வானமே எல்லை! | கண்ணம்மா | Kannamma | tamil weekly supplements
வானமே எல்லை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2021
00:00

எல்.புவனேஸ்வரி, மெஹந்தி டிசைனர்; சமூக வலைதளங்களை தொழில் களமாகக் கொண்டு சாதிக்கும் கோவை, போத்தனுார் பெண்மணி!

கலையும் நானும்
பூ, இலை, மாங்காய் வடிவங்களால் அழகூட்டும் அரபிக்; கோடு, கட்டம், புள்ளி இம்மூன்றையும் மையமாக கொண்டு மயில், ஜிமிக்கி உள்ளிட்ட வடிவங்களில் மிளிரும் பாந்தினி; வட்டம், கோடு, முக்கோணம், 'வி' வடிவங்களால் நடனம் மற்றும் மரம் ஏறுதலைச் சொல்லும் வார்லி ஆர்ட்...

மரங்கள், இந்து பெண் கடவுள், ஆண் - பெண் பொம்மை வடிவங்களில் கலம்காரி; மணமேடை, ஆடைகள், மணப்பெண்ணின் நெற்றிச்சுட்டி முதல் பாத அலங்காரம் வரை நேர்த்தியாகச் சொல்லும் ராஜஸ்தானி டிரெடிஷனல் ஆர்ட்; 3டி ஆர்ட்...இப்படி என்னோட 'மெஹந்தி' பட்டியல் நீளமானது!

வீட்டுத் தோட்டத்துல பறிக்கிற மருதாணி இலையை பொடியாக்கி இயற்கை வண்ணம் சேர்த்து, கண்ணாடி காகித கோனில் அடைத்து மெஹந்திக்கு பயன்படுத்துறேன். காதல் நினைவுகள், கருவிலிருக்கும் சிசுவின் உருவம் இதையெல்லாம் தத்ரூபமாக பதிவு செய்ற 'கான்டெம்பரரி ஆர்ட்' பயிற்சியில இப்போ தீவிரமா இருக்குறேன்; நானும் பயிற்சி கொடுக்குறேன். மெஹந்தி ஸ்டுடியோ துவக்குறது என் எதிர்கால திட்டம்.

சிறப்பு பணி: அன்பிற்குரியவர்களின் புகைப்படங்களை அசலாய் கைகளில் பதிக்கும் ஸ்டென்சில் ஆர்ட் - ரூ.500

போன்: 97916 77790

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X