இதப்படிங்க முதல்ல... | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
இதப்படிங்க முதல்ல...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
00:00

யோகிபாபுவை பறக்க விட்ட, சர்வதேச அங்கீகாரம்!
'லெட்டர் பாக்ஸ்' என்ற இணையதளம், 2021ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், உலக அளவில் வெளியான படங்களில் சிறந்ததாக, 25 படங்களை பட்டியலிட்டுள்ளது. இதில், இந்தியாவில் இருந்து தேர்வான, ஐந்து படங்களில், தனுஷ் நடித்த, கர்ணன், யோகிபாபு நடித்த, மண்டேலா ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களும் அடங்கும். தன் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்ததால், சொல்ல முடியாத சந்தோஷத்தில் பறந்து கொண்டிருக்கும் யோகிபாபு, 'நானும் உலக தர நடிகராயிட்டேன்ல...' என்று, தன் சக நடிகர்களிடம் சொல்லி, மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார்.
— சினிமா பொன்னையா

'கில்மா' நடிகையான, பூனம் பாஜ்வா!
கவர்ச்சி கதாநாயகியிலிருந்து இறங்கி, 'கிளுகிளு' நடிகையாக, சில படங்களில் நடித்த, பூனம் பாஜ்வாவிற்கு, ஒரு படம் கூட கைவசமில்லை. ஆனபோதும், சினிமா தன்னை கை விடாது என்ற நம்பிக்கையில், 'பிட்' பட நடிகையருக்கு இணையான புகைப்படங்களை வெளியிட்டு, பட வேட்டையை முடுக்கி விட்டுள்ளார். அதோடு, அவரது உடற்கட்டும், 'கில்மா' பட நடிகையர் சைசுக்கு மாறி விட்டது. இதனால், அவர் வாய்ப்பு கேட்டு செல்லும் இடங்களில் எல்லாம், அவரை மேலும் கீழும் பார்த்து, 'உங்களுக்கேற்ற, 'கில்மா' படம் எடுக்கும்போது சொல்லி அனுப்புகிறேன்...' என்று, கிண்டலாக சொல்கின்றனர், இயக்குனர்கள். அதைக் கேட்டு     அதிர்ச்சியடையும் நடிகை, 'கவர்ச்சி என்ற பெயரில், 'ஓவர் டோஸ்' கொடுத்து, 'கில்மா' நடிகையாகி விட்டேனே...' என்று, புலம்பி வருகிறார். எண்ணினேன் ஒரு கோடி, இழப்பது அறியாமல்!
— எலீசா

பலான நடிகையாக மாறிய, இனியா!
வாகை சூடவா இனியாவுக்கு, சமீபகாலமாக, சரியான பட வாய்ப்புகள் இல்லை. இதனால், தன் தாய்மொழியான மலையாளத்தில், மம்மூட்டி, மோகன்லால் போன்ற சீனியர் நடிகர்களின் படங்களில் நடித்து வந்ததால், அவரை அம்மா நடிகையாக சித்தரித்து விட்டனர். இதனால், 'ஷாக்' ஆகிப்போன இனியா, தன் இளவட்ட இமேஜை கட்டிக்காக்க, தற்போது, பலான நடிகையரே தோற்றுப் போகும் அளவுக்கு, 'டாப் ஆங்கிள்' கவர்ச்சி படங்களை வெளியிட்டு, 'பவர்புல் வேடங்கள் கொடுத்தால், பயராக பற்றி எரியவும் நான் தயாராக இருக்கிறேன்...' என சொல்லி, பட வேட்டையை முடுக்கி விட்டுள்ளார். எடுத்து வைத்தாலும், கொடுத்து வைக்க வேண்டும்!
எலீசா

கொடூரமாக மாறும், பிரபுதேவா!
இயக்குனராக பாலிவுட்டை கலக்கி வந்த, பிரபுதேவாவிற்கு, சில படங்கள் அதிர்ச்சி தோல்வியாகி விட்டது. அதனால், கோலிவுட்டில் விட்டுச்சென்ற நடிப்பை தொடர வந்திருப்பவர், 'பாசிட்டீவ் ஹீரோ' என்பதை கடாசி விட்டு, மிரட்டலான, கொடூரமான கதைகளின் நாயகனாக நடிக்க தயாராகி விட்டார். 'இப்படியெல்லாம் நடித்தால், உங்களது நடனத்தை ரசித்தவர்கள் வெறுத்து விடுவரே...' என்று, இயக்குனர்கள் கேட்டால், 'இத்தனை காலமும் ரசித்தவர்கள், இனிமேல் வெறுக்கட்டுமே. அந்த, 'பீலிங்சை'யும் கொஞ்சம் உணர்ந்து பார்ப்போமே...' என்று சொல்லி சிரிக்கிறார்.
— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!
சண்டக்கோழி நடிகர், ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி, அதன்பிறகே, 'ஹீரோ' ஆனார். அதனால், படப்பிடிப்பு தளங்களில், அடிக்கடி இவரும் இயக்குனராகி விடுகிறார். அதோடு, இயக்குனர்கள் சொல்வதைப்போல் அல்லாமல், தன் விருப்பத்திற்கே நடிக்கிறார். இதனால், அவர் படங்களில் பணியாற்றும் இயக்குனர்களுக்கும், சண்டக்கோழிக்கும், படப்பிடிப்பு தளத்தில் சண்டையாகி விடுகிறது. இந்த பிரச்னைக்காகவே, இனிமேல், தன் படங்களில், புதுவரவு மற்றும் தன் சொல்லுக்கு கட்டுப்படும் இயக்குனர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுப்பது என்று முடிவெடுத்துள்ளார், சண்டக்கோழி.
'ஏம்பா, விஷால்... நீ, ஒரு காலத்துல, உள்ளூர் கட்டட மேஸ்திரிக்கு உதவியாளரா இருந்திருக்கலாம். அதுக்காக, மேஸ்திரியாகவே மாறிட்டதா அர்த்தமில்ல. காலம் மாறிடுச்சு... இது, புது, 'புராஜெக்ட்!' பல மாடிகள் கொண்ட, 'ஷாப்பிங் மால்' கட்டப் போறோம்.
'இங்க, நீ சித்தாள் தான். மேஸ்திரி மாதிரி, 'இந்த செங்கல் வாங்கணும், இந்த சிமென்ட் நல்லது, இப்படிதான் தளம் அமைக்கணும்'ன்னு ஆலோசனை சொல்வதோ, மற்ற தொழிலாளிகளை உன் இஷ்டத்துக்கு வேலை வாங்குவதோ கூடாது.
'என்ன புரிந்ததா... இல்லாவிட்டால், நீ வேறு இடத்துக்கு போவது நல்லது...' என்று கடிந்து கொண்டார், கான்ட்ராக்டர்.

சினி துளிகள்!
* மலையாளத்தில் வெளியான, லுாசிபர் என்ற படத்தை, தெலுங்கில், சிரஞ்சீவியை வைத்து, 'ரீ - மேக்' செய்கிறார், மோகன்ராஜா. இந்த படத்தில், தங்கை வேடத்தில் நடிக்கிறார், நயன்தாரா.
* அவன் இவன் படத்தை அடுத்து, எனிமி என்ற படத்தில், விஷாலும்,- ஆர்யாவும் இணைந்து நடித்துள்ளனர்.

அவ்ளோதான்!

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X