ஏற்பட்ட சலசலப்பால், அதை அப்படியே கிடப்பில் போட்டிருந்த, பாரதிராஜா, மீண்டும் அந்த கதையை துாசி தட்டி, அதில் நடிப்பதற்கு, விஜய் சேதுபதியை அணுகியிருக்கிறார். இந்த முறையாவது, குற்றப்பரம்பரையை படமாக்கி, தன், 20 ஆண்டு கனவை நனவாக்கிக் கொள்வாரா பாரதிராஜா... பொறுத்திருந்து பார்ப்போம்.
— சினிமா பொன்னையா

நிவேதா தாமஸ், பிடிவாதம்!
டோலிவுட்டில் கதாநாயகியாக கொடியேற்றி வரும், நிவேதா தாமஸை, மற்ற ஆந்திர ஆவாக்காய்களைப் போன்று, கவர்ச்சி குதிரையாக்க முயற்சி எடுத்த இயக்குனர்கள், தோல்வியடைந்தனர். காரணம், தன்னுடன் நடிக்கும் மற்ற, 'ஹீரோயின்'கள் மார்தட்டி நிற்கும்போது, நிவேதாவோ, கணுக்கால் கவர்ச்சிக்கு கூட, 'செக்போஸ்ட்' வைத்து விடுகிறார். மாறாக, 'உடல் கவர்ச்சியை காண்பிக்காமல், கண்களால், உதடுகளால், வசீகர கவர்ச்சியை வெளிப்படுத்தி, ரசிகர்களை கவருவதே என் பாணி...' என்று, கவர்ச்சிக்கு அணை போட்டு விடுகிறார். நிவேதா தாமஸின் இந்த பிடிவாதம் காரணமாக, சில கமர்ஷியல் இயக்குனர்கள், 'உங்களது கண்ணும் வேண்டாம், உதடும் வேண்டாம்...' என்று, அவருக்கு, 'குட் பை' சொல்லி, ஓட்டம் பிடிக்கின்றனர். ஆகாத பஞ்சாங்கத்துக்கு, அறுபது நாழிகையும் தியாஜ்யம்!
\— எலீசா

'பிகினி' வேடம் கேட்கும், ஸ்ரேயா!
'பிகினி' உடையணிந்த தன்னை, கணவர், அலேக்காக துாக்கி, 'போஸ்' கொடுக்கும், 'ரொமான்டிக்' புகைப்படங்களை, 'சோஷியல் மீடியா'வில் தட்டிவிடும், ஸ்ரேயா, அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு, சினிமாவில் நடிக்க இப்போதும் தான் தயாராக இருப்பதாக இயக்குனர்களுக்கு செய்தி அனுப்புகிறார். அதைக்கேட்டு, 'திருமணமான நடிகையை, 'டீன் - ஏஜ்' நடிகை போன்று தோலுரித்தால், விமர்சனங்கள் வருமே...' என்றதற்கு, 'நான், அப்படி நடிப்பதை பார்த்து ரசிக்க, என் கணவரே, ஒரு ரசிகராக காத்துக் கொண்டிருக்கும்போது, விமர்சனங்களைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்... மீண்டும், 'பிகினி' நடிகையாக என்னை திரையில் கொண்டு வாருங்கள்...' என்று, இயக்குனர்களை நச்சரித்து வருகிறார். ஊருக்கு எல்லாம் ஒரு வழி; உனக்கு ஒரு வழியா?
எலீசா

