திண்ணை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
00:00

ஜூலை - 27 அப்துல் கலாம் நினைவு தினம்

ம.வீரகோபாலன் எழுதிய, 'வள்ளுவர் வழியில், அப்துல் கலாம்' நுாலிலிருந்து:
நீர்மூழ்கி கப்பலில் பயணம் செல்ல வேண்டும் என்ற, அப்துல்கலாமின் நீண்ட நாள் ஆசை, குடியரசு தலைவராக இருந்தபோது நிறைவேறியது.
பொதுவாக குடியரசு தலைவராக இருப்பவர்கள், கடினமான பயணத்தை மேற்கொள்ள மாட்டார்கள். ஆனால், கலாம், பிப்., 13, 2016ல், 'ஐ.என்.எஸ்., சிந்து ரக்சக்' கடற்படை நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்தார்.
கடற்படை வீரர்கள், கடலுக்கு அடியிலிருந்து ஏவுகணையை ஏவி, செயல்படுத்திக் காட்டினர். அது, இலக்கை, குறிப்பிட்ட நேரத்தில் தாக்கியதை பார்த்தார். வீரர்களை மிகவும் பாராட்டினார். மூன்று மணி நேரம், கடலுக்குள் துணிச்சலாக சென்று பார்வையிட்டதை, அனைவரும் பாராட்டினர்.

கலாமிடம், 'ஐயா, பயங்கரவாதிகள் யார்... அவர்கள், நம் தேசத்தை சேர்ந்தவர்களா...' என, கேட்டாள், ஒரு மாணவி.
'பயங்கரவாதிகள் பற்றிய செய்தி, இப்பிஞ்சு உள்ளத்திலும் சென்றடைந்திருக்கிறதே...' என்று திடுக்கிட்டார், கலாம்.
இருப்பினும், நிதானமாக அச்சிறுமியை அருகில் அழைத்து, 'உன் கேள்விக்கு, நம் காவியமான ராமாயணம், மகாபாரதம் தான் நினைவுக்கு வருகிறது. ராமாயணத்தில், தெய்வீக நாயகன் ராமனுக்கும், அசுரகுல வேந்தன் ராவணனுக்கும் யுத்தம் நடந்தது. இறுதியில், யார் வென்றனர்... ராமன் தான் வென்றார்.
'மகாபாரதத்தில், குருஷேத்திர போர் நடந்தது. தருமத்திற்கும், அதர்மத்திற்கும் நடந்த போரில், இறுதியில் எது வெற்றி பெற்றது... தர்மம் தான் வென்றது.
எந்த தீய சக்திகளும் வென்றதாக சரித்திரம் கிடையாது. எனவே, பயங்கரவாதங்கள் அடங்கிவிடும். நீ அதைப்பற்றி சிந்திக்காமல், கல்வியில் கவனம் செலுத்து...' என்றார்.

அப்துல் கலாம், 1990ல், கண் சிகிச்சை பெறுவதற்காக, மதுரையில் உள்ள புகழ்மிக்க கண் மருத்துவமனைக்கு, தன் பாதுகாப்பு அதிகாரியுடன் வந்தார்.
அந்த அதிகாரி வேறொரு வேலையாக சென்று விட, கலாமை பரிசோதித்த மருத்துவருக்கு, இவர் யாரென்று தெரியாது. கலாமும் தன்னைப் பற்றி எதுவும் கூறவில்லை. 'சிகிச்சை மேற்கொள்ள முன்பணம் கட்ட வேண்டும். அதனால், கட்டிவிட்டு வாருங்கள்...' என்று, கூறினார்.
வரிசையாக நின்று, பணம் கட்டுமிடத்தில் காசோலையை நீட்டினார், கலாம்.
'பணமாக தான் கட்ட வேண்டும்...' என, கூறி விட்டனர், அவர்கள்.
கலாமிடம், கையில் அவ்வளவு பணம் இல்லை. மீண்டும் மருத்துவரிடம் சென்று, 'நான் அவ்வளவு பணம் எடுத்து வரவில்லை...' என்று, கூறினார்.
அப்போது கூட, தான் யாரென்று கூறவில்லை. சற்று யோசித்து விட்டு, சிகிச்சை மேற்கொள்ளுமாறு கூறினார், மருத்துவர்.
சிகிச்சை முடிந்து, அவரும் சென்று விட்டார். அதன்பின், அவர் திரும்பிய செய்தி அறியாத பாதுகாப்பு அதிகாரி, அவரை பார்க்க மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அப்போது தான், மருத்துவருக்கு, தன்னிடம் சிகிச்சைப் பெற வந்தவர், ஏவுகணை அணு விஞ்ஞானி அப்துல் கலாம் என்பது, தெரிய வந்தது.
உடனே, கலாமுக்கு கடிதம் எழுதி, மன்னிப்பு கேட்டார், மருத்துவர்.

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
31-ஜூலை-202116:18:43 IST Report Abuse
Natarajan Ramanathan ஆனால் கரு.பழனியப்பன் கலாம் ஜனாதிபதி மாளிகையில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றியதை தவிர வேறுஎன்ன செய்தார் என்று கேட்கிறானே.
Rate this:
Cancel
JAGADEESANRAJAMANI - SHARJAH,ஐக்கிய அரபு நாடுகள்
26-ஜூலை-202117:07:37 IST Report Abuse
JAGADEESANRAJAMANI இந்திய தலை மகன் ,ஏவுகணை நாயகன் ஐயா அப்துல் கலாம் அவர்கள் என்றும் மக்கள் மனதில் நிறைந்திருப்பார்கள்.ஜைஹிந்த்.
Rate this:
Cancel
Ramachandran K - Chennai,இந்தியா
25-ஜூலை-202114:10:23 IST Report Abuse
Ramachandran K அப்துல் கலாம் அவர்கள், அவ்வளவு பணம் இல்லையென்றவுடன், இலவச சேவை பிரிவிற்கு செல்கிறீர்களா என்று கேட்டனர். மகிழ்ச்சியுடன் அங்கு சென்று கண் பரிசோதனை செய்து கொண்டார். வெகு நேரமாக அவரை காணாததால், பதறிப்போன பாதுகாப்பு அதிகாரி, வெகு நேரத்திற்க்கு பிறகு, கண்டுபிடித்து அழைத்து சென்றார், இது அந்த மருத்துவமனை, தங்கள் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X