தனுஷின், தெலுங்கு மோகம்!
சமீபகாலமாக, தனுஷ் நடிக்கும் படங்கள், 100 கோடி வசூலை ஈட்டி தந்தபோதும், கோலிவுட்டில், அவருக்கான சம்பளம் எகிறுவதில்லை. அதேசமயம், அவரை தெலுங்கு படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ள தயாரிப்பாளர்கள், தமிழில் அவர் வாங்கும் சம்பளத்தை அப்படியே இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, தெலுங்கு சினிமா மீது ஆர்வத்தை அதிகப்படுத்தி வருகின்றனர். இதனால், கைவசம் உள்ள தமிழ் படங்களை வேகவேகமாக முடித்துக் கொடுத்து, டோலிவுட் சினிமா கதவை திறக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.
— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!
பண்ணைப்புர இசையமைப்பாளரின் இளைய வாரிசு, மதம் மாறி திருமணம் செய்து கொண்டதை அடுத்து, அந்த மதம் குறித்த தகவல்களை, 'சோஷியல் மீடியா'வில் வெளியிட்டு வந்தார். இதற்கு, அவரது ரசிகர்கள் மத்தியில் இருந்து, கடுமையான எதிர்ப்பு எழுந்து, 'சோஷியல் மீடியா'வில், 'பாலோ' செய்து வந்த, மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள், அவரை பின்தொடர்வதை குறைத்து விட்டனர். அதிர்ந்துபோன இசை வாரிசு, இசையின் மூலம் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர் என்ற அடிப்படையில், மத பிரசாரம் செய்வது தவறு என்பதை உணர்ந்தார். தற்போது, 'சோஷியல் மீடியா'வில், மதம் சம்பந்தப்பட்ட கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்தி விட்டார்.
'யுவன் தம்பி, இங்க வா... நுாலகத்துக்கு வந்தமா, புத்தகம் எடுத்தமா படித்தமான்னு இருக்கணும். அதை விட்டு, நுாலகமே உன் பரம்பரை சொத்து மாதிரி நினைச்சுட்டு, இங்குள்ள புத்தகங்களில், உன் சொந்த கருத்துகள, பக்கத்துக்கு பக்கம் கிறுக்கி வைத்திருக்கிறியே... இது கொஞ்சம் கூட நல்லால்ல... இப்படியே செஞ்சுட்டு இருந்தா, உன் உறுப்பினர் அட்டையை பறிமுதல் செய்து, நுாலகத்து பக்கமே தலை வைத்து படுக்க முடியாம செஞ்சுருவேன்... ஜாக்கிரதை. இனியாவது, அனைவருக்கும் பொதுவான புத்தகங்களில் கண்டபடி கிறுக்குவதை விட்டுடு...' என்று காட்டமாக பேசினார், நுாலகர்.

சினி துளிகள்!
* சமீபகாலமாக, இசை ஆல்பங்கள் தயார் செய்து, அதில் தானும் நடிக்கத் துவங்கி இருக்கிறார், யுவன் சங்கர் ராஜா.

அவ்ளோதான்!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
30-ஜூலை-202120:02:04 IST Report Abuse
Natarajan Ramanathan பாரதிராசா ஏன் குற்றப்பரம்பரை கதையை தன் மகன் மனோஜை வைத்து எடுக்க கூடாது?
Rate this:
Cancel
Ravi Shankar - Chennai,இந்தியா
26-ஜூலை-202104:19:22 IST Report Abuse
Ravi Shankar ஒருவர் ஒரு துறையில் ஜொலித்து நிற்கிறார் என்றால் அந்த தொழிலில் அவர் கொண்ட ஆர்வமும் விடா முயற்சியும் காரணம். ஜொலித்தபின், மற்ற விஷயங்களை பற்றி கருத்து சொல்வதன் மூலம் முக்கால்வாசி பேர், தங்களுக்கு தெரியாத விஷயங்கள் குறித்த அறியாமையை வெளிப்படுத்துவிடுகின்றனர். எப்படி ஒரு அரசியல்வாதிக்கு இசை கோர்ப்பு பற்றி தெரியாதோ, அதே போல், பொது வெளியில் கருத்து பதிவிடுதல் எல்லாருக்கும் இயல்பாய் வராது. எல்லா பாடல்களையும் பிடித்துத்தான் இசை அமைப்பாளர்கள் போடுகிறார்கள். மக்களுக்கு பிடித்தது மட்டுமே ஹிட் அடிக்கிறது. ரசனைகள் வேறுபடுகின்றன. இசைக்கே ரசனை ஒற்றுமை இல்லாத பொது சொந்த மதம் சார்ந்த விஷயங்களில் ஒன்று படுவது இயலாத ஒன்று. நம் வேலையினால் பெருமை வர வேண்டுமே அன்றி, நம் சொல்வதெல்லாம் சரியான விஷயமாகாது. இந்த தெளிவு வெகு சிலருக்கு மட்டுமே புரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X